#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }
Showing posts with label DNS. Show all posts
Showing posts with label DNS. Show all posts

Friday, September 9, 2011

வாங்க பழகலாம்!!, வெப்ஹோஸ்டிங் - 4!!

வணக்கம் நண்பர்களே!!

மீண்டும் நான்காம் பாகத்தில்உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.....
இதுவரை வெப்சர்வர்கள், டிஎன்எஸ் சர்வர்கள், இணையம், பேண்ட்வித் என்றால் என்ன என்பது பற்றி பார்த்தோம்!!

இதுக்கு முன்னாடி நாம பார்த்தது Domain name system எனப்படும் வெப்சைட் பெயர்கள். அதைப்பற்றி விரிவாக பார்ப்போமா?

DNS பற்றி நிறைய பார்த்தோம். இந்த DNS எப்படி முழுமையாக இயங்குகிறது என்று பார்ப்போமா?

DNS பற்றி படிக்காதவர்கள் இங்கே இருந்து படிக்கலாம்...http://itnewshot.blogspot.com/2011/08/2.html

இந்த DNS முழுமையாக இயங்க கீழ்க்கண்ட பதிவுகள் அவற்றிற்கு முக்கியமாக தேவை.


A - பதிவு

இந்த A பதிவானது DNS ன் முக்கியமான அங்கம். அதாவது ஒரு இணையதளத்தின் பெயரை கொடுத்து உலாவும்போது அந்த இணையதளத்தின் ஆவணங்கள் எல்லாம் ஒரு சர்வரில் பதிந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சர்வரின் IP முகவரியை இந்த A பதிவானது கொண்டிருக்கும். 

உதாரணத்திற்கு www.tamilvanigam.com என்று கொடுத்தவுடன் நம் DNS சர்வரானது tamilvanigam.com ல் உள்ள DNS பதிவுகளை படிக்கிறது. அதில் A பதிவில் உள்ள 75.126.38.186 என்ற சர்வர் ஐபி முகவரியை பார்க்கிறது. பின் அந்த முகவரியை தொடர்புகொளளும்போது அங்கே உள்ள டிஎன்எஸ் ஆனது இந்த தளம் இந்த சர்வரில் இந்த பயனருக்கான இடத்தில் இந்த போல்டரில்(கோப்புக்குள்) (உதாரணம்: http://75.126.38.186/tamilva/public_html)  வைக்கப்பட்டுள்ளது. 

இந்த 75.126.38.186 என்ற ஐபி முகவரியானது ஒரு  IPV4 முகவரியை கொண்டுள்ளது. இந்த IPV4 வரிசை எண்கள் எல்லாம் முடிந்துவிட்டதால் தற்போது IPV6 முறைமைக்கு மாறியிருக்கிறார்கள். அந்த ஐபி முகவரி 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334 இப்படி வரும். 


ஐபி பற்றி அறிந்துகொள்ள கீழ்க்கண்ட பதிவை காணவும்
http://itnewshot.blogspot.com/search/label/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF4


AAAA - பதிவு

இந்த பதிவானது  A பதிவை போலத்தான். அவைகள் 12 டிஜிட்களுக்கு(32bit) மட்டுமே இடமளிக்கும். ஆனால் IPV6 முறைக்கு மாறியிருக்கிறார்கள். அந்த ஐபி முகவரி 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334 இப்படி வரும்.  128 bit என்ற அளவில் இருக்கும்.

CName - Canonical name record

 என்பதேன் சுருக்கமே இந்த சிநேம்.

இந்த சிநேம் வலைபதிவர்கள் எல்லாம் அறிவார்கள். ஏனெனில் www.test.blogspot.com என்பதினை .www.test.com என்ற பெயருக்கு மாற்றம் செய்வதை நாம் அனைவரும் அறிவோம். இப்படி ஒரு இணையதள பெயரை சுருக்கியோ அல்லது ஒரு சர்வரில் இருந்து இன்னொரு சர்வருக்கோ  அதே சர்வரில் உள்ள வேறு இடத்திற்கோ மாற்றம் செய்து தருவதுதான் இந்த சிநேம். நுட்பரீதியாக நிறைய பயனளிக்க கூடியது.


MX     - Mail Exchanger Record (MX record) 

இது நம் நிறுவன பெயர்களிலோ அல்லது வேறு நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துவர்களுக்கு தெரியும். நம் மின்னஞ்சல் முகவரிகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்வர்கள் எங்கே இருக்கின்றன என்பதினை கொண்டிருக்கும் விபரம்தான் இந்த mx 


SOA  - Specifies authoritative information

 என்பதன் சுருக்கமே இந்த SOA
இதன் முக்கியபணி நம் வழங்கியின் பெயர் விபரம் மற்றும் அந்த வழங்கியின் தள மேலாளர் முகவரி அடங்கிய விபரம் இருக்கும்.

