#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Thursday, October 31, 2013

முகநூலில் தீபாவளி வாழ்த்து அட்டை

தீபாவளி வாழ்த்து அட்டைகள் முகநூல் வழியாக உங்கள் நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் உங்கள் முகநூல் முகப்பு அட்டையாகவும் வைக்கலாம்

கீழ்க்கண்ட முகவரிக்கு செல்லுங்கள்
http://fbapplica.in/fbcover/Diwali-Wishes-Banner.php

எந்த படம் வேண்டுமோ அந்த படத்திற்கு செல்லுங்கள். அந்த படத்தின் மீது கிளிக் செய்து அடுத்துவரும் கேள்விகளுக்கு ஆமாம் என்பதினை தேர்வு செய்யுங்கள்.

பின் உங்கள் முகநூல் பக்கத்திற்கு வந்து மாற்றப்பட்ட உங்கள் முகப்பு அட்டையினை சேமிக்க Save என்ற பட்டனை அழுத்துங்கள்

உங்கள் பக்கத்திற்கு யார் வந்தாலும் அவர்களுக்கு உங்களின் தீபாவளி வாழ்த்துக்களை கூறுங்கள்


Designed by http://vmfoundation.in Students


ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Saturday, September 29, 2012

அண்டத்தின் அற்புதங்கள்- ஆன்டிராய்டு மென்பொருள்

Learn Univerce in TAMIL


வணக்கம் நண்பர்களே!!


எங்களின் மூன்றாவது ஆன்டிராய்டு மென்பொருளாக அண்டத்தின் அற்புதங்கள் என்ற வானியல் பற்றிய தகவல்களை தமிழில் உள்ளடக்கிய மென்பொருளை வெளியிட்டுள்ளோம்.
பயன்படுத்திவிட்டு  கருத்துங்கள்

இணைப்பு
https://play.google.com/store/apps/details?id=com.visualmediatech.vmspace

=----------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Thursday, August 9, 2012

ஆன்டிராய்டில் மென்பொருட்களை நிறுவுவது எப்படி?

என்னதான் ஆன்டிராய்டு அலைபேசி இயங்குதளம் கட்டற்ற மென்பொருட்களாக வந்தாலும் வந்தது இன்று நோக்கியா, மைக்ரோசாப்டு, ஐபேடு புகழ் ஆப்பிள் நிறுவனத்திற்கும், பெரிய கலக்கமே வந்துவிட்டது.


பின்னே இருக்காத, அலைபேசியை தன்னுள்ளே வைத்திருந்த பிளாக்பெர்டி கூட ஆடிப்போய்விட்டது. அந்த அளவிற்கு ஆன்டிராய்டு எங்கும் எப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாம் இப்போது ஆன்டிராய்டு நிறைய பேர் வாங்கினாலும் அதில் மென்பொருட்களை தேவைப்படும் மென்பொருட்களை எப்படி நிறுவுவவது என்று தெரியவில்லை.

அதைத்தான் பார்க்கப்போகின்றோம். ஆன்டிராய்டு போன்ற நவீன நுட்ப(ஸ்மார்ட) அலைபேசிகள் மிகப்பெரிய பலம் வாய்ந்தவை. ஆனால் அவற்றினை நாம் பயன்படுத்துவதில்தான் அதன் பணியே இருக்கின்றது.

எனவே ஆன்டிராய்டில் மென்பொருட்களை நிறுவுவது எப்படி என்று பார்க்கலாம்.

அதற்கு முன்னர் எல்லா இயங்குதளங்களுக்கும் இயங்கும் சில நீட்சிகள் (Extensions) உள்ளன. 


மைக்ரோசாப்ட் . இயங்குதளம் - EXE


மைக்ரோசாப்ட் எம்படட் - .CAB


லினக்ஸ் - sh

இப்படி பலவகையான நீட்களில் இயங்கும். அதேபோல் ஆன்டிராய்டில் இயங்கும் மென்பொருட்களுக்கு சில நீட்சிகள் உள்ளன. 


அதுதான் .APK - Android Package (APK) file

சரி இந்த மென்பொருளை நேரடியாக இயக்க முடியுமா? முடியும் என்றாலும் பாதுகாப்பு காரணம் கருதி கூகிள் நிறுவனம் பொதுவான ஒரு இடத்தில் பதிந்துவைத்துள்ளது. எந்த மென்பொருட்கள் வேண்டும் என்றாலும் அங்கே இருந்து பெற்றுக்கொள்ளலாம். அந்த பொதுவான இடத்திற்கு பெயர்தான் Market தற்போது Play Store. 

