#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }
Showing posts with label இந்திய மின்னாளுமை. Show all posts
Showing posts with label இந்திய மின்னாளுமை. Show all posts

Tuesday, January 24, 2012

மின்னாளுமை திட்டங்களில் சமூகதளங்கள் - 01


2011 ம் வருடங்களில் சமூக இணையத்தளங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.

ஆம், பல நாடுகளில் புரட்சி வெடிக்கவும், ஒருமித்த கருத்துக்களை உடைய குழுக்களை ஒன்றிணைக்கவும் பாலமாக விளங்கியது இந்த சமூக இணையத்தளங்கள். மேலும் ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி ஏற்பட்ட போது மற்ற நுட்பங்கள் எல்லாம் ஸ்தம்பிக்க சமூக இணையத்தளங்கள் வழியாக அங்கேயுள்ள மக்களின் நிலைமையை அறிந்துகொண்டதும், அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்கு தாங்கள் பத்திதிரமாள்ளது பற்றியும் சமூக இணையத்தளங்களின் வழியாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டபோது அவர்களின் குடும்பத்தினர்கள் சகஜ நிலைக்குள்ளானதும் தகவல்களில் தெரிய வந்தது.

ஆக இவைகளெல்லாம் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய சேவை ஆற்றி வருகின்றன என்பது உண்மையே .

நாணயத்தின் இருபக்கத்தினைப்போல் சமூக இணையத்தளங்களுக்கும் நன்மை/தீமை என்ற இரு பக்கம் உள்ளது. சமூக இணையத்தளங்கள் ஒரு மாய உலகம். உள்ளே செல்ல செல்ல பிரபஞ்சத்தின் விரிவடையும் பக்கம் போல நீண்டு கொண்டே செல்லும் உலகம். 
அது ஒரு புறம் என்றால் சமீபகாலமாக கருத்து சுதந்திரம் என்ற ஒன்று இன்று எல்லாரையும் ஆட்டிப்படைக்கிறது. சமீபத்தில் கபில் சிபில் கூட இந்தியாவில் இயங்கும் சமூக இணையத்தளங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசியது நினைவிருக்கலாம்.
எனவே அரசாங்கங்கள் சமூக இணையத்தளங்களை கட்டுப்படுத்தி அவைகளை பூதாகரமாக வெடிக்கும் முன்னர் அவர்களோடு கரம் சேர்த்துக்கொண்டால் நிச்சயமாக சமூகத்திற்கு மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும்.  ஏனெனில் ஒரு அரசாங்கத்தினையே மாற்றும் திறன் இந்த சமூக இணையத்தளங்களுக்கு உண்டு.

 தற்போதைய அமெரிக்க அதிபரான ஓபாமே தன்னுடைய வெற்றிக்கு சமூக இணையத்தளங்களை பயன்படுத்திக்கொண்டாரே அப்போதே இதன் பலம் வெளிபட்டுவிட்டது .

எனவே சமூக இணையத்தளங்கள் தனி அரசாளும் முன் அரசாங்கம் அவற்றினை தன்னோடு இணைத்துக்கொண்டு பயனித்தால் யாவருக்கும் பிரச்னையில்லாமல் பயனிக்கலாம். ஆனால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய மாற்றங்களை தரலாம்.....


சரி அரசாங்கமும் சமூகஇணையத்தளங்களும் இணைந்தால் என்ன பயன்?

 முதல்படியாக அரசாங்கம் தம் மின்னாளுமை திட்டங்களில் ஒரு பகுதியாக  சமூக இணையத்தளங்களுடன் கைகோர்த்து சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்தலாம். பைசா செலவில்லாமல்

ஆம், அரசாங்கத்திற்கு முக்கிய பிரச்னையே பணப் பற்றாக்குறைதானே. அந்த பண பிரச்னையே இல்லாமல் இதன் வழியாக மின்ஆளுமை திட்டங்களை பைசா செலவில்லாமல் செய்யலாம்.

