#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Saturday, December 11, 2010

விக்கிலீக்ஸ்- வழியாக லீக் ஆன இந்திய ஆவணங்கள்!!

விக்கிலீக்ஸ்- அதிபர் ஜூலியன் அஸ்ஸஞ்சே நல்லவரா ? கெட்டவரா? என்ற கூறவியலாத அளவிற்கு இருக்கிறது சேதி!

அப்படி என்னதான் செய்தார்?

உலக நாடுகளில் ரகசியமான வகையிலும், முக்கியமான வேலைகளையும் செய்யும் பணிகள் சம்பந்தமான ஆவணங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
அதுவும் உலகிலயே மிக பாதுகாப்புடையது என்று சொல்லப்படும் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனில் இருந்தே ஆட்டைய போட்டிருக்கிறார் என்றால் இவர்தான் மிகச்சிறந்த ஹேக்கர் என்று சொல்லாம். வடிவேலு பாணியில் சொல்லப்போனால் களவானித்தனம் பண்ணாலும் நாசுக்காக பண்ணனும்.

இது சரியா? தவறா என்றால்

ஒரு புறம் சரிதான்.
ஏனெனில்
தாம் என்ன செய்தாலும் நம்மை கேட்க யாரும் இல்லை என்று ஆட்டமாடும் அமெரிக்காவிற்கே  ஆப்பு வைத்த புண்ணியம் அவருக்கு உண்டு. அது ஒரு ஊடகமாக எடுத்துக்கொள்ளலாம். 


அரசாங்கம் என்ன செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் ஜால்ராபோடும் ஊடகங்களின் நடுவிலயே ஊடகத்தின் கடமையை மிகச்சரியாக செய்திருக்கிறார்.

தகவல்கள் எல்லாம் வெளியிட்டபின் தான் தகவல்கள் களவாடப்பட்டுள்ளன என்றே மற்றவர்களுக்கு தெரிந்துள்ளது. அப்படியெனில் இவ்வளவு பெரிய விசயத்தை அவர் எப்படி செய்திருப்பார்?

தவறு?

 எழுதப்பட்ட சட்டத்தின் முன் வேண்டுமானால் அவர் குற்றிவாளியாக கருத்தப்படலாம்.

ஆனால் ஒரு நிறுவனம் தான் செய்யவிருக்கும் பணியைப் பற்றிய முக்கியான வழிகாட்டியை அனைவருக்கும் பொதுவாக வெளியிட்டால்  அது மிக தவறான ஒன்று. ஏனெனில் போட்டி நிறுவனம் அதன் செயல்முறையை கண்டறிந்து தன் னை மாற்றிக்கொண்டுவிடும்.
அதுபோன்ற சில ஆவணங்களும் இதில் இருக்கின்றன.


பாசிட்டிவாக பார்த்தால் வரும்கால நுட்ப உலகில் பாதுகாப்புதான் மிக முக்கியமானது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியிருக்கிறார்.

நெகட்டிவாக பார்த்தால் எல்லாமே தவறுதான்.


இந்திய நாடும் இ-கவர்னன்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வளர்ந்துகொண்டிருக்கிறது. நம் நாட்டு அரசு தளங்களே பல முறை பல பேர்களால் தாக்கப்பட்டிருக்கிறது. தாக்கப்பட்டும் கொண்டிருக்கிறது.

பல முறை தாக்கப்பட்டிருக்கிறது என்று கூச்சல் போடும் அரசு தன் பாதுகாப்பை மேம்படுத்தியிருக்கிறதா என்று பார்த்தால் ஏதோ மேம்போக்காகத்தான் செய்திருக்கும்.

சரி நம்ம விசயத்திற்கு வருவோம்!

இந்த அளவிற்கு அவர்களின் எல்லா ஆவணங்களையும் ஏறக்குறைய இப்போதைக்கு  இரண்டரை லட்சம். அதில் அமெரிக்காவுடையது எவ்வளவு என்று தெரியவில்லை.

அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் நடைபெற்ற விசயங்களை எல்லாம் வெளியிட்டாலும் இந்தியாவில் இருந்தும் ஆவணங்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இருப்பது ஆச்சர்யம்.

அதுவும் ராணுவ சம்பந்தமான ஆவணங்களும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட  அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை எனப்படும் Unique Indenfification Authority of india -ன் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. working paper 1.1 என்று its property of UIDAI என்றும் இருக்கிறது அந்த ஆவணத்தில்.
அப்படி பார்த்தால் இந்தியாவில் இருந்தும் சில ஆவணங்கள் இருக்கிறது.

1.india-army-doctrine-part1-2004 
2.creating-a-unique-id-for-every-resident-in-india-2009
3.india-shoddy-journalism-2008
etc....

.india-army-doctrine-part1-2004 ஆவணத்தில் சிம்லாவில் உள்ள  Headquarters Army Training Command உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் போர் என்றால் என்ன? எத்தனை வகையான போர்கள் உள்ளன என்று இருக்கின்றன தகவல்கள்.

நம் இந்திய தேசிய அடையாள அட்டை பற்றிய முழு செயல்திட்டமும் அதில் இருக்கிறது.

இப்படி பல ஆவணங்கள் அதில் இருக்கின்றன! 

இவைகள் எல்லாம் எப்படி வெளியாயின என்று எந்த இந்திய ஊடகமும் எழுதியதாகஅடியேன் பார்வையில் சிக்கவேயில்லை.

ஜூலியன் அஸ்ஸஞ்சே அண்ணே நீங்க நல்லவரா ? கெட்டவரா?

----------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------