சரி, கூகிள் நிறுவனம் ஏன் இப்படி செய்கிறது.தேவைப்படுபவர்கள் எல்லாம் அப்படியே நேராக இன்ஸ்ட்டால் செய்யலாமே என்கிறீர்களா?
ஆனால் அங்கேயும் சில பிரச்னைகள் உள்ளது. என்ன தெரியுமா? பாதுகாப்பு

ஏன் பாதுகாப்பு வேண்டும்?

நீங்கள் நேரடியாக மென்பொருளை நிறுவும் பட்சத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஆன்டிராய்டு அலைபேசி/ டேப்ளேட் உங்களுக்கே தெரியாமல் உங்களைப்பற்றிய தகவல்களை வேறு ஒருவருக்கு மாற்றும் ஸ்பை வேலையை செய்துவரும்.

அல்லது வைரஸ்களை இன்ஸ்ட்டால் செய்யும்.

இப்படி தனித்தனியாக மென்பொருட்களை நிறுவினால் நிறைய பிரச்னைகளை வரும் என்பதை கருத்திக்கொண்டே எல்லா நிறுவனங்களுக்கும் தனக்கென்று ஒரு மென்பொருள் சந்தையை உருவாக்கியுள்ளன. 






Iphone - Istore



மேற்கண்ட நிறுவனங்களின் மென்பொருட்களை நிறுவும்போது நீங்கள் நிறுவும் மென்பொருள் சரியானதா? அல்லது அதனுள் வேறு ஏதேனும் நச்ச நிரல்கள் உள்ளிணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து அதன் பின்னரே வெளியிடுவார்கள். இதனால் அவர்களுக்கும் பிரச்னையில்லை. அவர்களின் வாடிக்கையாளர்களான நமக்கும் பிரச்னையில்லை.

இவ்வாறு நாம் பிளே அல்லது மார்க்கெட்டில் மென்பொருட்களை நிறுவும்போது சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். என்னவெனில் நாம் நிறுவ நினைக்கும் மென்பொருட்களை நம்மால் நிறுவிட இயலாது. அந்த சமயத்தில் அங்கே நமக்கு ஒரு பிழை தகவல் காட்டப்படும். என்னவெனில் இந்த மென்பொருள் உங்கள் அலைபேசி (டேப்ளேட்) ஒத்திசை ( Comp ability) இல்லை. என்று.


காரணம்
நமக்கு நமது அலைபேசி/ டேப்ளேட்களில் நிறுவிட நினைக்கும் மென்பொருட்களை உருவாக்கியவர் இதை ஒரு குறிப்பிட்ட கருவிகளில் அல்லது குறிப்பிட்ட அளவுகளில் உள்ள மென்பொருட்களில் மட்டுமே நிறுவிட முடியும் என்று அதற்கேற்றார்ப்போல் அந்த மென்பொருட்களை உருவாக்கியிருப்பார். அந்த குறிப்பிட்ட கருவிகளில் மட்டுமே அந்த மென்பொருட்களும் இயங்கும். அவ்வளவுதான் வித்தியாசம்

திரை அளவு


எப்படியெனில் நாம் அலைபேசியை பயன்படுத்தினால் அதன் திரை அளவு 320x240, 800*480 என்று வரும். அதே சமயத்தில் பெரிய டேப்ளேட் கணினிகளில் பல திரை அளவுகள் இருக்கும். இப்படி பல அளவுகள் உள்ளதால் அந்த மென்பொருள் வடிவமைப்பாளர் குறிப்பிட்ட திரை அளவுகளுக்கு மட்டுமே அனுமதி அ ளித்திருப்பார். அந்த அளவுகள் கொண்டவற்றில் மட்டுமே நிறுவிடவும் முடியும்.



மென்பொருட்கள் ஒத்திசைவு

சில மென்பொருட்கள் மேம்பட்ட ஆன்டிராய்டு இயங்கு தளத்தில் மட்டுமே மென்பொருட்களை நிறுவிட வழிவகை செய்யும். எனவே அவற்றினையும் நம்மால் நிறுவிட இயலாது.

