#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Saturday, December 11, 2010

விக்கிலீக்ஸ்- வழியாக லீக் ஆன இந்திய ஆவணங்கள்!!

விக்கிலீக்ஸ்- அதிபர் ஜூலியன் அஸ்ஸஞ்சே நல்லவரா ? கெட்டவரா? என்ற கூறவியலாத அளவிற்கு இருக்கிறது சேதி!

அப்படி என்னதான் செய்தார்?

உலக நாடுகளில் ரகசியமான வகையிலும், முக்கியமான வேலைகளையும் செய்யும் பணிகள் சம்பந்தமான ஆவணங்களை அவர் வெளியிட்டிருக்கிறார்.
அதுவும் உலகிலயே மிக பாதுகாப்புடையது என்று சொல்லப்படும் அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனில் இருந்தே ஆட்டைய போட்டிருக்கிறார் என்றால் இவர்தான் மிகச்சிறந்த ஹேக்கர் என்று சொல்லாம். வடிவேலு பாணியில் சொல்லப்போனால் களவானித்தனம் பண்ணாலும் நாசுக்காக பண்ணனும்.

இது சரியா? தவறா என்றால்

ஒரு புறம் சரிதான்.
ஏனெனில்
தாம் என்ன செய்தாலும் நம்மை கேட்க யாரும் இல்லை என்று ஆட்டமாடும் அமெரிக்காவிற்கே  ஆப்பு வைத்த புண்ணியம் அவருக்கு உண்டு. அது ஒரு ஊடகமாக எடுத்துக்கொள்ளலாம். 


அரசாங்கம் என்ன செய்தாலும் அதை கண்டுகொள்ளாமல் ஜால்ராபோடும் ஊடகங்களின் நடுவிலயே ஊடகத்தின் கடமையை மிகச்சரியாக செய்திருக்கிறார்.

தகவல்கள் எல்லாம் வெளியிட்டபின் தான் தகவல்கள் களவாடப்பட்டுள்ளன என்றே மற்றவர்களுக்கு தெரிந்துள்ளது. அப்படியெனில் இவ்வளவு பெரிய விசயத்தை அவர் எப்படி செய்திருப்பார்?

தவறு?

 எழுதப்பட்ட சட்டத்தின் முன் வேண்டுமானால் அவர் குற்றிவாளியாக கருத்தப்படலாம்.

ஆனால் ஒரு நிறுவனம் தான் செய்யவிருக்கும் பணியைப் பற்றிய முக்கியான வழிகாட்டியை அனைவருக்கும் பொதுவாக வெளியிட்டால்  அது மிக தவறான ஒன்று. ஏனெனில் போட்டி நிறுவனம் அதன் செயல்முறையை கண்டறிந்து தன் னை மாற்றிக்கொண்டுவிடும்.
அதுபோன்ற சில ஆவணங்களும் இதில் இருக்கின்றன.


பாசிட்டிவாக பார்த்தால் வரும்கால நுட்ப உலகில் பாதுகாப்புதான் மிக முக்கியமானது என்பதை உலக நாடுகளுக்கு உணர்த்தியிருக்கிறார்.

நெகட்டிவாக பார்த்தால் எல்லாமே தவறுதான்.


இந்திய நாடும் இ-கவர்னன்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கிறது. வளர்ந்துகொண்டிருக்கிறது. நம் நாட்டு அரசு தளங்களே பல முறை பல பேர்களால் தாக்கப்பட்டிருக்கிறது. தாக்கப்பட்டும் கொண்டிருக்கிறது.

பல முறை தாக்கப்பட்டிருக்கிறது என்று கூச்சல் போடும் அரசு தன் பாதுகாப்பை மேம்படுத்தியிருக்கிறதா என்று பார்த்தால் ஏதோ மேம்போக்காகத்தான் செய்திருக்கும்.

சரி நம்ம விசயத்திற்கு வருவோம்!

இந்த அளவிற்கு அவர்களின் எல்லா ஆவணங்களையும் ஏறக்குறைய இப்போதைக்கு  இரண்டரை லட்சம். அதில் அமெரிக்காவுடையது எவ்வளவு என்று தெரியவில்லை.

அமெரிக்கா மற்றும் உலக நாடுகளில் நடைபெற்ற விசயங்களை எல்லாம் வெளியிட்டாலும் இந்தியாவில் இருந்தும் ஆவணங்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இருப்பது ஆச்சர்யம்.

அதுவும் ராணுவ சம்பந்தமான ஆவணங்களும், சமீபத்தில் அறிவிக்கப்பட்ட  அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை எனப்படும் Unique Indenfification Authority of india -ன் ஆவணத்தை வெளியிட்டுள்ளது. working paper 1.1 என்று its property of UIDAI என்றும் இருக்கிறது அந்த ஆவணத்தில்.
அப்படி பார்த்தால் இந்தியாவில் இருந்தும் சில ஆவணங்கள் இருக்கிறது.

1.india-army-doctrine-part1-2004 
2.creating-a-unique-id-for-every-resident-in-india-2009
3.india-shoddy-journalism-2008
etc....

.india-army-doctrine-part1-2004 ஆவணத்தில் சிம்லாவில் உள்ள  Headquarters Army Training Command உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதில் போர் என்றால் என்ன? எத்தனை வகையான போர்கள் உள்ளன என்று இருக்கின்றன தகவல்கள்.

நம் இந்திய தேசிய அடையாள அட்டை பற்றிய முழு செயல்திட்டமும் அதில் இருக்கிறது.

இப்படி பல ஆவணங்கள் அதில் இருக்கின்றன! 

இவைகள் எல்லாம் எப்படி வெளியாயின என்று எந்த இந்திய ஊடகமும் எழுதியதாகஅடியேன் பார்வையில் சிக்கவேயில்லை.

ஜூலியன் அஸ்ஸஞ்சே அண்ணே நீங்க நல்லவரா ? கெட்டவரா?

----------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Friday, November 5, 2010

சைபர் கிரைம் யுத்த சகாப்தத்தில் இந்தியா

 ஸ்டக்நெட் - வைரஸ் -  சைபர் கிரைம் யுத்தத்தின்  முக்கிய அஸ்திரம்  
இன்சாட் 4பி மற்றும் சந்திராயன்   ஸ்டக்நெட் தாக்கி அழித்ததா?

