#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Thursday, July 7, 2011

வெவ்வாலும், செல்போன் கதிர்வீச்சும்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

இன்று மாலை என்னோட செங்குதிரையில் வந்துட்டு இருந்தப்ப....... திடீர்னு ஒரு வெவ்லவால்  என் மேல வந்து மோதியது.

அப்பத்தான் என்சிற்றறிவுக்கு எட்டியது.
வெவ்வால் கள் தான் வெளியிடும் நுண்ணலைகள் மூலம் எங்கெல்லாம் தடை வருகிறதோ அவைகளை  கண்டறிந்து மாறி சென்றுவிடும். அப்படியிருக்கு இது எப்படி என் மேல் மோதியது...

நான் நின்ற இடத்தில் ஒரு 100 அடி தூரத்தில் செல்போன் டவர் இருந்தது. ஒருவேளை டவரிலிருந்து வெளிவரும் நுண்ணலைகளால் வெவ்வால்களின் நுண்ணலைகள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதா?

இதுபற்றி சமீபத்தில்தான் படித்தேன். ஒரு புத்தகத்தில்
நெடுந்தூரம் பறக்கும் பறவைகள் தற்பொது தடம் மாறி பறப்பதாகவும் இதற்கு முக்கிய காரணம் செல்போன் கதீர்வீச்சுக்கள்தான் என்று..
இது உண்மையா?









ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Saturday, July 2, 2011

தமிழக அரசின் லேப்டாப் திட்டம் - பாதுகாப்பானதா..?



" இலவசமாக மாணவர்களுக்கு லேப்டாப் தந்தாலும் அதன் பயன் என்னவென்று அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் நாம் அவர்களை இந்த லேப்டாப் கொடுத்து வரவேற்க விருப்பது கணினியுகத்திற்கும், மாயவலையான இணயத்திற்கும் அழைப்பிதழ். சற்று தடம் மாறினாலும் மாயவலையின் அடிமையாகிவிடுவார்கள்"


தமிழக அரசின் லேப்டாப் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் எல்லா தரப்பிலும் வரவேற்கப்பட்டாலும்  முழுமையான பாதுகாப்பு இல்லாமல் வெளியிடுவது ஆபத்தான ஒன்று. மேலேகண்ட வளர்ந்த நாடுளில் உள்ள குழந்தைகள் கணினிக்கே அடிமையாகிவிட்ட செய்தியும் இருக்கிறது என்பதினை நாம் மனதில் கொள்ளவேண்டும்

முதலில் உலகம் முழுதும் உள்ள  இளம்வயதினர்  பற்றியும் அவர்கள் கணினி சார்ந் த பொருட்களில் செலவிடும் நேரத்தையும் அறிந்துகொள்ளலாமா?

  • 66%  8- முதல்18-வயதுள்ளவர்களிடம் சொந்த செல்போன் 
  • 76% சதவித குழந்தைகளிடம் ஐபாட் உள்ளிட்ட எம்பி ப்ளேயர்கள்
  • 28% மட்டுமே எவ்வளவு நேரம் கணினியை பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிகிறது.
  • 30% மட்டுமே தெரிகிறது கம்ப்யூட்டர் கேம்ஸ்ன் விதிமுறைகள்
  • 36% மட்டுமே தெரிகிறது கம்ப்யூட்டரை பயன்படுத்தும் விதிமுறைகள்
  • மீடியாவிற்கு( தொலைகாட்சி, கம்ப்யூட்டர் கேம்ஸ், இணையம்) ஆகியவற்றிற்கு மிகஅதிகமாக அடிமையாகிறார்கள்
  • ஒரு நாளைக்கு ஆடியோ, கணினி, வீடியோ கேம்ஸ் மற்றும் படம் பார்த்திலயே அதிகப்படியான நேரத்தினை செலவிடுகிறார்ள்
  • இணையத்தில் சோசியல் தளங்களிலும், விளையாட்டுகளிலும், வீடியொக்களை பார்ப்பதிலுமே நேரம் அதிகமாக செலவாகிறது
  • 74% o7வது முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் எல்லா சோசியல் தளஙகிறது

இப்படி உலகம் முழுதும் குழந்தைகள் /மாணவர்கள் டிஜிட்டல் யுகத்தில் பெரும்பான்மையான நேரத்தினை செலவிடப்படுகிறது என்ற  அதிர்ச்சி தகவல்  ஒரு புறமிருக்க...