ஆனால் எல்லா மென்பொருட்களையும் நிறுவிட வழிவகைகள் உண்டு என்றாலும் நாம் நிறுவும் மென்பொருட்களை நமக்கு தீங்கு செய்யாது என்று நமக்கு என்னமிருந்தால் நிச்சயமாக நிறுவலாம்


சரி இப்போது நாம் மென்பொருட்களை நிறுவலாமா?




வழி 1 : உங்கள் அலைபேசி அல்லது டேப்ளேட் கணினியில் இந்த குறும்படம் உள்ளதா என்று பாருங்கள் . இருந்தால் கிளிக் செய்யவும்


வழி 2: முதல்முறை பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கான தனி கணக்கினை துவக்கும் படி அறிவுறுத்தும். பின் ஒரு முறை கணக்கு விபரங்களை கொடுத்து சேமித்துவிட்டால் மீண்டும் மீண்டும் தானாகவே எடுத்துக்கொள்ளும். கணக்கு இல்லாதவர்கள் உருவாக்கிக்கொள்ளவும். இருப்பவர்கள் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை தந்து உள்ளே செல்லவும்






வழி 3 : 






மேலே உள்ள Search Button உள்ள இடத்தில் கிளிக் செய்தால் உள்ளீட்டு பெட்டி ஒன்று தோன்றும் அதில் உங்களுக்கு தேவையான மென்பொருளின் பெயரினை தட்டச்சு செய்த கடைசியில் உள்ள பூதக்கண்ணாடியை :) கிளிக் செய்தால் விபரங்கள் காட்டப்படும். அதில் உங்களுக்கு தேவையான மென்பொருளை கிளிக் செய்தால் கீழ்க்கண்டது போல் காட்டப்படும்.


பின் அந்த திரையில் Install என்ற பட்டனை அழுத்த வேண்டும்





வழி 4




அந்த மென்பொருள் இயங்க என்னென்ன அனுமதி தேவை மற்றும் அந்த மென்பொருள் நம்முடைய அலைபேசி/டேப்ளேட் கணினியில் என்னென்ன மென்பொருட்களுடன் இயங்கும் என்பது போன்ற தகவல்கள் இருக்கும். அதன்பின் accept & Download என்பதினை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான மென்பொருள் உங்கள் அலைபேசி/ டேப்ளேட் கணினிகளில் நிறுவப்படும்.

மேற்கண்ட இதே வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுக்கு தேவையா மென்பொருட்களை நீங்கள் நிறுவிக்கொள்ளலாம். முக்கியமாக ஒன்று. நீங்கள் தரவிறக்கும் மென்பொருள் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் தயவு செய்து அந்த மென்பொருளுக்கு நட்சத்திர மதிப்பை வழங்குங்கள். அது அந்த மென்பொருள் உருவாக்குநருக்கு ஊக்கமாக இருக்கும்
நன்றி!


------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Wednesday, August 8, 2012

ஆன்டிராய்டு மென்பொருட்கள் அறிமுகம்!


         

வணக்கம் நண்பர்களே!!

எங்கள் நிறுவனம் ஆன்டிராய்டு அடிப்படையிலான CPAD டேப்ளேட்களை (கையடக்க கணினிகளை) வெளியீட்டு வருவது நீங்கள் அறிந்ததே!

தற்போது அந்த டேப்ளேட்களை தமிழை அடிப்படையாக வைத்து பல்வேறு மென்பொருட்களை உருவாக்கியும் வருகின்றோம்.

கழுகுவீரன்

குழந்தைகளுக்கான காமிக்ஸ் புத்தம் என்பது எப்போதும் எல்லாரோலும் விரும்பத்தக்கது. அதனடிப்படையில் எங்கள் நிறுவனம் எங்கள் நிறுவனத்தின் ஆலோசகரான திரு.ரத்தினகிரி , CA அவர்களின் உதவியோடு முழுதும் டிஜிட்டல் அடிப்படையிலான கழுகுவீரன் என்ற காமிக்ஸ் புத்தகத்தினை உருவாக்கியுள்ளோம். இதனை முழு பகுதிகளை ஒவ்வோன்றாக ஒவ்வொரு பகுதியாக தர உள்ளோம். பத்தரிக்கைகளில் வாரம் தோறும் படிக்கும் பழக்கம் எவ்வாறோ அதே போன்ற உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் இதனை உருவாக்கியுள்ளோம்.
விரைவில் தமிழில் காமிக்ஸ் படிப்பதற்கென்று  தனியாக சில மென்பொருட்களையும் உருவாக்கவருகிறோம்

மர்பி விதிகள்


அதனோடு தொழில்துறையில் புகழ்பெற்ற எதிர்விதிகளுக்கு சொந்தக்காரரான திரு.மர்பி அவர்களின் விதிகளையும் தமிழில் மொழி பெயர்த்து அதனையும் ஆன்டிராய்டு அடிப்படையில் கொடுத்துள்ளோம்.
எனவே அவைகளை நீங்கள் பயன்படுத்திப்பார்த்துவிட்டு கருத்துக்களை கூறலாம்.