ஆசியாவில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக  சீனா தன்னை நிலைநிறுத்திக்கொள்ள பெருமளவில் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. ஒரு பக்கம் தன் நாட்டில் மலிவான விலையில் உலக நாடுகளுக்கு தங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்துவரும் சீனா அதே சமயம் தன் வியாபார எல்லையையும் , தான் ஆட்சி செய்யப்போகும் எல்லையையும் விரிவுப்படுத்தியே வருகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது உலகின் பெரியண்ணனாக இருக்கும் அமெரிக்காவிற்கே சவால் விடும் அளவிற்க்கு துணிந்துள்ளது. 

இந்தியா வான்வெளியில் பலசெயற்கை கோள்களை அனுப்பியும் பின் மற்றநாடுகளுடைய செயற்கை கோள்களையும் செலுத்திவருகிறது. சமீபத்தில் நிலவிற்கு சந்திராயனையும் அனுப்பி வெற்றி கண்டது.

இந்த ஸ்டக்நெட் வைரஸ்  இந்தியாவின் இன்சாட் 4B யினை தாக்கியிருக்கலாம் எனவும் இதனை இந்தியாவின் இஸ்ரோவின் திரவ உந்து ஆய்வு மையத்தின் இரண்டு ஊழியர்கள் சிமென்ஸ் நிறுவனத்தின் Siemens S7-400 PLC and SIMATIC WinCC மென்பொருட்களின் வழியாக  ஸ்டக்நெட் நச்சுநிரலை செயல்படுத்தி அதனை வெப்பநிலையை உயர்த்தி அதனை செயலிழக்கவைத்திருக்கலாம். அந்த அளவிற்கு ஸ்டக்நெட் வைரஸ் சக்தி வாய்ந்தது. அதனால் செய்யவும் முடியும்.


ஸ்டக்ஸ்நெட் வைரசானாது  SCADA( supervisory control and Data Acquisition ) மையமாக கொண்டு செயல்படும் பெரிய நிறுவனங்களில்  மேலாண்மை செய்யவும், கட்டுப்பாடுகளை செய்யவும் உருவாக்கப்பட்டது.  இவைகள் போன்ற மென்பொருள்களின் வழியே ஸ்டக்நெட் வைரஸ்கள் ஊடுருவி மிகப்பெரிய அழிவையே ஏற்படுத்ததும். 


ஸ்டக்நெட்  வைரசானது செயலாக்க செயல்முறைக் கட்டுப்பாட்டை நிர்வகிக்கவும் அதை மறைத்தலுக்கும் ஆன செயல்பாடுகளை உள்ளடக்கியது மேலும் ஏற்கனவே உள்ள நிரல்களை மாற்றிவிட்டு தன்னுள்ள உள்ள நிரல்களை அதன் கன்ட்ரோலர்களுக்கு கட்டளைகளை கொடுக்கும் அளவிற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது


மேலும் ஸ்டக்நெட் வைரஸ்களால் ராணுவ ஏவுகணைகளையும் தாக்கி அதன் திசையையும் மாற்றிசெயல்படுத்த வைக்கவும் முடியும்.  இந்த ஸ்டக்நெட் வைரசினால் பெரிய அளவில் சீனாவில்தான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகப்ட்சமாக 60 லட்சம் கணினிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் 6552 கணினிகளுக்கு இந்த வைரஸ்களினால் பாதிக்கப்பட்டுள்ளன.  

இந்த வகை வைரஸ்களால்  நிச்சயம் சைபர் யுத்தம் பெருகும் என்று மென்பொருள் பாதுகாப்பு நிறுவனமான கேஸ்பர்ஸ்கை அறிவித்துள்ளது. 
இதன் வழியாகத்தான் நம் நாட்டின் இன்சாட் 4பி தாக்கி அழித்துள்ளனர் எனும்போது  இதே போன்ற ஒரு ப்ரச்னைதான் நம் சந்திராயனுக்கும் அப்போது சந்திராயன் ஏன் இதே முறையில் தாக்கப்பட்டிருக்கூடாது? 

நிலவில் அதிகப்படியான வெப்பத்தில் சந்திராயன் செயலிழந்தது என்று கூறினாலும் அதுபற்றி இங்கே சில சந்தேகங்களை எழுப்பவேண்டியதுள்ளது. 
கிட்டத்தட்ட 11 நாடுகளின் உபகரணங்களை ஏந்தித்தான் சந்திராயன் சென்றுள்ளது. அமெரிக்கா, ஐரொப்பிய நாடுகள் ஆகியவற்றின் உபகரணங்களையும் ஏந்தி சென்றுள்ளது. அப்படியெனில் சந்திராயன் வடிவமைக்கும்போது நிலவில் உள்ள வெப்பநிலை மற்றும் இதர காலநிலைகள் பற்றி அமெரிக்காவிற்கு நன்றாகவே தெரிந்திருக்கும். அவர்கள் உபகரணம் எவ்வளவு வெப்பநிலையையும் தாங்கும் என்றும் கலந்துரையாடல் நிச்சயமாக ஏற்ப்பட்டிருக்கும். அப்படியெனில் அவர்கள் அங்கே நிலவும் வெப்பநிலை பற்றி தகவல் பரிமாறிக்கொள்ளவில்லையா?


ஏன் ஸ்டக்நெட் வைரசால் சந்திராயன் தாக்கப்பட்டிருக்கூடாது? இன்சாட்4பியும் வெப்பநிலை மாற்றத்தால் ஏற்பட்ட செயல் இழந்தது.  அந்த வெப்பநிலை மாற்றத்தை உருவாக்கியது ஸ்டக்நெட் வைரஸ் எனும்போது அதே போன்றே ஒரு ப்ரச்னை ஏன் சந்திராயனுக்கும் ஏற்பட்டிருக்க கூடாது.
இன்சாட்4பி ப்ரச்னை பற்றி இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்தி

http://www.isro.org/news/pdf/INSAT-4B_Glitch.pdf


சரி இவைகள் யார் செய்திருப்பார்கள்.

சீனாதான் என்று அனைவராலும் சந்தேக்கிக்கப்படுகிறது. 

முதல் காரணம்.

