#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Thursday, May 28, 2009

எங்கேயும் எப்போதும் தமிழில் தட்டச்சலாம் சுலபமாக!!.

ஆம், தொழில்நுட்பம் வளர வளர கணினியில் தமிழை பயன்படுத்தவதற்க்கான தொழில்நுட்பங்களும் தமிழ்ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தங்கள் மொழியினை பயன்படுத்தி தட்டச்சு செய்வதற்கு ஏதுவாக ட்வெல்சாப்ட்(Tavultesoft) நிறுவனம் கீமேன் என்ற மென்பொருளை வழங்கிவருகிறது. அதனடிப்படையிலைனா விசைப்பலகைகளை உருவாக்க கீமேன் டெவலெப்பர் என்ற மென்பொருளை விற்கிறது.
நமது தமிழா முகுந்த் அவர்கள் வழங்கி இ-கலப்பையும் இதனடிபப்டையிலானது என்பது அனைவரும் அறிவர்.
தற்போது அதே ட்வெல்சாப்ட் (Tavultesoft) நிறுவனம் முழுவதும் இணையம் சார்ந்த விசைபலகைகளை வெளியிட்டு உள்ளது. ஜாவாஸ்கிரிப்ட் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இம்மென்பொருள்.
நம் higopi தளத்தின் கோபி அவர்களும் இதே போன்ற மென்பொருளை உருவாக்கியிருந்தாலும் இணைய பக்கங்களிலோ அல்லது வலைப்பூக்களிலிலோ ஒட்டியெடுத்துத்தான் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. ஆனால் இந்த கீமேன் வெப் என்ற மென்பொருளின் மூலம் எந்த மெனபொருள்களையும் நிறுவிட அவசியம் இல்லை. எங்கேயும் எப்போதும் இணையத்தில் நாம் தமிமிழை தட்டச்சலாம். இதில் குறிப்பிட்டத்தக்க அம்சம் என்னவெனில் எங்கெல்லாம் உரைப்பெட்டி (text box) பயன்படுத்தப்படுகிறதோ அங்கே தாமாகவே இதனுடைய தட்டச்சு பலகைகள் தாமாகவே தோன்றும்.
இதன் சோதனை ஓட்டம் தமிழ்வணிகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு பாருங்க.
http://keymanweb.com

இதன் சோதனை ஓட்டம் : www.tamilvanigam.in-ல் காணுங்கள்

ஆனால் இதிலும் சிக்கல். இந்த மென்பொருளை மாதம் 3000 Hit கள் மட்டுமே பயன்படுத்தமுடியும் அதற்கு மேல் போனால் பணம்தான் கட்டவேண்டும்.

என்றும் அன்புடன்
செல்வமுரளி