#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Friday, November 5, 2010

சைபர் கிரைம் யுத்த சகாப்தத்தில் இந்தியா

 ஸ்டக்நெட் - வைரஸ் -  சைபர் கிரைம் யுத்தத்தின்  முக்கிய அஸ்திரம்  
இன்சாட் 4பி மற்றும் சந்திராயன்   ஸ்டக்நெட் தாக்கி அழித்ததா?

ஆசியாவில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக  சீனா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெருமளவில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஒரு பக்கம் தன் நாட்டில் மலிவான விலையில் உலக நாடுகளுக்கு தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்துவரும் சீனா அதே சமயம் தன் வியாபார எல்லையையும் , தான் ஆட்சி செய்யப்போகும் எல்லையையும் விரிவுப்படுத்தியே வருகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது உலகின் பெரியண்ணனாக இருக்கும் அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்க்கு துணிந்துள்ளது. 

இந்தியா வான்வெளியில் பலசெயற்கை கோள்களை அனுப்பியும் பின் மற்றநாடுகளுடைய செயற்கை கோள்களையும் செலுத்திவருகிறது. சமீபத்தில் நிலவிற்கு சந்திராயனையும் அனுப்பி வெற்றி கண்டது.

இந்த ஸ்டக்நெட் வைரஸ்  இந்தியாவின் இன்சாட் 4B யினை தாக்கியிருக்கலாம் எனவும் இதனை இந்தியாவின் இஸ்ரோவின் திரவ உந்து ஆய்வு மையத்தின் இரண்டு ஊழியர்கள் சிமென்ஸ் நிறுவனத்தின் Siemens S7-400 PLC and SIMATIC WinCC மென்பொருட்களின் வழியாக  ஸ்டக்நெட் நச்சுநிரலை செயல்படுத்தி அதனை வெப்பநிலையை உயர்த்தி அதனை செயலிழக்கவைத்திருக்கலாம். அந்த அளவிற்கு ஸ்டக்நெட் வைரஸ் சக்தி வாய்ந்தது. அதனால் செய்யவும் முடியும்.


ஸ்டக்ஸ்நெட் வைரசானாது  SCADA( supervisory control and Data Acquisition ) மையமாக கொண்டு செயல்படும் பெரிய நிறுவனங்களில்  மேலாண்மை செய்யவும், கட்டுப்பாடுகளை செய்யவும் உருவாக்கப்பட்டது.  இவைகள் போன்ற மென்பொருள்களின் வழியே ஸ்டக்நெட் வைரஸ்கள் ஊடுருவி மிகப்பெரிய அழிவையே ஏற்படுத்ததும். 


ஸ்டக்நெட்  வைரசானது செயலாக்க செயல்முறைக் கட்டுப்பாட்டை நிர்வகிக்கவும் அதை மறைத்தலுக்கும் ஆன செயல்பாடுகளை உள்ளடக்கியது மேலும் ஏற்கனவே உள்ள நிரல்களை மாற்றிவிட்டு தன்னுள்ள உள்ள நிரல்களை அதன் கன்ட்ரோலர்களுக்கு கட்டளைகளை கொடுக்கும் அளவிற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது


மேலும் ஸ்டக்நெட் வைரஸ்களால் ராணுவ ஏவுகணைகளையும் தாக்கி அதன் திசையையும் மாற்றிசெயல்படுத்த வைக்கவும் முடியும்.  இந்த ஸ்டக்நெட் வைரசினால் பெரிய அளவில் சீனாவில்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகப்ட்சமாக 60 லட்சம் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 6552 கணினிகளுக்கு இந்த வைரஸ்களினால் பாதிக்கப்பட்டுள்ளன.  

இந்த வகை வைரஸ்களால்  நிச்சயம் சைபர் யுத்தம் பெருகும் என்று மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை அறிவித்துள்ளது. 
இதன் வழியாகத்தான் நம் நாட்டின் இன்சாட் 4பி தாக்கி அழித்துள்ளனர் எனும்போது  இதே போன்ற ஒரு ப்ரச்னைதான் நம் சந்திராயனுக்கும் அப்போது சந்திராயன் ஏன் இதே முறையில் தாக்கப்பட்டிருக்கூடாது? 