இன்சாட்4 பி யின் ட்ரான்ஸ்பாண்டர்களை தூர்தர்சன் நிறுவனமும் சன் டிவியின் குழுமங்களும் அதன் ஒளிபரப்புகளுக்காக பயன்படுத்தி அதன் டிடிஎச் சேவைகளையும் அதனுடன் அளித்துவந்தன. ஆனால் இன்சாட் 4பி திடீரென்று வேலை செய்யாத காரணத்தினால் முடங்கிய சன் டிவி ஆசியாசேட்-5 என்ற செயற்கை கோள்க்கு தன்  வாடிக்கையாளர்களை மாற்றியது. ஆசியா சேட் செயற்கை கோள் Asia Satellite Telecommunications Co., Ltd (AsiaSat) ஆசியா சேட்டிலைட் டெலிகம்யூனிகேசன் எனும் நிறுவனத்திற்கு சொந்தமானது. அந்த நிறுவனத்தின் பெருபான்மையான பங்குகளை வைத்திருப்பது ஜெனரல் எலக்ட்ரிக்ட்ஸ் மற்றும்  சீனாவின் இன்டர்நேசன் ல் ட்ரஸ்ட் மற்றும் முதலீட்டு நிறுவனம்.
சரி இவர்கள் ஏன் நம் செயற்கை கோளை தாக்கவேண்டும்? 

காரணம்1
சில நாடுகளின் செயற்கை கோள்களை நம் இஸ்ரோவும் வான்வெளீக்கு கொண்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது நம் நாட்டின் வருவாயாகவும் விளங்குகிறது. வரும்காலங்களில் இதுபோன்று செயற்கை கோள்களை ஏவுவதும், ராணுவ தளவாடங்களை விற்பது மூலமாகத்தான் மிக அதிக அளவில் பொருளீட்டமுடியும்.

காரணம் 2

இப்படி இந்தியாவின் செயற்கை கோள்கள் அடிக்கடி சிக்கலிற்கு உள்ளாகினால் பல நிறுவனங்களை அவர்களையே நாடும்

காரணம் 3:

இந்தியா வும் , சீனாவும் தங்களை வல்லரசுகளாக ஆக்கிக்கொள்ள பெரும் முயற்சிகள் எடுத்துக்கொண்டுவருகின்றன. அதில் முன்னணியில் நிற்பது சீனா. அதோடு தனக்கு அடுத்த வரவிருப்பது இந்தியா என்பதால் இந்தியாவினை தன்னுடைய பார்வையிலயே வைத்துக்கொள்ள நினைப்பதும் ஒரு காரணம். 

ஆக தரைப்படை, குதிரைப்படை, யானைப்படை போய் இனி சைபர் படை ஒன்று இந்தியாவிற்கு தேவை. 
இ-கவர்னன்ஸ் முறை தற்போது இந்தியாவில் வளரவிருக்கிறது. இவைகளையெல்லாம் மனதில் வைத்து ஒரு பாதுகாப்பான சேவையை தரவேண்டுமெனில் இனி இவை எல்லாம் அவசியம். அவசரம்....

உணர்வது யார்?

---------------------------------------------------------------------------------------------------------

ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Sunday, October 17, 2010

பிசிசிஐ தலைவர் சீனிவாசன் மொபைல் தாக்கப்பட்டது

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் திரு.சீனிவாசன் அவர்களின் மொபைல் எண் தாக்கப்பட்டு அதிலிருந்து  ஐபில் கிரிக்கெட் அணிகளின் முதலாளிகளுக்கு  "" ஐபிஎல்-ன் முன்னாள் தலைவர் லலித் மோடி யுடன் தொடர்பு வைத்திருந்ததால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்போவதாக " அந்த எஸ்எம்எஸ்-ல் தகவல் இருந்துள்ளது. இது குறித்து ஐபிஎல் நிறுவனங்களின் முதலாளிகள் சீனிவாசனை அழைத்து விபரம் கேட்டபின் தான் அவருக்கே அந்த தகவல் தெரியவந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து சைபர் கிரைம்  புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சைபர் கிரைம் அலுவலர்கள் அவரின் மொபைல் சேவை வழங்குநர்களிடம் இருந்து தகவல் கேட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடப்பதாகவும் கூறியுள்ளனர்.

சரி இப்ப நம்ம விவாதிப்போம்!

இப்படியும் சாத்தியம் உண்டா? என்று கேட்ப்போருக்கு

ஒரு உதாரணம்.

இப்போது எல்லா மொபைல்களும் இணையத்துடன் கூடிய இணைப்புகளுோடுதான் வருகின்றன. இணையம் என்று வரும்போதே பாதுகாப்பு சிக்கல்கள் நிறைய வரும்
.
உதாரணம் ஒரு குறிப்பிட்ட எண்ணில் இருந்து உங்களுக்கு எஸ்எம்எஸ் வரும். அந்த எஸ்எம்எஸ்-ல் இந்த முகவரியில் சென்று உங்களுக்கு தேவையான பாடல்களை தரவிறக்கம் செய்யலாம் என்று வரும். அப்படி அதை கிளிக் செய்யும்போது தாக்குநர்கள் நமது மொபைலை பற்றிய தகவலை முதற்கட்டமாக அறிந்துகொள்வார்கள்.

பின் இதே போன்று ஒரு தகவல்களை அனுப்பி நம்மில் தகவல்களையும் அல்லது அவர்களின் நச்சு மென்பொருட்களை நமது மொபைலிற்கு தரவிறக்கம் செய்துவிட்டால் மேற்கண்ட நிகழ்ச்சிகள் எல்லாம் சாதாரணமாக நடக்கும்.

இணையம் பெருக பெருக, நம் நாட்டின் பாதுகாப்பு கொள்கைகள் மிக அதிக அளவில் கட்டுப்பாடு பெருகும்போதுதான் இது மாதிரியான சிக்கல்கள் ஒரளவு குறையும். அதுவரை இது தொடரும்.............

மேலும் ஒரு உதாரணம்
இன்று ஹேக்கர்கள் மொபைல் போனை காசு கொடுத்து ரீசார்ஜ் செய்யாமல் அந்த நுட்பங்களை அறிந்துகொண்டு அவர்கள் ரீசார்ஜ் செய்கிறார்கள். அது நடக்கவாய்ப்புகள் அதிகம். எப்படி ?