மேலும் மாணவர்களின் கல்வி சம்பந்தமான மென்பொருட்களின் உருவாக்கத்திற்கு தன்னார்வலர்கள் வரவேற்கப்படுகின்றனர்.


நன்றி!

-------------------------------------------------------------------------------

ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Sunday, June 24, 2012

தண்ணீர் பிரச்னையை போக்க முதலில் குளங்களையும், ஏரிகளையும் ஒன்றிணையுங்கள்!!!




தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்று பல்வேறு அரசாங்கங்கள் பெரும்முயற்சி எடுத்து பின் இதை ஒன்றிணைக்க ஆகும் செலவிற்கு நிதிகளை திரட்ட பெரும் பணி என்று பல்வேறு சிக்கல்கள் காரணமாக அரசாங்கங்கள் இதை கைவிட்டுவிட்டன. ஆனால் பெரும் செலவு செய்து தேசியை நதிகளை ஒன்றிணைத்தாலும் அதன் பின்னும் சிக்கல்கள் நிச்சயமாக வரும். எப்படியெனில் ஒரு வேலை அதிகப்படியான தண்ணீர் வந்தால் அவற்றை எப்படி முறையான மேலாண்மை செய்யலாம்என்ற திட்டம் இல்லையெனில் நமக்கு சிரமமே.

ஆனால் 2500 வருடங்களுக்கு முன்பே வாழ்ந்த மக்கள் தண்ணீர் மேலாண்மையில்சிறந்து விளங்கியுள்ளனர். உதாரணம் நம்முடைய கரிகால்சோழன் கட்டிய கல்லணை. கடல்வெள்ளம் போல் வந்த காவிரியின் இருபுறம் தூர் எடுத்து சிறப்பான முறையில் கால்வாய்களை வெட்டி மிகப்பெரிய நிர்பாசன முறையை நம்மக்கள் மேற்கொண்டு வந்துள்ளனர். மேலும் அவர்களின்கடல்துறைமுகமான பூம்புகாரில் கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றவாறு அமைத்துள்ள முறையினை வரலாற்று அறிஞர்கள் இன்றும் வியக்கின்றனர்.

 கடந்த 1800 வருடங்களாக நம்மை ஆண்டு வந்த மூவேந்தர்கள் அவர்களுக்கு அடங்கியசிற்றரசர்கள்எல்லாரும் ஏதாவது ஒரு போரில்வெற்றிப்பெற்றால் அதன் நினைவாக ஏரிகளை வெட்டினர். அதன் மூலம் ஏரியை சுற்றிஉள்ள எல்லா இடங்களிலும் உள்ள மக்களுக்கு அவர்களின் விவசாயத்திற்கு தண்ணீர் கொண்டு சேர்த்தனர். இது நமக்குகணக்கு தெரிந்து 2500 வருடங்களாக செய்துகொண்டு வந்துள்ளனர். அதிலும் காஞ்சியை ஆண்டபல்லவர்கள் பலஏரிகளைவெட்டி ஒரு ஏரியில் தண்ணீர் அதிகமாக வந்தால் இன்னொரு ஏரிக்கு கொண்டு செல்லும் வழியில் உள்ள எல்லா ஊர்களில் உள்ள குளங்களுக்கும்  தண்ணீர் செல்லும் வகையில் அமைத்தனர்.

இவ்வாறெல்லாம் தண்ணீர் மேலாண்மையை கடைபிடித்ததால் நிலத்தடி நீர்மட்டமும் சரியாக இருந்து வந்துள்ளன என்றே சொல்லாம்.

ஆக முறையான தண்ணீர் மேலாண்மையை மிகச்சரியாக செய்துவந்தவர்கள் நாம். ஆனால் இன்று தண்ணீர் தண்ணீர் என்று அடித்துக்கொள்கின்றோம். போதாக்குறைக்கு தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம் என்கின்றனர்.