நிலவில் அதிகப்படியான வெப்பத்தில் சந்திராயன் செயலிழந்தது என்று கூறினாலும் அதுபற்றி இங்கே சில சந்தேகங்களை எழுப்பவேண்டியதுள்ளது. 
கிட்டத்தட்ட 11 நாடுகளின் உபகரணங்களை ஏந்தித்தான் சந்திராயன் சென்றுள்ளது. அமெரிக்கா, ஐரொப்பிய நாடுகள் ஆகியவற்றின் உபகரணங்களையும் ஏந்தி சென்றுள்ளது. அப்படியெனில் சந்திராயன் வடிவமைக்கும்போது நிலவில் உள்ள வெப்பநிலை மற்றும் இதர காலநிலைகள் பற்றி அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அவர்கள் உபகரணம் எவ்வளவு வெப்பநிலையையும் தாங்கும் என்றும் கலந்துரையாடல் நிச்சயமாக ஏற்ப்பட்டிருக்கும். அப்படியெனில் அவர்கள் அங்கே நிலவும் வெப்பநிலை பற்றி தகவல் பரிமாறிக்கொள்ளவில்லையா?


ஏன் ஸ்டக்நெட் வைரசால் சந்திராயன் தாக்கப்பட்டிருக்கூடாது? இன்சாட்4பியும் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்பட்ட செயல் இழந்தது.  அந்த வெப்பநிலை மாற்றத்தை உருவாக்கியது ஸ்டக்நெட் வைரஸ் எனும்போது அதே போன்றே ஒரு ப்ரச்னை ஏன் சந்திராயனுக்கும் ஏற்பட்டிருக்க கூடாது.
இன்சாட்4பி ப்ரச்னை பற்றி இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி

http://www.isro.org/news/pdf/INSAT-4B_Glitch.pdf


சரி இவைகள் யார் செய்திருப்பார்கள்.

சீனாதான் என்று அனைவராலும் சந்தேக்கிக்கப்படுகிறது. 

முதல் காரணம்.

இன்சாட்4 பி யின் ட்ரான்ஸ்பாண்டர்களை தூர்தர்சன் நிறுவனமும் சன் டிவியின் குழுமங்களும் அதன் ஒளிபரப்புகளுக்காக பயன்படுத்தி அதன் டிடிஎச் சேவைகளையும் அதனுடன் அளித்துவந்தன. ஆனால் இன்சாட் 4பி திடீரென்று வேலை செய்யாத காரணத்தினால் முடங்கிய சன் டிவி ஆசியாசேட்-5 என்ற செயற்கை கோள்க்கு தன்  வாடிக்கையாளர்களை மாற்றியது. ஆசியா சேட் செயற்கை கோள் Asia Satellite Telecommunications Co., Ltd (AsiaSat) ஆசியா சேட்டிலைட் டெலிகம்யூனிகேசன் எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த நிறுவனத்தின் பெருபான்மையான பங்குகளை வைத்திருப்பது ஜெனரல் எலக்ட்ரிக்ட்ஸ் மற்றும்  சீனாவின் இன்டர்நேசன் ல் ட்ரஸ்ட் மற்றும் முதலீட்டு நிறுவனம்.
சரி இவர்கள் ஏன் நம் செயற்கை கோளை தாக்கவேண்டும்? 

காரணம்1
சில நாடுகளின் செயற்கை கோள்களை நம் இஸ்ரோவும் வான்வெளீக்கு கொண்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது நம் நாட்டின் வருவாயாகவும் விளங்குகிறது. வரும்காலங்களில் இதுபோன்று செயற்கை கோள்களை ஏவுவதும், ராணுவ தளவாடங்களை விற்பது மூலமாகத்தான் மிக அதிக அளவில் பொருளீட்டமுடியும்.

காரணம் 2

இப்படி இந்தியாவின் செயற்கை கோள்கள் அடிக்கடி சிக்கலிற்கு உள்ளாகினால் பல நிறுவனங்களை அவர்களையே நாடும்

காரணம் 3:

இந்தியா வும் , சீனாவும் தங்களை வல்லரசுகளாக ஆக்கிக்கொள்ள பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டுவருகின்றன. அதில் முன்னணியில் நிற்பது சீனா. அதோடு தனக்கு அடுத்த வரவிருப்பது இந்தியா என்பதால் இந்தியாவினை தன்னுடைய பார்வையிலயே வைத்துக்கொள்ள நினைப்பதும் ஒரு காரணம். 

ஆக தரைப்படை, குதிரைப்படை, யானைப்படை போய் இனி சைபர் படை ஒன்று இந்தியாவிற்கு தேவை. 
இ-கவர்னன்ஸ் முறை தற்போது இந்தியாவில் வளரவிருக்கிறது. இவைகளையெல்லாம் மனதில் வைத்து ஒரு பாதுகாப்பான சேவையை தரவேண்டுமெனில் இனி இவை எல்லாம் அவசியம். அவசரம்....

உணர்வது யார்?

---------------------------------------------------------------------------------------------------------

ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------