எந்த ஒரு வழங்குநரும் ரீசார்ஜ் செய்வதற்கு ஒரு எண் இருக்கும். அந்த எண்ணிற்கு தகவல் சென்றவுடன் அது அவர்களின் வழங்கியை தொடர்புகொண்டு அந்த வழங்கியில் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற தகவல் படி வழங்கியானது செயல்படத்தும். ஸ்கிராஸ்ட்ச் கார்டு -ன் எண்ணை ரீசார்ஜ் செய்யவேண்டிய என்னுடன் சேர்ந்து நம் ப்ரவைடருக்கு அனுப்புவது

ஸ்கிராட்ஸ் கார்ட் எண்ணை பெற்றுக்கொண்ட வழங்கி அந்த எண் சரியான எண்தானா அல்லது வேறு யாரேனும் பயன்படுத்தியிருக்கிறார்களா? என்று சோதனை செய்யும்.

அந்த எண் சரியான எண் என்றவுடன் அது எவ்வளவு ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யப்படுள்ளது மற்றும் அது யாருடைய கணக்கிற்கு சென்று சேரவேண்டும் என்ற வழிமுறைகள் தொடர்ச்சியாக அந்த சேவை வழங்குநரின் வழங்கியில் இருக்கும்.
இப்படித்தான் ஒவ்வொரு முறை நாம் ரீசார்ஜ் செய்யும்போது நடக்கும்.!?
இந்த வழிமுறைகளை கண்டறியும் தாக்கர்கள் சேவை வழங்கியின் வழிமுறைகளை கண்டறிந்து அவர்களுக்கும் அதன் வழிமுறைகளை  கண்டறிந்து அதன் படி இலவசமாக ரீசார்ஜ் செய்துகொள்கிறார்களாம்.

-----------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Sunday, October 10, 2010

தமிழில் எந்திரன் - சாத்தியமா?

  நிச்சயமாக தமிழில் எந்திரன்  பட விமசர்னம் கிடையாது. ஆனால் உண்மையாகவே  எந்திரன் படத்தில் வரும் எந்திரன் முழுவதும் தமிழில் பேசுவது, தமிழில் பாடுவது, ஆடுவது, சிந்திப்பது என எல்லாம் தமிழாக இருக்கின்றது. உண்மையாக தமிழில் எந்திரன் வேண்டுமென்றால் என்ன அவசிய தேவை.
இன்னமும் தமிழை அடிப்படையாக வைத்து முழுமையான  மின் அகராதியே உருவாக்கப்படவில்லை.மேலும்  தமிழ் ஓசிஆர்,தமிழ்  ஸ்பீஸ் ரெகனைசேசன் மென்பொருட்கள் இன்னமும் முழுமை பெறாமல் இருக்கும்போது இவையெல்லாம் சாத்தியமா?

இவைகளெல்லாம் சாத்தியமானால்

எதிர்கால உலகிற்கு  மெயின்பிரேம் கணினிகளும், இந்த எந்திரன்கள் மட்டுமே போதும்.
மென்பொருளுக்கும் தமிழ் எந்திரனுக்கும் என்ன சம்பந்தம்னு கேட்கறிங்களா?
எந்த ஒரு  இயந்திரம் செயல்படுத்தப்பட வேண்டுமென்றால் எந்திரனுக்கு நம்ம தர்ற தகவல்கள் எல்லாம் மென்பொருட்கள் வழியாகத்தானே அனுப்பப்போறோம். அப்ப அந்தந்த வேலைகளுக்கு அந்தந்த மென்பொருள் தேவைதானே. எந்திரனை உருவாக்க என்ன தேவை என்று சொல்லியிருந்தாலும் எந்திரன் என்று வரும்போது சில பகுதிகள் தானாகவே உள்ளிணைந்துவிடும். ஒன்று அதிநவீன கேமிராக்கள், ஆங்கில ஒலி உணர்விகள், சிபியு என ஒரு எந்திரனுக்கான அனைத்தும் சாதாரண எந்திரனில் வந்துவிடும்.

தமிழ் கலைச்சொற்கள் களஞ்சியம்

எதுவா இருந்தாலும் முதலில் சொற்கள் முக்கியம். பிறந்த குழந்தைக்கு நாம் முதன் முதலில் அம்மா, அப்பா என்று எப்படி சொல்லித்தருகிறோமா அப்படித்தான்  இந்த எந்திரனுக்கும் தமிழில் அமைந்துள்ள அத்தனை வார்த்தைகளும் தேவைப்படும். இதற்கு தமிழில் கலைச்சொற்கள் மிக முக்கியம். இருக்கின்ற அத்தனை வார்த்தைகளுக்கும் பொருட்களோடு நாம்  அதற்கு கொடுத்தாக வேண்டும். மிக மிக அடிப்படையாக விசயம் இதுதான். ஆனால் இப்போது இருக்கும் கலைச்சொற்கள் எல்லாம் பத்தவே பத்தாது. ஏனெனில் நம் தமிழ் எந்திரனுக்கு எல்லா வகையான சொற்களையும் மனிதர்கள் பேசும் விதத்தினையும் நாம் விளக்கியாகவேண்டும்.
ஏனெனில் எந்திரன் ஒரு முட்டாள் வேலையாள். எனவே அவரிடம் நாம்தான் விளக்கிச்சொல்லவேண்டும்.
 
ஒலிஉணர்வி

தமிழ் கலைச்சொற்கள் களஞ்சியம் முடித்தபின் முக்கியமான விஷயம் இந்த ஒலிஉணர்விதான். ஏனெனில் மதுரை காரர்கள் ஒரு மாதிரியும், நெல்லைக்காரர்கள் ஒரு மாதிரியும், வெளிநாட்டவர்கள் ஒரு மாதிரியும் பேசுவார்கள். எனவே இம்மாதிரியான பேச்சுக்கள் அனைத்தையும் நாம் ஒருங்கிணைத்து ரோபோவின் சிபியுவில் ஏற்றிவிட்டால் ரோபா எல்லா வகையா பேச்சு வழக்குகளையும் உணர்ந்துவிடும். மேலும் மனிதர்களின் உணர்ச்சிகளின் ஏற்போது ஏற்படுகின்ற ஒலிகளையும் நிச்சயமாக ஒருங்கிணைக்கவேண்டும். ஏனெனில் ஆபத்து நேரத்தில் அய்யோ அம்மா காப்பாத்துங்க என்று கத்தும்போது அது ஒரு சந்தோசமான குரல் என்று ரோபோ உணர்ந்துவிட்டால் ஆப்பு நமக்குத்தான்.  எனவே ஒலிகளில் விலங்கினங்கள், ஊர்வன, நடப்பன, பறப்பன என இவ்வுலகில் உள்ள எல்லா சப்தங்களையும் ரோபாட்டிற்கு  உணர்த்தப்படவேண்டும்.
 