பாமர மாணவ/மாணவியர்கு  லேப்டாப் என்பது வரவேற்கத்தக்கது என்று பாமரர்கள் போல் நாமும் நினைத்தால் அது நிச்சயமாக தவறு..

நம் நாட்டில் தொழில்நுட்ப சட்டத்திட்டங்கள் இன்னமும் முழுமையாக இல்லை. அப்படியெனும் பட்சத்தில் சட்டத்திட்டங்கள் மிகவும் சரியாக இருக்கவேண்டும்.இல்லாவிட்டில் வளர்ந்துவரும் இளம் முறை தவறான வழியில் செல்லாமல் இருக்கும். சமீபத்தில் வெளிவந்த கணக்கெடுப்பில் இந்தியாவின் இந்த நூற்றாண்டில் இளைஞர்கள்தான் மிக அதிகமாக இருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் வளர்ந்துவரும் யுகத்தில் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துவருகிறது. எனவே வளரும் தலைமுறை தொழில்நுட்பம் கற்க வரும்போது வேறு ஏதாவது தளம் வரும். அப்படி வரும்போது  அவர்கள் தடம்மாறினால் அது இன்னமும் சிக்கலாய் முடியும்... ஏனெனில் இளைஞர்களை சரியான பாதையில் செல்ல வழிகாட்டாவிடில் சிக்கல் சமூகத்திற்குத்தான்...

நம் அரசு இலவசமாக லேப்டாப் உடன் தமிழ் தட்டச்சு கீபோர்ட்டு என்று எல்லாம் தருகிறார்கள். ஆனால் ஒரு எச்சரிக்கை!!

கட்டுரை படிக்கும் எல்லாரும் கூகிளில் தேடலில் "அம்மா" என்று தேடிப்பாருங்கள். கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற தமிழ் இணையப்பயிலரங்கில் இதை தேடிப்பார்த்த நாங்களே அதிர்ந்துதான் போனோம்.


இப்படியிருக்க மாணவர்கள் இணையத்தில் ஏதாவது தேடப்போய் கிடைத்தால் இது போன்று கிடைத்தால் சிலர் அல்லது பலர் தடம் மாற வாய்ப்புள்ளது. மேலும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் இணையத்தை பயன்படுத்துவதில் சட்டத்திட்டங்களும், கட்டுப்பாடுகளையம், தேவையற்ற தகவல்களையும் கட்டுப்படுத்தும் வகையில் மாற்றங்களை செய்தபின் லேப்டாப்களை தரவைக்கலாம். 

மேலும் தமிழை வளர்க்க தேவையான பணிகளை செய்ய ஆட்கள் இல்லையே என்று எல்லலோரும் வருந்திக்கொண்டிருக்க. நம் ஆட்கள் இதுபோன்ற விசயங்களை வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் சத்தம் இல்லாமல்...

. இவையெல்லாம் கட்டுப்படுத்தாவிடில் சிக்கல்கள் நிச்சயமாக வளரும் சமூகத்திற்குத்தான்

முதலில் என்னென்ன பிரச்னைகள்:

கணினியில் மேல் உள்ள ஆர்வம் ஒருவேளை அவர்கள் கணினிக்கே அடிமையாகிவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும்.

இணையமும், இணையத்தில் உள்ள சோசியல் தளங்களும் மாணவர்களின் பெரும்பான்மையான நேரத்தினை எடுத்துக்கொள்கிறது. 

சைபர் சட்டம் பற்றி தெரியாமல் சைபர் குற்றம் சார்ந்த ஏதேனும் குற்றத்தை செய்துவிட்டால்

தேவையில்லாமல் இணையத்தையும் கணினியையும் அதிகமாக பயன்படுத்தினால் படிப்பும் குறையும், கணினி சார்ந்த நோய்களும்வரும்....

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்....

சரி இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. எப்படி சரி செய்ய

இந்த பிரச்னைக்கான லகான் அரசு மட்டும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமே செய்ய முடியும். அல்லது பெற்றோர்களின் கண்காணிப்பு இருக்கவேண்டும். அப்படியும் இல்லையெனில் மாணவ/மாணவியருக்கு சைபர் கிரைம் சட்டத்திட்டங்கள் தெரிந்திருக்கவேண்டும். மேலும் சுயக்கட்டுப்பாடும் வேண்டும்

அரசாங்கம் என்ன செய்யவேண்டும் ?

 தேவையான தளங்களை மட்டுமே பார்க்க முடியும்படி செய்யலாம்.

சமூக இணையத்தளங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த செய்யலாம்.

பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மின்னஞ்சல் முகவரி நேரடியாக பள்ளியில் இருந்து தரும் வசதி. 

ஆபாச வார்த்தைகள் தேடினாலும் கிடைக்காமல் செய்யவேண்டும்.  

அரசாங்கமே ஒரு பொதுவான இணையத்தளத்தை வெளியிட்டு அதிலியே மாணவர்களுக்கு தேவையான மென்பொருள்கள் , தேடும் வசதி, மின் புத்தகம் வசதி , கல்விக்கான வீடியோ என்று எல்லா இணைப்பையும் தரலாம்.

இவைகளெல்லாம் தனித்தனியாக செய்யப்படாமல் அரசாங்கமே ஒரு பொதுவான DNS SYSTEM வழியாக மேற்கண்ட பணிகளை எல்லாம் செய்யலாம்.
பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்?

மேலும் பெற்றோர்கள் தேவையற்ற இணையதளங்களை வேண்டாமென்று சொன்னால் அதை தடுக்க தனி மென்பொருள்.

முடிந்தவரை கணினியை அவர்களின் படுக்கையறையில் வைக்காமல் பொது இடத்தில் வைத்தால் கணினியை அதிகமாக பயன்படுத்துவது குறையும்.

அவர்கள் கணினியின் வழியாக என்ன செய்யவேண்டும் என்று சொல்லித்தரவேண்டும்.

மாணவ/மாணவியர்கள் என்ன செய்யவேண்டும்

தங்களுக்கென தனி இலக்கை நிர்ணயித்து அதற்கேற்றார்ப்போல் சரியான பாதையில் பயணிக்கவேண்டும். 

இவற்றில் முக்கியமான லாகன் அரசாங்கத்திடமும், பெற்றோர்களிடமும்தான் இருக்கிறது. எனவே இதையெல்லாம் அரசாங்கம் அறிந்துகொள்ளவேண்டும். 

பலவித சிக்கல்கள் உள்ள இந்த விசயத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்படுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இது குறித்து அரசாங்கத்திற்கு விழிப்புணர்வு வேண்டும்.


இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கூகிள் நிறுவனத்திற்கு இதுபோன்ற வார்த்தைகள் தேடினால் தளத்தை ஓபன் செய்யாதிருக்க அல்லது தேடலில் காட்டாமல் இருக்க கேட்டுக்கொள்ளப்படவேண்டும். கூகிள் மட்டுமல்லாமல் எல்லா தேடல் தளங்களும் இதை செய்யவேண்டும்.


இல்லாவிடில் சிக்கல் யாருக்கு?


............... .....................................................................உங்கள் எண்ணத்திற்கே......


-----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Thursday, June 23, 2011

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச தமிழ் இணையப் பயிலரங்கம்



கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இலவச தமிழ் இணையப் பயிலரங்கம்  

 
கணினித்தமிழ் கற்போம்!! - இலவச தமிழ் இணையப் பயிலரங்கினை  கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதன்முறையாக   கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முதல் முறையாக விசுவல் மீடியா நிறுவனமும், விஎம் பவுண்டேசன் மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை,சிங்கப்பூர், இணைந்து கிருஷ்ணகிரி சாந்தி கல்யாண மண்டபத்தில் 25.06.2011 ம் அன்று காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறவுள்ளது.
 
வளர்ந்துவரும் கணினி யுகத்தில் கணினியை தமிழ் வழியே அறிந்துகொள்வது மிகவும் அவசியம். மேலும் பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், வங்கி கணக்குகளை இணைய வழியாக மேலாண்மை செய்யதல். மின்சாரக்கட்டணங்களை இணையம் வழியாக கட்டுதல் என எல்லா துறையிலும் கணினியும், இன்டர்நெட்டும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. ஆகவே இதுபோன்ற தொழில்நுட்பங்களை மக்கள் யாவரும் அறிந்துகொள்வதன் மூலம் இணைய (இன்டர்நெட்) உலகில் முதல்அடி எடுத்து வைக்க எல்லாரையும் அழைக்கின்றோம். 
 