எது எப்படியிருந்தாலும் அடிப்படைகளை மிகச்சரியாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும். முதலில்குளங்கள், ஏரிகள் ஆகியவற்றை ஒண்றிணைத்துவிட்டு அதன்பின் உள்ளூர் ஆறுகளையும், நதிகளையும் ஒன்றிணைத்தபின் வேண்டுமானால் தேசிய நதிகளை ஒன்றிணைக்கலாம். இந்த அடிப்படை அம்சங்களை ஒன்றிணைப்பதன் மூலம் நமக்கு நிலத்தடி நீர்மட்டமும் உயரும்  அதே சமயத்தில் அதைபயன்படுத்தி விவசாயமும் கூடும். 

சரி குளங்களையும், ஏரிகளையும், ஆறுகளையும் எப்படி ஒன்றிணைக்கலாம்.?

நாம் செய்யவேண்டிய தேவை எதுவுமே இல்லை. ஏற்கனவே எங்குஎங்கெல்லாம் குளங்களும்,ஏரிகளும் இருந்துள்ளனவோ அவைகளை நாம் மீண்டும் பயன்படுத்த ஆரம்பித்தாலே போதும். நம் முன்னோர்கள் எங்கெல்லாம் ஏரிகள் வெட்டியுள்ளார்களோ அவைகளை ஒரு பக்கம் ஆற்று நீர் வரத்திற்கும், இன்னொரு புறம் இன்னொரு ஏரிக்கு நீர் செல்லும் வழிகளையும் ஏற்படுத்தியுள்ளனர். .
அவற்றினை நாம் முறையாக தூர்வாரி பயன்படுத்தினாலே போதுமானது

இதற்கு நாம்முதலில்செய்யவேண்டியது கூகிள்மேப்பில் நம் ஊர்களின் ஏரியின் இருப்பிடத்தினை புளூ கலர் கொண்டு அடையாளப்படுத்தினாலே போதும். தொழில்நுட்பங்கள் வழியாக அவர்களின் பாதைகளை நாம் எளிதாக அறிந்துகொள்ளலாம்.

மேலும் அரசாங்கத்தின் 100 நாள் வேலை வாய்ப்புத்திட்டத்தினைஇதுபோன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம்.


-----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Monday, May 14, 2012

ஒரு நொடியில் +2 ரிசல்ட்.



இம்முறை +2 ரிசல்ட்களை  http://www.chennaikalvi.com என்ற இணையதளத்தின் வாயிலாக வெளியிட இருக்கிறோம். இதற்காக 21 நாடுகளில் இருந்து இயங்கும் சர்வர்களை ஒரே கட்டமைப்பில் கொண்டுவந்து Global Cache என்ற நுட்பத்தில் செயல்படும். வகையில் உள்ளதால் ஒரே ஒரு  நொடியில் தேர்வு முடிவுகளை காணலாம்.

இன்னொரு சிறப்பம்சம். இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் அப்போது கொடுத்தஎண்ணிலிருந்து 100 எண்களின் முடிவுகளையும் காணும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

http://chennaikalvi.com/



ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Sunday, April 1, 2012

ஆன்டிராய்டு-ல் தமிழை நிறுவுவது எப்படி?


வணக்கம் நண்பர்களே!!

ஆன்டிராய்டு 4 அடிப்படையிலான கணிப்பலகையை ( Tablet) எங்கள் நிறுவனம் 
வெளியிட்டது. ஆனால் அதில் தமிழ் ஒத்திசைவு இல்லாத காரணத்தினால் அதன்  வெளியீடு தள்ளிக்கொண்டே போனது. இது குறித்து பல்வேறு விவாதக்களங்களில் காணப்பட்ட செய்தி என்னவெனில் 

ஆன்டிராய்டு , விண்டோஸ் அடிப்படையிலான கணிப்பலகைகள்(tablet) மற்றும் அலைபேசிகளுக்கு தமிழ் ஒத்திசைவை  தரவில்லை. ஆகையால் ஓபேரா வை நிறுவி அதன் வழியாக மாற்றங்களை செய்து தமிழ்  செய்திகளை படித்திருந்தோம்.