எழுத்துஉணர்விகள் - ஓசிஆர்

தமிழை அடுத்த தொழில்நுட்பத்திற்கு கொண்டு போகவேண்டுமென்றால் தமிழ் ஓசிஆர் மிக முக்கியமான ஒன்று என்பதில் சிறிய மாற்றம்கூட கிடையாது. எழுத்துஉணர்விகளை உருவாக்கு சிக்காலன மொழிகள் என்பதில் தமிழுக்கும் இடம் உண்டோ ? ஏனெனில் ஆங்கிலத்திற்கு வெறும் 26 வார்த்தைகள்தான். ஆனால் தமிழுக்கு அப்படியல்லவே, மெய்யெழுத்துக்கள் ஒவ்வொன்றுடனும் உயிரெழுத்து சேரும்போது உருவாகும் எழுத்துக்கள் உயிர்மெய்  எழுத்துகள் மொத்தம் 12x18 = 216 ஆகும். இவற்றுடன் 12 உயிர் எழுத்துக்களும், 18 மெய் எழுத்துக்களும் ஓர் ஆய்த எழுத்தும் சேர்ந்து மொத்தம் 247 தமிழ் எழுத்துக்கள்.  ஆக இவற்றிற்கு ஓசிஆர் உருவாக்கும்போது நாம் குறைந்தபட்சம் ஒரு நூறு கையெழுத்துக்களையாவது ஒப்பிடவேண்டும். அப்போதுதான் ஒரளவாவது கையெழுத்துக்களை எளிதாக கண்டறிய வழிவகை செய்யமுடியும். மேலும் எழுத்துஉணர்விகளின் பயன்பாட்டின் போது கலைச்சொற்கள் பெரிய பங்கு வகிக்கின்றன.
 
தமிழ் தேடல்தளம்

மேற்கண்ட மூன்றும் சரி. இது எதுக்கு என்கிறீர்களா? இதுவும் மிக முக்கியம்தான். ஏனெனில்  தமிழ் கலைச்சொற்கள், ஒலிஉணர்விகள், எழுத்துஉணர்விகள் என்று எல்லாம் எப்படியும் இன்னமும் சில பல வருடங்களில் மேற்கண்டவை எல்லாம் வந்துவிடும்.  அப்படி வந்துவிட்டால் நமக்கு தேவையான தகவல்களை கண்டறிய நமக்கென்று ப்ரத்யோகமாக ஒரு தேடல்தளம் வேண்டுமில்லையா? ஏன் கூகிள் கூடத்தான் தேடுகிறது என்று சொல்பவர்களுக்கு ஒரே பதில் . அது ஒரு கணிக்கப்பட்ட தகவல். துல்லிய தகவல் .  உதாரணம் என்னவென்று என்று தேடினால் என்னவென்று என்ற வார்த்தையை மட்டுமே கூகிள் தேடும். ஆனால் என்ன என்று என்ற வார்த்தைகளையும் தேட வேண்டும். எனவே தமிழ் இலக்கணத்தை அடிப்படையாக வைத்து இத்தேடல்களை உருவாக்கவேண்டும்.
கலைச்சொற்கள், ஒலிஉணர்வி, எழுத்துஉணர்வி மற்றும் தமிழ்த்தேடல் தளம் ஆகியவை உருவாக்கியபின் எந்திரனில் இவற்றை பொருத்துவதற்கு மிகுந்த சிரமம் இருக்காது. அவற்றினை ரோபாட்டிற்கு ஏற்ற மொழியில் மாற்றினால் போதுமானது.
 
எந்திரனுக்கான இயங்குதளம்

அட எந்திரனுக்கும் இயங்குதளமா?ன்னு கேட்டுராதிங்க. மேற்கண்ட எல்லாவற்றையும் எந்திரனுக்கு புரியவைக்க நிச்சயமாய் ஒரு இயங்குதளம் வேண்டும். ஏற்கனவே பல மென்பொருட்கள் இருக்கின்றன என்றாலும் இங்கேயும் தமிழுக்கென்று ஒன்று தனியாக வேண்டும்.
இதோ மைக்ரோசாப்டும் களமிறங்கிவிட்டது ரோபாட்டில்

http://www.microsoft.com/robotics/

எந்திரனுக்கான ஓபன் சோர்ஸ் மென்பொருள் 

http://www.ros.org/wiki/


இதனால் என்ன பயன்?


தமிழ் எந்திரன் உருவாகும்போது அவற்றினை அரசாங்கத்தில் உள்ள  அரசின் ஆவணங்கள் எல்லாம் முறையாக ஸ்கேன் செய்யவைத்து அவற்றினை வருடி/நெருடி வெகு எளிதாக மின்னாக்கம் செய்துவைத்துவிடலாம். தேவையேற்படும்போது தேடி பெற்றுக்கொள்ளலாம். 100 பேர் சேர்ந்து 10 வருடங்களில் செய்யும் வேலையை நம்ம தமிழ் எந்திரன் ஒரே வருடத்தில் செய்துமுடித்துவிடுவார். இவற்றுடன் ஒரு மெயின்ப்ரேம் சர்வரை இணைத்துவிட்டால் நெருடிய தகவல்கள் எல்லாம் நொடியில் சேமிக்கப்பட்டுவிடும். ரொம்ப சிம்பிள்தானே.....