இப்பயிலரங்கில் கலந்துகொள்வதன் மூலம் இன்டர் நெட், புதிய மின்னஞ்சல் துவக்கம், தமிழ்மென்பொருள்கள் (சாப்ஃட்வேர்கள்) பற்றிய ஒரு அறிமுகம் , தமிழ் இணையத்தின் பயன்கள், தமிழ் டிஜிட்டல் லைப்ரரி , கம்ப்யூட்டரில் தமிழ் தட்டச்சு செய்யும் முறை , புதியதாக வலைப்பூ( Blogs) உருவாக்கம் , வலைப்பூ வடிவமைப்பு , விர்ச்சுவல் மேப்பிங் முறையில் சங்க கால மனிதர்கள் மேற்கொண்ட கடல் வழி பயணம் பற்றிய ஒரு பார்வை. விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட ஆவணப்பபடங்கள் ,  இ-கவர்னன்ஸ் என பல்வேறு தொழில்நுட்பங்களைப்  பற்றியும் அறிந்துகொள்ளலாம்.
 
மாற்றுத் திறனாளிகளுக்காக...
பார்வையிழந்த மற்றும்  பார்வைக்குறைபாடுள்ளவர்கள் கணினியில் எப்படி தமிழ் தட்டச்சுசெய்வது என்பதையும்,அவர்களும்மற்றவர்களைப்போல கணினியைக் கையாள  முடியும் என்பதை இதற்கான சிறப்புப் பயிற்சியும் இந்தப்  பயிலரங்கில்இடம்பெறவுள்ளது.
கிருஷ்ணகிரியில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது இதுவே முதல் முறை.
 
இப்பயிலரங்கில்  பயிற்சி அளிக்க கட்டற்றமென்பொருள் ஆர்வலர் திரு.மா.சிவக்குமார், திரு.கவி செங்குட்டுவன், கடல் இயல் ஆய்வாளர் திரு.ஒரிசா பாலு  மற்றும் முனைவர்.துரை.மணிகண்டன், நெல்லை விண்மணி நிறுவனர் நாகமணி , முனைவர் திரு.சரவணன்   மற்றும் விசுவல்மீடியா நிறுவனங்களின் செல்வ.முரளி ஆகியோர் கலந்துகொள்கின்றனர். இவற்றின் தொடக்க விழாவிற்கு உலகத்தமிழ் அறிஞர்கள் பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வீடியோ  கான்பரன்ஸ் முறையில் பேசவிருக்கின்றனர். மேலும் இப்பயிலரங்கில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மாணவ/மாணவியர்களுக்கு இலவச மென்பொருட்கள் அடங்கிய சிடியும் வழங்கப்படும். ஆர்வமுள்ள யாவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளலாம் . நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விசுவல் மீடியா நிறுவனமும், விஎம் ஃபவுண்டேசன்  மற்றும் தமிழ் உலகம் அறக்கட்டளை ஆகியவை  செய்துவருகின்றன.

நன்றி! 



ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Tuesday, June 7, 2011

இணைய வழி நேரடிஒளிபரப்பு

மேகக்கணிமை நுட்பம் வளர்ந்துவர வளர்ந்துவர பல்வேறு துறைகளில் தொழில்நுட்பம் பெருக ஆரம்பித்துள்ளது. முதற்காரணம் செலவினங்கள் மிக குறைவு  என்பதே. கடந்த சில வருடங்களுக்கு முன்பு இணையத்தில் நேரடிஒளிபரப்பு என்பது கொஞ்சம் செலவு மிகுந்ததாக இருந்தது. ஆனால் மேகக்கணிமை நுட்பம் வளர்ந்தவர செலவினங்கள் குறைந்துவிட்டது.  அதற்கு முன்பு இன்னொரு விசயம் என்னவெனில் தொழில்ரீதியான கேமிராக்களை பயன்படுத்துவது சற்று சிக்கலாக இருந்தது. ஏனெனில் பெரிய கேமிராக்களை நம் கணினியுடன் இணைத்து இணையத்திற்கு தேவையான பார்மெட்டில் நேரடியாக மாற்றுவதென்பது சற்று சிரமமான விசயம்தான். ஆனால் தற்போதுள்ள நுட்ப வளர்ச்சியில் சிக்கல்கள் எளிதாகிவிட்டன. மதுரையில் ஒரு திருமணத்தை வெளிநாட்டில் உள்ள அவர்களின் சொந்தபந்தங்கள் பார்க்கவேண்டுமெனவும் எங்கள் நிறுவனத்திடம் கேட்க...எங்கள் மேகக் கணிமை நுட்பத்தை பயன்படுத்தி இணையம் வழியாக ஒரு திருமணத்தை 8 மணி நேரத்திற்கும் மேலாக இணையத்தில் கண்டுகளித்தனர்.