செலவில்லாமல் என்றால் அரசாங்கம் நிச்சயமாக முன்வரும். இதுபோன்ற பணிகளை எடுத்துச் செய்ய........... :)

அல்லது அரசாங்கம் விருப்பப்பட்டால் தன்னார்வக்குழுக்களுடன் இணைந்தும் தனி சமூக இணையத்தளங்களையே அறிமுகப்படுத்தலாம்.

ஏனெனில் சமூக இணையத்தளங்கள் சமூகங்களுக்காகத்தானே.....

அடுத்த பாகத்தில் அரசாங்கங்கள் ஒவ்வொரு துறையிலும் சமூக இணையத்தளங்களை எப்படி பயன்படுத்தலாம் . துறை ரீதியான விளக்கங்களுடன்........


சந்திப்பேன்................




-----------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Thursday, September 1, 2011

தொடுவானம்- இந்திய மின்னாளுமை திட்டங்களின் முன்னோடி


வான்வெளியில் உள்ள செயற்கை கோள்களை மேலாண்மை செய்திட, பெரிய நிறுவனங்களில் உற்பத்தி பணியில் இயந்திரங்களை மேலாண்மை செய்திட , 
சேவை நிறுவனங்களில் மேலாண்மை செய்திட, இரு சக்கர வாகனங்கள் முதற்கொண்டு எல்லாவற்றிலும் கணினிகள் நுழையாத இடமில்லை. இவ்வளவு ஏன் சச்சின் டெண்டுல்கரை வீழ்த்த கூட தனியாக வியூகம் வகுக்க கூட கணினிகள் நுழைந்துவிட்டன. ஆனால் மக்களுக்கு சேவை செய்யவே தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தில் மட்டும் இன்னமும் முழுமையாக கணினிகள் நுழையாமல் இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யமே.....

ஆனால் அந்தக்குறையும் தற்போது நிவர்த்தியாகிவிட்டது... மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் முயற்சியால்  அரசாங்க இயந்திரங்கள் வேகமாக இயங்க கணினி நுட்பம் பயன்படுத்தி மக்களின் குறைகளை களையவும், அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்கவும் கொண்டுவரப்பட்டதுதான் தொடுவானம்

ஆம் ,  உயர்திரு.மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் மதுரை மாவட்ட மக்களுக்காக கிராமங்களில்இருந்தபடியே மனுக்களை நேரடியாக ஆட்சியருக்கு அனுப்பும் தொடுவானம் என்ற திட்டத்தினையும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடுதிரை வழியாக குறைகளை சொல்லும் திட்டத்தினையும் அமல்படுத்தியுள்ளார்.

இத் தொடுவானம் திட்டம் இந்திய மின்னாளுமை திட்டத்தின் முன்னோடி என்று தாரளமாக சொல்லலாம். அட அப்படியென்ன வசதிகள் இத்திட்டத்தில் என்கிறீர்களா? இதோ பார்ப்போம்... 

எல்லாஇடங்களிலும் கணினி பயன்படுத்துகிறோம். ஆனால் அரசாங்க இயந்திரங்களில்  கணினியை பயன்படுத்துவதால் என்ன நன்மை?

இதோ மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சகாயம்  அவர்கள் சொல்கிறார்..

ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மனு கொடுக்க ஆட்சியரை சந்திக்க வரும் ஒரு விவசாயி அந்த ஒரு நாளிற்காக அவன் வேலையை விட்டுவிட்டு காசு செலவு செய்துகொண்டு தன் கூலியை இழந்து வந்து  சந்திக்கிறான்,  அது தேவையா? அவர்கள் இருக்குமிடத்திலயே மனுக்களை அளிக்கும் வசதியை ஏற்படுத்திவிட்டால் அவர்கள் வேலை இழக்கவேண்டிய அவசியம் இல்லையே.... ஊதியத்தினை இழக்கவேண்டியதில்லையே.....

என்ற அவரின் எண்ணத்தில் எழுந்த திட்டம் படிப்படியாக தமிழ்உலகம் அறக்கட்டளை சார்பாக திரு. ஆல்பர்ட் பெர்னான்டோ அவர்கள் முன்னெடுப்பில் தகடூர் கோபி அவர்களின் தலைமையில் தொடுவானம் http://www.thoduvanam.com திட்டம் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. 