பயன் ஒன்றல்ல, இரண்டல்ல ஒராயிரம் பயன் உண்டென்றாலும் நாள்தோறும் பெருகும் மக்கள் தொகையினை கணக்கில் வைத்தால் வரும்காலத்தில் மனிதர்களின் வேலையை எந்திரன் செய்யும். ஆனால் பலஆயிரக்கணக்கானோர் கதி ?
-----------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? WWW.RUPEESHOST.COM

Sunday, July 25, 2010

க்ளவுட் கம்ப்யூட்டிங் - பாகம்1


தலைப்ப பார்த்தவுடனே சன்டிவி மாதிரியே விளம்பரம் பண்றேன்னு நினைச்சுக்காதி்ங்க. ஒரு வேளை அக்குழுமங்களில் பணியாற்றியதின் பாதிப்பாக கூட இருக்கலாம்

அது ஓண்ணுமில்லை
இந்திய இணையத்தள சேவை வரலாற்றில் முதல் முறையாக மேகக் கணினி இணையத்தளச் சேவையை - Cloud Hosting சிபேனல் வசதியுடன் நாங்கள் தான் முதலில் வழங்க உள்ளோம் என்பதைத்தச்சொல்லத்தான் இந்த தலைப்பு.
இச்சேவையை பற்றி பார்ப்பதற்கு முன்பு  மேகக்கணினியாக்கம் என்றால் என்ன ன்னு பார்ப்போமா?

வெப்சைட் சேவையை பல நிறுவனங்கள் வழங்கிவருகின்றன என்றாலும் பல நிறுவனங்கள் பணத்தை குறி வைத்து இயங்குகின்றன :) அப்படிப்பட்ட  நிறுவனத்தில் தான் அடியேனும் முதன் முதலில் 2004-ல் வாங்கி மாட்டிக்கொண்டேன். :) அது தனி அனுபவம். ஆனால் அந்த அனுபவம்தான் இன்று தனியாக இணையத்தள சேவையை குறிவைத்து இறங்க காரணமாக அமைந்தது.

இன்றைய காலக்கட்டத்தில் இணையத்தளம் வைத்திருப்பவர்கள் மிக அதிகமான ப்ரச்னைகளை சந்தித்திருக்கிறார்கள்.
 • தாக்கர்களின் ப்ரச்னை
 • கஷ்டப்பட்டு உருவாக்கிய தளத்தினை சிலர் ஸ்பாம் தளங்களில் மாற்றிவிடுவார்கள்.
 • நாம் கேட்ட வசதி கிடைக்காது. அப்படியே கேட்டாலும் மிக அதிகமாக பணம் வாங்குவார்கள்.
 • அதிகப்படியான ட்ராபிக், அதிகப்படியான பைல்கள் ஹோஸ்டிங் செய்வது என்று பல ப்ரச்னைகள் இருக்கிறது.

இப்படிப்பட்ட எந்த ப்ரச்னையும் இல்லாமல் ? வெப்சைட் நடத்த வேண்டுமென்றால் மேகக் கணினி சேவைக்கு மாறிவிடுங்கள்..

 • தாக்கர்கள் தளத்தினை தாக்கிவிட்டால் அதை தாக்கர்களின் தரவுத்தளத்தில் சேமித்துவிடுவார்கள். இப்படி சேமிக்கும்போது பல தாக்கர்கள் தொடர்ச்சியாக தாக்கிக்கொண்டே இருப்பார்கள். அப்போது நம் வழங்கியின் ஐபி யை மாற்றவேண்டுமெனில் தனியாக பணம் கட்டவேண்டும்.
 • ஆனால் மேகக்கணினியில் நம் வழங்கியின் ஐபி முகவரியை உடனடியாக மாற்றிவிடலாம். இதனால் தாக்கர்களிடம் நம் தளம் பற்றிய விபரங்கள் இருந்தாலும் எடுபடாது.
 • குறிப்பு : ஐபி முகவரியை மாற்றவெண்டுமெனில் நாம் கணினியை ரீஸ்டார்ட் செய்யவேண்டும். ஆனால் இங்கே உடனடியாக மாற்றிவிடலாம்.
 • இரண்டாவது ; இதை நமது எல்லாவகையான மென்பொருட்களையும் நிறுவிக்கொள்ளலாம். இது ஒரு நேரடி வழங்கியாகவே பயன்படுத்திக்கொள்ளலாம்.
 • அதிகப்படியான ட்ராபிக் னாலும் ப்ரச்னையா? கவலையே வேண்டாம்.
 • இங்கே லோடு பேலன்ஸ் வழியாக அனைத்தையும் எளிதாக சமாளிக்கலாம்.
 • இதைவிட குறிப்பிட்டத்தக்க அளவு உடனடியாக ஹார்டுவேர்களை மேம்படுத்தவோ குறைக்கவோ செய்யலாம்! உடனடியாக.
 • உதாரணத்திற்கு ஒரு தளத்திற்கு ஒரு நாள் மட்டும் அதிகப்படியான ராம்(RAM) வேண்டுமோ, இடம் வேண்டுமோ, அல்லது ப்ராசசரின் வேகம் கூட்டவேண்டுமானால் கூடகூட்டவோ குறைக்கவோ செய்யலாம். சர்வரை ரீஸ்டார்ட் செய்யாமலே உடனுக்குடன்
 • மேலும் தகவல் பாதுகாப்பு என்பது இங்கே அதிகப்படியான வசதியுடன் இருக்கும். எனவே டேட்டா பேக் அப் அதிகப்படியான வசதியும் உண்டு.
 • எல்லாவற்றையும் விட 100% அப்டைம் உறுதி. மெயின்டனஸ் நேரத்தில் மட்டுமே ஆப் செய்யப்படும்.
இச்சேவையை நாங்கள் இந்தியாவில் முதல்முறையாக சிபேனல் வசதியுடன் வழங்குவதில் பெரு மகிழச்சி அடைகிறோம்.
அடுத்த வருடங்களில் சொந்தமாகவே டேட்டாசென்டர் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறேன். அதுவும் அதிகப்பட்சம் ஒரு வருடத்தில் நடைபெறும் என்று நம்புகிறேன்.
அதிகப்பட்ச நுட்ப வசதி / குறைந்த செலவில் வழங்கவேண்டும் என்பதே எங்களது குறிக்கோள் :)

இதுபோன்று நாங்கள் தொழில்நுட்ப அளவில் பல அரிய வசதிகளையும் அளிக்க இருக்கிறோம்.
மொபைலில் இருந்து கணினிக்கு பேசுவது, மொபைலில் இருந்து கணினிக்கு கான்பரன்ஸ் வழியாக பேசுவது ,
இணையத்தளத்தில் தாக்கர்களிடம் இருந்து பாதுகாக்கும் மென்பொருட்களையும், இணையத்தளங்களுக்கு சோதித்துவருகிறேன். வெகு விரைவில் அவைகளும் வெளியிடப்படும்....