ஏதாவது ஒரு சிக்கலால் திருமணத்திற்கு வர இயலாதவர்கள் கண்டுகளிக்க எங்கள் சேவை பயன்பட்டதில் மட்டற்ற மகிழ்ச்சி ... சில படங்கள்...
கேமிராக்கள் பானாசொோனிக் நிறுவனத்தில் தொழில்ரீதியான காமிராக்கள்.....



இதே நுட்பங்களை பயன்படுத்தி ஒரு இணையவழி தொலைகாட்சி ஆரம்பிக்கவும் ஆவல்...

ஆர்வமுள்ளவர்கள் இணைந்தால் ......


---------------------------------------------------------------------------------------------------------

ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Monday, May 30, 2011

புதிய இன்டர்நெட் விதியும், நடைமுறை சிக்கல்களும்......


" இணையத்தில் பிரவுசிங் செய்யும் நபர்களை எட்டிப்பார்ப்பது அடுத்தவர்களின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதற்கு சமம் எனும்போது பிரவுசிங் சென்டர் முதலாளி எப்படி அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்க்க முடியும். மேலும் அப்படி பார்த்தால் மீண்டும் அடுத்த முறை அந்த நபர்கள் திரும்பவும் அவர்களின் பிரவுசிங் சென்டர்களுக்கு வரமாட்டார்கள்."


உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் மற்றும் பேச்சுரிமையுடைய நாடான இந்தியாவில் இணைய சட்டங்கள் இன்னமும் ஒரு சாதாரண அளவில்தான் உள்ளன. 1.25 பைசாவை திருடினால் ஜெயிலில் அடைக்கும் அதேச்சட்டத்தில்  சில லட்சம் கோடிகளை ஊழல் செய்தவர்களுக்கு ஜாமீன்-ல் வெளிவிடுவதும், அவர்களை "ராஜா " மாதிரி நடத்துவருகிறது. சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட  நடைமுறைகள் இன்னமும் முழுமையாக அமல்படுத்தாத நிலையில் இச்சட்டங்களைப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் வலைப்பூ பதிவாளர்களை தண்டிக்கும் செயல் அங்காங்கே நடந்து கொண்டுள்ளது.

2008ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கு எதிரான கருத்துக்கள் கூகுளின் ஆர்குட்டில் பதிக்கப்பட்டது. அச்செய்தியை பதித்தவரை கைது செய்ய கூகுள், பயனாளரின் ஜபி அட்ரஸைத் தர கூகுள் முடிவு செய்தது.மற்றொரு அரசியல் கட்சியின் இமேஜ் இணையம் மூலம் சரிந்தது.

26/11 மும்பை தாஜ் ஹோட்டலை தீவிரவாதிகள் தாக்கியது தொடர்பாக வலைப்பூவில் shoddy  journalism  பற்றி எழுதியதற்காக NDTV நிர்வாக இயக்குனர் பார்கா தத் வலைப்பூ உரிமையாளருக்கு சட்டம் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.

முழுமையான சட்ட விதிகள் இல்லாமல் ஏதாவது பிரச்னைகுரியஎழுத்துக்கள் என்று வரும்  வாசகரின் கருத்துக்கள் அரசியல் கட்சிக்கு எதிரானதோ இல்லையோ, போலீஸ் அந்த குறிப்பிட்ட இணையதளத்தை மூடவே முயற்சி செய்கிறது.  

சிலநேரங்களில் மேற்சொன்ன சில உதாரணங்கள் மூலம் மேம்படுத்தப்பட்ட இணைய சட்டங்கள் இந்தியாவிற்கு அவசியம் என்பதும், அடிப்படை உரிமைகளில் ஒன்றான பேச்சுரிமை இணையத்தில் மிக தவறான முறையில் பயன்படுதப்படுகிறது என்பதும் கண்ணார கண்டாலும் முழுமையான சட்டத்திட்டங்கள் விதிக்கப்படாமல் இணையத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு மட்டும் விதிகளை எழுதிக்கொள்வது தவறான ஒன்று.

இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய இணையச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

பயனாளர்கள் மற்றவர்களை புண்படுத்தும் வகையிலான கருத்துக்களையோ, அடுத்தவரின் அந்தரங்களையோ,மற்ரவரை வெறுக்கும் கருத்துக்களையோ,சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்களையோ மற்றும் சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு கருத்துக்களையும் பதிக்கவோ,மாற்றவோ,பதிவேற்றவோ, பகிரவோ கூடாது .

நாட்டின் ஒற்றுமை,சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் பொதுவுடமையை பாதிக்கும் எந்தவொரு கருத்துக்களையும்,வெளிநாட்டு நட்புறவைப் பாதிக்கும் கருத்துக்கள், மற்ற நாடுகளை அவமானப்படுத்தும் கருத்துக்களை பதிக்கக் கூடாது...