இத்தொடுவானம் திட்டம் வழியாக இணையம் வழியாக நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்களையும்/ஆலோசனைகளையும் அனுப்பலாம். மேலும் மாவட்ட ஆட்சியருடன் நேரடியாக காணொளி வழியாக கலந்துரையாடலாம். இதனால் யாரும் அவரவர்கள் பணியை விட்டுவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லையே. ஏனெனில் கிராமங்களுக்கு 5 தன்னார்வலர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து  அவர்கள் வழியாக அக்கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை தொடுவானம் இணைய தளம் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவிடுவார்கள். பின் மாவட்ட ஆட்சியர் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உடனுக்குடன் தீர்வு காண அனுப்பிவைப்பார். 

நேரடி  காணொளி வசதி

அதே தளத்தில் நேரடியாக ஆட்சியர் அவர்களுடனும், அதிகாரிகளுடனும் பேசி தங்கள் குறைகளையும் கூறலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அரசாங்ககள் முழுமையாக பயன்படுத்தினால் கிராமங்களும் முன்னேறும். நகரங்கள் மேலும் வலுப்பெறும்..



தொடுதிரை

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடைபெறும் மனுநீதிநாளில் வரும் பல்லாயிரக்கணக்கானோர்களை சந்தித்து குறைகள் தீர்ப்பதும்் மிகப்பெரிய பணிதான். அதையும் குறைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடுதிரை(டச் ஸ்கிரின்) மூலமாகவும் குறைகள் அனுப்பலாம்.  இந்த தொடுதிரையில் அவர்கள் பெயர்களை மட்டும் கொடுத்தாலே மற்ற மனு சார்ந்த விபரங்கள் தேர்ந்தெடுத்தாலே போதும்.


அதே தளத்தில் நேரடியாக ஆட்சியர் அவர்களுடனம், அதிகாரிகளுடனும் பேசி தங்கள் குறைகளையும் கூறலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அரசாங்ககள் முழுமையாக பயன்படுத்தினால் கிராமங்களும் முன்னேறும். நகரங்கள் மேலும் வலுப்பெறும்..

இதைவிட முக்கியம். நேரடியாக பேப்பர் பயன்பாடு என்பதும் அது தொலைந்துவிட்டது போன்ற சிக்கல்களும் இங்கே கிடையாது.


மிகப்பெரிய அதிசயம் !!


மாற்றுத்திறனாளிகளும் நேரடியாக தொடுவானம் தளத்தில் மனுக்களை பதியும் முறைக்காக கரூரை சேர்ந்த  முனைவர். திரு.சரவணன் அவர்கள் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு  பயிற்சி அளித்தார். 



ஆனால் இதை முன்னெடுத்து செல்வது யார் என்ற கேள்விக்கு முதற்கட்டமாக மதுரைமாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் முன்னெடுப்பு செய்துவிட்டார். இதை எல்லா மாவட்டங்களிலும் பயன்படுத்தினால் எல்லா மக்களும் பயனடைவார்கள்.... நடக்கும் என்று நம்புவோமாக...

தொழில்நுட்பம் குழுவினர்:லதானந்த், பேராசிரியர் சரவணன், துரை மணிகண்டன், நாகமணி,  தேனி சுப்ரமணியன், சுலைமான், , ராமசாமி,, திருப்பதி, மாயவரத்தான்,  திருநாவுக்கரசு, , கவிதாயினி மதுமிதா, ‘சங்கமம்’ விஜய்,  கவிஞர் துரை.ந.உ, பஜ்ரங்கபதி, ப்ரித்பால்சிங் , செல்வ.முரளி


 இணையத்தில் நிறைய தமிழ் குழுமங்கள் இருந்தாலும் சில குழுமங்கள் மட்டுமே  சமூகம் பயன்பெறும் திட்டங்களை இணையம் வழியாக செயல்படுத்த பெரும்முயற்சிகள் செய்துவருகின்றன. இதைப்போல் இன்னமும் நிறைய குழுமங்கள் இதைப்போல் சமூக பயன்பாட்டிற்கு தேவையானவற்றை செய்யவேண்டும்.

படங்கள்: சங்கமம் விஜய்
----------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------