ஆனால் 

ஆன்டிராய்டு 1.6 -ல் தமிழை பயன்படுத்தி தட்டச்சு செய்திட தமிழ்விசை தமிழா குழுவினரால் கொண்டுவரப்பட்டு பின் அனைவரும் பயன்படுத்த ஏதுவாக இருந்தது.

எனவே நிச்சயமாக இது எழுத்துரு சம்பந்தமான பிரச்னையாகத்தான் இருக்கும் என்று என்று எண்ணி தேடியபோது நிச்சயமாக இது எழுத்துரு பிரச்னையாகவே இருந்தது.

என்னவெனில் ஆன்டிராய்டு தன்னுடன் வழங்கும் எழுத்துருக்களில் தமிழ் உட்பட பல மொழிகளுக்கான எழுத்துருக்கள் சேர்க்கப்படவில்லை. எனவே அதன் தன்னியல்பான எழுத்துருவான DroidSansFallback எழுத்துருவில் யுனிகோடு அடிப்படையிலான தமிழ் இடங்களில் தமிழ் எழுத்துக்கள் இல்லை. எனவே பான்ட் கிரியேட்டர் வழியாக தமிழ் எழுத்துருவை  சேர்க்கலாம் என்று முயற்சித்தேன். ஆனால் வேறு ஒரு குழுவில் வேறு மொழி பிரச்னைக்கு மைக்ரோசாப்ட்-ன் லதா எழுத்துருவை DroidSansFallback  என பெயர் மாற்றம் செய்து பாண்ட் கோப்பில் இட்டால் எல்லா மொழியையையும் காணலாம் என்று கூறியிருந்தார்கள்.

அதனடிப்படையில் லதா எழுத்துருவை ரீநேம் செய்தும் பாண்ட் கோப்பில் இட்டும் தமிழ் கட்டம் கட்டமாகவே வந்தது. கடைசியாக எல்ஜி ஆப்டிமைஸ் -ல் சமீபத்திய அப்டேட்டிற்கு பிறகு தமிழ் வசதி வந்தது நினைவில் வந்தது. எனவே அதில் இருந்த Framework.jar என்ற பைலை root\system\framework -, கணிப்பலகைக்கு மாற்றி ரீஸ்டார்ட் செய்தவுடன் ஆன்டிராய்டு 4 வெகு சிறப்பாக தமிழ் மொழியை காட்டியது :)

கூடவே தமிழ் விசை வழியாக தமிழும் சிறப்பாக தட்டச்சவும் முடிந்தது.  ஆனால் சில இடங்களில் முழுமையாக ரெண்டரிங் ஆகவில்லை என்றாலும் தட்டச்சு செய்து பதிந்த பின் மிகச்சரியாக தமிழ் வந்தது. 

எனவே ஆன்டிராய்டு எல்லா பதிப்புகளுக்கும் கீழ்க்கண்ட எழுத்துருக்களை நிறுவி தமிழ் உட்பட எல்லா மொழியினையும் கொண்டுவரலாம்.

மேலும் திரு.தகடூர் கோபி அவர்கள் பல்வேறு விதமான எழுத்துருக்களை யுனிகோடு வடிவில் வெளியிட்டுள்ளார். எனவே எழுத்துரு மாற்றம் வேண்டுபவர்கள் அந்த எழுத்துருக்களை தரவிறக்கம் செய்து பெயர் மாற்றி ஆன்டிராய்டுல் பயன்படுத்தலாம் வித விதமான எழுத்துருக்களுடன் :)

எச்சரிக்கை.சில மொபைல்களில் ரூட்டிங் வசதியை அனுமதிப்பதில்லை.   இல்லையேல் உங்கள் மொபைலின் வாரண்டி போய்விடும். எனவே கவனமாக பயன்படுத்தவும்


ஆன்டிராய்டில் தமிழு எழுத்துருக்கள் தரவிறக்க
http://dl.dropbox.com/u/8548231/droidfonts.zip

ரூட்டிங்கிற்கு பயன்படுத்திய மென்பொருள்


நமக்கு பிடித்தமான எழுத்துருக்களை சேர்க்க

ஏற்கனே TAM அடிப்படையில் உள்ள எழுத்துருக்களை யுனிகோடுக்கு மாற்றி ஆன்டிராய்ட் உட்பட எல்லா மொழிகளிலும் கொண்டு வர வழிமுறைகள் பற்றி திரு.தகடூர் கோபி அவர்கள் எழுதியுள்ள கட்டுரை

----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------