இதில் முக்கியமான விசயம் என்னவெனில்


சர்வதேச பயங்கரவாதிகளை பதுக்கி வைத்துக் கொண்டு இல்லை என்று சொல்லும் நாட்டிற்கு எதிராய் நாம் ஏதேனும் கருத்துக்கள் பதித்தால், நம்மை ஜெயிலில் பிடித்துப் போட அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கிறது மேற்சொன்ன சட்டவரிகள்.இந்தியாவில் அரசியல் கட்சி தலைவர்கள் பற்றிய எதிரான கருத்துக்களை வெளியிட்டால், அடுத்த நிமிடம் ஜெயில் களி தின்பதற்கு வழி செய்கிறது.

மேம்படுத்தப்பட்ட புதிய விதிகள் இண்டர்நெட் உரிமையாளர்களுக்கும் ஒருபுறம் பெரும் பிரச்னை. ஏனெனில். தங்கள் இணையம் மூலம் யாரும் தவறான கருத்துக்கள், சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளுக்கு பயன்படுத்தாமல் இருக்க, அதற்கென ஒரு தனி ஏஜென்சி மூலம் கண்காணிக்க வேண்டியுள்ளது.மேலும் நிர்வாண வீடியோக்கள்,படங்களை யாரும் பதிவேற்றாமல்ிருக்க, அதற்கென தனியே தடை செய்யும் மென்பொருள்களை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்

.ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய வசதி வழங்கும் போதும் இணையம் தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாமல் இருக்க, ஹோட்டல் நிர்வாகம் கண்காணித்தே தீர வேண்டும்.பதிவு செய்யப்பட்ட இணைய வசதி மையங்கள் வாடிக்கையாளர்களின் பேர், முகவரி,பாலினம்,அடையாள அட்டை, இணையம் பயன்படுத்திய நேரம் போன்றவற்றை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன.

மேலும் இதைவிட கொடுமை வயிற்றுப்பிழைப்பிற்காக நடத்தும் பிரவுசிங் சென்டர்களில் யாரோ சில விசமிகள் செய்யும் பிரச்னைக்காக போலீசார் நேரடியாக பிரவுசிங் சென்டர் நடத்துபவர்களை பிடித்துச்செல்கிறார்கள்.... இது மிகவும் தவறான ஒன்று. இணையத்தில் பிரவுசிங் செய்யும் நபர்களை எட்டிப்பார்ப்பது அடுத்தவர்களின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதற்கு சமம் எனும்போது பிரவுசிங் சென்டர் முதலாளி எப்படி அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்க்க முடியும். மேலும் அப்படி பார்த்தால் மீண்டும் அடுத்த முறை அந்த நபர்கள் திரும்பவும் அவர்களின் பிரவுசிங் சென்டர்களுக்கு வரமாட்டார்கள்.

இதைவிட பெரிய கொடுமை... தமிழ்நாடு போலீஸ் க்கு என்று அரசு சார்ந்த மின்னஞ்சல்கள் ஏதும்  கிடையாது. அவர்களே ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவற்றில் மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். இவைகளை வெகு எளிதாக ஹேக் செய்யலாம். ஆர்பிஐ தன் வங்கிக்கு சில விதிமுறைகளை விதித்துள்ளது, என்னவெனில் வங்கி சார்ந்த எந்த ஒரு தகவலும் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டின் சர்வர்களிலும் இருக்ககுடாது.

அப்படியிருக்க ஒரு போலீஸ் துறை தன் துறை சார்ந்தத பயன்பாடுகளுக்கு அரசாங்க தனி சர்வர்களை ஒதுக்காமல் அவர்கள் தனியார் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்துவது எந்த அளவிற்கு சரியானது என்று தெரியவில்லை.

இதற்கு தீர்வு என்ன

இவையெல்லாவற்றையும் அரசாங்கமே இந்தியாவின் டிஎன்எஸ் சர்வர்களில் தேவையான மாற்றங்கள் செய்தாலே போதும். ஆனால் அரசாங்கம் தன் வ(லி)ழியை மட்டுமே பார்க்கிறது. தொழில்நுட்பம் பெருகும்போது அதற்கேற்றார்ப்போல் கட்டுப்பாடுகளும் மாற்றப்படவேண்டும். ஆனால் நுட்பம் ராக்கெட் வேகத்தில் பயணிக்க கட்டுப்பாடுகள் ஆமையில் பயணிக்கிறது...





ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Tuesday, March 8, 2011

தென் கொரிய அரசாங்கத்தின் 40க்கும் மேற்பட்ட இணையத்தளங்கள் தகர்க்கப்பட்டது.

தென்கொரிய அரசாங்கத்தின் 40க்கும் மேற்பட்ட இணையத்தளங்களை DDOS எனப்படும் முறையின் மூலம் தாக்கி தகர்த்துள்ளனர்.

தென்கொரியாவின் வெளிநாட்டு அமைச்சகம், பாதுகாப்பு மற்றும் தேசிய இன்வெஸ்டிகேசன் துறை ஆகியவற்றோடு 40 துறைகளின் இணையத்தளங்கள் டிடாஸ் அட்டாக்கின் மூலம் தகர்க்கப்பட்டுள்ளன. இவற்றால் அந்த தளங்கள் சில மணி நேரம் இயங்காமல் இருந்துள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.



-----------------------------------------------------------------------------------------

ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Wednesday, February 2, 2011

உலக மொழிகளில் இணையத்தளப் பெயர்கள்


அட என்ன ஆச்சர்யத்துடன் கேட்கிறீர்கள். உண்மையாகவே இந்த வசதி தற்போது அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது .

சரி ஆங்கிலத்தில்தானே வெப்சைட் பெயர்கள் இருக்கும். எப்படி மற்ற மொழிகளில் என்று கேட்கின்றீர்களா?

அதற்கு முன் டிஎன்எஸ் என்றால் என்ன பார்ப்போமா? ஏனெனில் இணையத்தின் முதுகெலும்பு இதுதானே.

Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எந்த வள ஆதாரங்களுக்கும் வரிசையாய் பெயரிடும் முறைமையாகும். பங்கேற்கும் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் Domain பெயர்களுடன் இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது.

     குறிப்பாக நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை, இவை இணைய உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி

. எ.கா www.tamilvanigam.com என்பது 174.122.13.74 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.  
சரி இப்போது www.tamilvanigam.com என்பது 174.122.13.74 என்ற எண்ணுடைய சர்வரில் இயங்குகிறது என்று டிஎன்எஸ் ப்ரோகாலானது வழிகாட்டும்.

 இதுவே தமிழில் தமிழ்வணிகம்.காம் என்று கொடுத்தால் 174.37.210.240 என்ற சர்வரை தொடர்பு கொள்ளுமா ?. 
அதுதான் சற்று சிக்கலாக இருந்தது. ஏனெனில் இணைய நுட்பங்கள் ஆஸ்கி(Ascii) எனப்படும்  நுட்பத்தை வைத்தே உருவாக்கப்பட்டவை. எனவே உலக மொழிகளுக்கு பயன்படுத்தப்படும் யுனிகோடை இதில் நுழைக்கவேண்டுமெனில் அதற்கென்று தனியாக நிரல்கள் உருவாக்கப்படவேண்டும். 

அதற்கு உருவாக்கப்பட்டவைதான் இந்த  இந்த ஐடிஎன் எனப்படும் இன்டர்நேஷனல் டொமைன் நேம்ஸ் (IDN)

மொழி சார்ந்த வெப்சைட் பெயர்கள் வேண்டுமென்பதை 1996ாம் ஆண்டு மார்ட்டின் டர்ஸ்ட் என்ற அறிவியல் அறிஞர்கள் வேண்டுகோள் விடுக்க 1998ம் ஆண்டு டான் ஜூய் வங்க் மற்றும் லியாக் காக் யங் ஆகியோர்கள் திரு. டி.டபிள்யூ. டான் அவர்களின் வழிகாட்டுதலில் செயல்படுத்தினார்கள். அதுவும் பல கட்டமாக தங்கள் மாதிரிகளை உருவாக்கி செயல்படுத்தியபின்னர்தான் இதை இன்டர்நேஷன் டொமைன் நேம் சிஸ்டம் என்ற கட்டமைப்புக்கு கொண்டு வந்தனர். 

பின்னர் டாப் லெவல் டொமைன் எனப்படும் உயர்நிலை வெப்சைட் பெயர்களான .காம், .ஆர்க், .நெட், ஆகியவற்றிற்கு உருவாக்கின.