அதிகப்பட்ச நுட்ப வசதி/ குறைந்த செலவில்
மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் தயங்காமல் கேளுங்கள்


மேலும் விபரங்களுக்கு
www.rupeeshost.com 
நன்றி!
என்றும் அன்புடன்
செல்வ.முரளி

 தொடரும்..................

-----------------------------------------------------------
உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். 
உடனேவாங்க WWW.TECHNET24X7.COM --------------------------------------------------------

Tuesday, April 6, 2010

சைபர் கிரைம் கவனிக்குமா?

அலிபாபா.காம் இணையதளம் வணிக உலகில் மிக முக்கியமான இணையதளம். புதிதாக வளர்ந்து வருபவர்களுக்கும், பொருட்களை விற்க உதவுவதற்கும் இது மிகவும் உதவுகிறது.
இந்த இணைய தளத்தில் சும்மா உலாவிக்கொண்டிருந்தபோது இதோ அங்கே நித்தியானந்தர் பெயரில் ஒரு ப்ரா விற்பதாகவும் அது தமிழ்நாடு அரசாங்கம் அனுமதியுடன் விற்பதாகவும் தொடர்புக்கு உள்ள முகவரியில் சன்டிவி.காம் என்ற பெயரும் இருக்கிறது. மேலும் இதில் உள்ள படங்கள் அனைத்தும் xxx படங்களாகவே இருக்கிறது.  ஒரு பிரபல இணையதளத்தில்  நம்மூர் முதல்வர் படத்தை போட்டுவிட்டு உள்ளே xxx படங்களை
வைத்திருக்கிறார்கள்.
இதை அரசாங்கம் கவனிக்குமா அல்லது சைபர் க்ரைம்தான் கவனிக்குமா?
http://www.alibaba.com/product-free/109524409/ladys_bra.html
http://www.alibaba.com/member/in110083454/contactinfo.html


உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------

Thursday, January 28, 2010

அடுத்த கட்ட தொழில்நுட்ப ஆபத்து : பாட்நெட்ஸ்


Botnet.svg
பாட்நெட்ஸ் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு முன்னால் சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
தேடல்தளம்
பாட்ஸ்
ரோபாட்ஸ்
அதென்ன தேடல் தளம்.

இதோ இன்று கூகிளாண்டவர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கூகிள் தேடல் இயந்திரமும் ஒரு தேடல்தளம்.
தேடல்தளத்தில் பல துறைகள் உள்ளன. பொதுவான தேடல், துறை தேடல், தேடல்களுக்கெல்லாம் தேடல் என்று பல துறைகள் உள்ளன. (இது பற்றி பின்னர் எழுதுகிறேன்)

சரி தேடல் தளம் என்றால்என்ன என்று பார்த்தோம். இப்ப தேடல்தளங்கள் நாம் தேடியவுடன் எப்படி தகவல்களை தருகின்றது... அதுவும் வேறு வெப்சைட் ல் இருக்கும் தகவல்களை இது திரட்டி தருகின்றது.....

அங்கே உதவுவதுதான்

பாட்ஸ்


    பாட்ஸ் என்பது இன்று பரவலாக பயன்படுத்தப்படும் /இணையத்தின் மதிப்புமிக்க சொத்து எனலாம். ஆமாம் ஏனெனில் நமது வலைத்தளமோ அல்லது இணையதளமோ தேடல் தளங்களில் தேடியவுடன் வருவதற்கு ஆவண செய்வது இந்த பாட்தான்.
இதன் முக்கிய வேலை நமது தளத்தில் உள்ள இதர இணையத்தளங்களில் உள்ள தகவல்களை தேடல்தளங்களின் டேட்டாபேஸ்களுக்கு மிகச்சிதமாக கொண்டுபோய் சேர்ப்பது இந்த பாட்ஸ்தான்

இங்கே முக்கிய கேள்வி. நமது தளத்தில் உள்ள தகவல்களை தேடல் தளத்தில் கொண்டு போகின்றனவே என்று அது பாதுகாப்பானதா என்று கேட்கலாம்.
இந்த இடத்தில் நமக்கு உதவுவதுதான்

ரோபாட்ஸ்

நமது தளத்தில் ரோபாடிக்ஸ் என்ற பெயரில் ஒரு ஆவணம் இருக்கும். அதனுள்  நமது தளத்தில்  அந்த பாட்கள் எங்கெல்லாம் தகவல்களை திரட்டலாம் என்று கொடுத்தால் போதும்.

இந்த பாட் ஆனது எந்த தளத்தில் தகவல்களை சேகரிக்க சென்றாலும் முதலில் இந்த ரோபாடிக்ஸ் ஆவணத்தை படிக்கும். அதனுள் எங்கெல்லாம் தகவல்களை திரட்டலாம் என்று நாம் அனுமதி அளித்த இடத்தில் பாட் ஆனது தகவல்களை திரட்ட ஆரம்பிக்கும்.
இதுதானுங்க தேடல் தளம் தேடும் மற்றும் வேலை செய்யும் விதம்
சரி இப்ப பாட்நெட்ஸ் என்றால் என்னன்னு பார்க்கலாமா?

பாட்நெட்ஸ் என்பது  கூட்டுக்களவாணிகளின் கூடுதுறை

பாட்நெட்ஸ் என்பது ஆன்லைன் மோசடி வேலைகள் பலவற்றைச் செய்வதற்கென்றெ சைபர் கிரிமினல் கும்பல் ஒன்று தங்கள் வசம் வைத்திருக்கும் கணினிகளின் தொகுதியாகும். இதன் வழியாக நம்மை அறியாமலேயே நமது கணினிகளை இந்த பாட்நெட் களவாணிகள் அவர்கள் வேலைக்காக பயன்படுத்திக்கொள்வார்கள்.