அடுத்த பாகத்தில் வெப் சர்வர்கள் பற்றி பார்ப்போம்!!

வெப்சைட்தொடர்பான உங்கள் கேள்விகளையும் நீங்கள் தாரளமாக கேட்கலாம்...
நன்றி!



-----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Saturday, August 6, 2011

வாங்க பழகலாம்!!, வெப்ஹோஸ்டிங் - 2!!

வணக்கம் நண்பர்களே,

முதல் பகுதியில் இணையத்தளம் என்றால் என்ன என்று பார்த்தோம்.

முதலில் இணையம் என்று சொல்கிறோமே, இணையம் என்றால் என்ன? 

இணையம் என்பது பிணையத்தால் வந்தது. அட குழப்புதே என்கிறீர்களா.. 

ஒரு சிறிய உதாரணம். நம்மூரில் எல்லா இடங்களிலும் ஏதோ கேபிள் (வடம்)பதிக்கிறார்கள் என்று என்று சாபம் கொடுப்போமே அந்த கேபிள்(வடம்) இணைப்புக்கள்தான் இன்று தொலைத்தொடர்பு துறையின் முதுகெலும்புகள்.  இந்த கேபிள்கள் ஒவ்வொரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு , அந்த ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு என்று நீண்டுகொண்டே செல்லும். முக்கியமான இடங்களில் OFC எனப்படும் பைபர் ஆப்டிகல் வடத்தினை இணைத்திருப்பார்கள்.

இப்படித்தான் இந்தியா முழுதும் உள்ள இணைப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில்தான் இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு இயங்கிவருகிறது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு கடல் வழி வடம் உண்டு. இப்படி எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

அதுபோலத்தான் இந்த தொலைதொடர்பு வடங்களை கொண்டுத்தான் இணையம் இயங்குகிறது. எப்படி.

உதாரணத்திற்கு எங்கள் கிராமமான மத்தூரில்  பிஎஸ்என்எல் வழியாக இணைய இணைப்பு வாங்கியிருக்கிறார்கள் எங்கள் மக்கள். அதே மாதிரி அமெரிக்காவில் உள்ள கிராமத்தில் இருந்து அவர்கள் ஊர் At &T வழியாக ஒரு கிராம மக்கள் இணைய இணைப்பு வாங்கியிருக்கிறார்கள். சிங்கப்பூரிலும், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் மக்கள் இப்படித்தான் ஒரு தொலைதொடர்பு சேவை நிறுவனம் வழியாக இணையத்தினை தொடர்பு கொள்வார்கள்.

இப்படி தொலைதொடர்பு சேவை வழியாக இணையம்வருபவர்களுக்கு மிகச்சரியான தகவல்களை அளிப்பது யார்...
உதாரணத்திற்கு microsoft.com என்று உலாவில் தட்டச்சு செய்து நுழைவு விசையை அழுத்தியவுடன் microsoft.com என்பது எங்கே இருக்கிறது என்ற தகவல்களை நமக்கு தருவது யார்.

இங்கே நமக்கு உதவுபவர்கள் இருவர்.
இணைய வழங்கி, டிஎன்எஸ் வழங்கி ஆகிய இருவரும் இருடல் ஓருயிர் போல... ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் இல்லை. அந்த அளவுக்கு ஒரு நெருக்கம்...

இவற்றில் உள்ள டிஎன்எஸ் வழங்கிதான் பெரிய பணியை செய்கிறார்.  அவர் பணி என்ன?

நம் தொலைதொடர்பு துறை வழியாக இணையதளத்தினை தொடர்புகொள்ளும்போது தொலைதொடர்பு துறையின் DNS அமைப்பு வழியாக இணைய வழங்கி இருக்குமிடத்தை கண்டறிந்து உங்களை சரியான இடத்திற்கு கொண்டு சேர்ப்பவர் தான் இந்த டிஎன்எஸ்.


 Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எல்லாவற்றிற்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். பங்கேற்கும் கணினிகள் மற்றும் எல்லா இயந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் Domain பெயர்களுடன் இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது. அதுவுமில்லாமல் கணினியின் வன்பொருட்களையும், பெயர்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் அவற்றை தொடர்புகொள்வது பெரிய சிரமம். 


  எனவேதான் நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை, இவை இணைய உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா www.tamilvanigam.com என்பது 75.126.38.186 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது. 

இப்ப தொலைதொடர்பு, இணைய வழங்கி , DNS ஆகியவற்றை தெரிந்துகொண்டோம். அடுத்து என்ன ?

வினாக்கள் வரவேற்கப்படுகின்றன,





---------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------