இதில் முக்கியமான விசயம் என்னவெனில் வெப்சைட் பெயர்கள் தற்போது உள்ள முறையில் ஆஸ்கி (ASCII-American Standard Code for Information Interchange) எனப்படும் முறையில் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றை யுனிகோட் முறைக்கு மாற்றி சில நிரல்களை எழுதினர்.
பின் மார்ச்  2008ஆம் ஆண்டு இணையத்தின் தர கட்டுப்பாடுகளை வகுக்கும் நிறுவனமான ஐஇஎப்டி IEFT ( Internet Engineering Task Force) ஐடிஎன்னை(IDN) அங்கீகரித்தது.

ஐஇஎப்டி என் ஐடிஎன் ஐ அங்கீகரித்தவுடன் வெப்சைட் பெயர்களையும், ஐபி முகவரிகளையும் மேலாண்மை செய்யும் ஐசிஏஎன்என் நிறுவனம் இதை அங்கிகரித்தது. மேலும் மே-2010ம் ஆண்டு முதல்  இணையத்தளத்தில் அந்தந்த நாடுகளின் மொழியில் வெப்சைட் பெயர்களை நிறுவும் நிரலை தன்னுடைய சர்வர்களில் இணைத்தது.


to Ascii code to unicode என்ற அல்காரிதம் வழியாக இந்த பெரும் வாய்ப்பை அளித்திருக்கின்றனர். தமிழ் மொழி என்பது காலத்திற்கேற்ப மாற்றி தன்னை நிலைநிறுத்திக்கொள்கிறது. இது நமக்கெல்லாம் கிடைத்த அரிய பரிசு என்றே கொள்ளலாம். இன்னமும் கணினிக்கே வராத மொழிகள் நிறைய உள்ளது. ஆனால் கணினிகள் வெளிவரத்தொடங்கிய 1985ம் ஆண்டிலேயே தமிழுக்கான மென்பொருட்கள் ஆராய்ச்சிகள் தொடங்கப்பட்டுவிட்டது என்பது நம் அனைவருக்கும் பெருமையான விசயமே.

சரி கணினியில் தமிழ், இணையத்தில் தமிழ் இதனால் என்ன பயன்?


மீன்கள் பிறக்கும்போது அவைகளுக்கு நீந்த யாரும் கொடுப்பதி்லை. பறவைகள் பறப்பது என்பது அதன் இயல்பான நிலை. அதுபோலவே நம் தாய்மொழியில் கல்வி கற்றால் மிக எளிதாக எல்லாவற்றையும் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் முடியும். ஏனெனில் அவை வழிவழியாக சந்ததி வழியாக வந்தவை.

ஆங்கிலம் தெரிந்திருந்தால் மட்டுமே இணையமும் கணினியும் பயன்படுத்த முடியும் என்ற நிலை மாறிவிடும். யார் வேண்டுமானாலும் படிப்பறிவும், அனுபவ அறிவும் கொண்டவர்கள் கூட அவர்கள் தாய்மொழியில் ஒரு வெப்சைட் அல்லது மின்னஞ்சல்களைக் கூட பெற்றுக்கொள்ள முடியும். 

எனவே அது அனைத்து சாரர்களும் பயன்படுத்த ஏதுவாக இருக்கும்.
ஏற்கனவே ஆங்கிலம் தெரிந்தால்தான் கணினிகளை பயன்படுத்த முடியும் என்ற நிலை மாதிரி கணினி, இன்டரநெட் , மொபைல் ஆகியவற்றை நம் தாய் மொழியிலயே பயன்படுத்தினால் அனைவரும் மிகஎளிதாக தொழில்நுட்பத்தை பெறலாம்.

 எவ்வளவு பெரிய நுட்பம் ஆயினும் கீழ்நிலை பயனாளர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்தத நுட்பங்கள் எல்லாம் அவரவர்கள் தாய் மொழியில் வெகு எளிதாக பயன்படுத்தலாம்.

இதுவரை நம் தாய்த்தமிழில் இரண்டு தளங்கள் மட்டுமே இதை வெற்றிகரமாக தமது தளத்திற்கு தமிழ்ப்பெயர்களை சூட்டியுள்ளன.

ஒன்று. http://www.முத்தமிழ்மன்றம்.com
இரண்டாவது. http://www.தமிழ்வணிகம்.com

இந்த நுட்பத்திற்காக உழைத்த அனைவருக்கும் நம் நன்றிகளை பகிர்வோம்.
யாருக்கேனும் தமிழில் வேண்டுமென்றால் எங்கள் www.rupeeshost.com நிறுவனத்தை தொடர்புகொள்ளலாம். அல்லது 99430-94945 என்ற எண்ணில் அழைக்கலாம்.















ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------