அது எப்படி சாத்தியம் அங்கே பயன்படுத்துவதுதான் இந்த பாட்ஸ்கள்.
ஹேக்கர்கள் அவர்களுக்கென ஒரு தனி பாட்ஸ் மென்பொருட்களை உருவாக்கி பயன்படுத்திவருகிறார்கள். முன்பே சொன்னதுபோல் பாட்ஸ் என்பது நமது தளத்தில் உள்ள தகவல்களை திரட்டும் அமைப்பு என்பது.  ஆனால் இந்த பாட்ஸ் ஆனது ரோபாட்டிக்ஸ் பைல்களில் இருப்பதை தாண்டியும் தேடும். அவர்கள் பயன்படுத்தும்போது நம்மையறியாமல் நமது தகவல்கள் அவர்களுக்கு சென்றுவிடும். அதேபோல் பிரவுசிங் செய்யும்போது பாட்ஸ் உங்கள் கணினிகளில் நீங்கள் அறியாமலேயே இன்ஸ்டால் ஆகிவிடும்.


பின் இந்த பாட்கள் வழியாக உங்கள் கணினியை அந்த கிரிமினல் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடும். அதாவது சி&சி சர்வர் என்று அழைக்கப்படும் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் சர்வர் மூலம்  உங்களை கட்டுப்படுத்தத் துவங்கும்.


இதனால் அடையாள திருட்டு, போலி வணிக மின்னஞ்சல்கள், மாபெரும் மோசடி சமாச்சாரங்கள், இன்னபிறவற்றை உங்கள் கணினி மூலம் நடத்தி தங்கள் பாக்கெட்டுகளை பெருமளவு பணத்தால் நிரப்பும் இந்த கும்பல் தற்போது அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகளையும்  பெற்றிருக்கிறது. சமீபத்தில் பூமியின் துறை அறியும் சோதனை நடைபெறும் குழும நெட்வொர்க்கில் இணைய வழங்கியை ஹேக் செய்திருக்கிறார்கள்.


சென்ற வருடம் மத்தியில் கான்பிலிக்கர் என்ற வைரஸ் பெரிய அளவில் தாக்கக்கூடும் என்று கணினி வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்..
ஆமாம் உண்மையில் அந்த கான்பிலிக்கர் வைரசில்  கிட்டத்தட்ட  10,000,000+ இதன் பின் தொடர்ச்சியாக ஒன்பது பூச்சியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். அத்துணை பாட்ஸ்களை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதன் வழியாக ஒரு நாளைக்கு 10பில்லியன் தாக்குதல்களை கணினிகள் மீது தாக்கலாம். இதன் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலுவான கணினிகளும் மெதுவாக இயங்கும். வலுவிலந்த கணினிகள் அதோகதிதான்.


பெரும்பாலும் பிரவுசர் மூலமே பாட்நெட்ஸ் கணினிகளுக்குள் ஊடுருவுகிறது. இதுதான் கணினியில் வைரஸ் உள்ளிட்ட பிற கிரிமினல் நடவடிக்கை சக்திகள் ஊடுருவ 60 சதவீத வழியாக உள்ளது. இமெயில் அட்டாச்மென்ட்கள் மூலம் 13 சதவீதமும், ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் 11 சதவீதமும், டவுன்லோடு செய்யப்பட்ட இன்டெர்னெட் ஃபைல்கள் மூலம் 9 சதவீதமும் பாட்னெட்ஸ் ஊடுருவுகிறது.


எனவே இதை தடுக்கும் விதமாக முதலில் உங்களது கணினிகளை முறையாக அனுமதி பெற்று பயன்படுத்துங்கள்.
பின் ஆண்டிவைரஸ் மற்றும் பயர்வால் மென்பொருட்களை அவ்வப்போது நிறுவுங்கள்.

உங்கள் கணினியின் இணைய இணைப்பு ஆமை வேகத்தில் உள்ளதா?, பிரவுசரின் விசித்திரமான செயல்பாடுகள், உதாரணமாக உங்கள் முகப்புப் பக்கம் அடிக்கடி மாறுகிறதா? புதிய விண்டோக்கள் திறக்கிறதா? உங்கள் கணினியின் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதா? தானகவே ஆஃப் ஆகி தானாகவே ஸ்டார்ட் ஆகிறதா? பாட்நெட்ஸ் உங்கள் கணினியில் உட்கார்ந்துள்ளதன் அறிகுறிகள் இவை.

அடுத்த கட்ட தொழில்நுட்ப ஆபத்து நம் அருகில் இருக்கிறது.


உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------

Thursday, January 21, 2010

சிக்கலில் ஐபி4 முகவரி .......


பெருகிவரும் இணைய பயன்பாட்டில் 10%  குறைவான முகவரியே கையிருப்பு.

முதலில் ஐபி4 பற்றி தெரியாதவர்களுக்கு  : பிணையத்திலும், இணையத்திலும் பயன்படுத்தும் கணினிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள ஒவ்வொரு கணினிக்கும் முகவரியாக ஒரு எண்ணைஐ கொடுப்பார்கள். அந்த எண்ணின் வடிவம்தான் ஐபி4.

Sunday, January 10, 2010

பாதுகாப்பான இணையதள பயன்பாட்டிற்கு..... ஓபன் டிஎன்எஸ்

வெளிநாடுகளில் வசித்தாலும் நம்மூரில் நம்ம வீட்டு கணினியின் இணையத்தையும்ல இணையதளங்களையும் வெகு எளிதாக மேலாண்மை செய்யலாம் . முக்கியமாக நமது குழந்தைகள் இதர தளத்திற்கு செல்லவிடாமல் தடுக்கலாம். அப்படியே குழந்தைகள் தடுக்கப்பட்ட தளங்களைப் பார்த்தாலும் அது உங்களுக்கு மடல் அனுப்பிவிடும்.

அனுமதி பெற்ற  தகவல்களை பார்க்கும்  மட்டும் பார்க்கும்  நுட்பத்துடன் கவர்ச்சி விளம்பரங்கள், மால்வேர், பிஷ்ஷிங், கணினி தாக்குதல்கள், மற்றும் பாட்நெட் ஹேக்கர்களிடம்  இருந்து பாதுகாப்பை உங்கள் கணினிக்கு அளிக்கிறது.


முக்கியமா இணையதளங்களை கண்டறியும் வேகம் அதிகரிக்கும்.
 


அட அப்படி என்னங் மென்பொருள் னு கேட்கறிங்களா? அதுதான்

 ஓபன் டிஎன்எஸ்.

     அட அப்படியான்னு ஆச்சர்யப்படாதிங்க.... ஓபன்டிஎன்எஸ்  என்ன ன்னு பார்க்கிறதுக்கு முன்னாடி சில அடிப்படை விஷயங்களை நாம தெரிஞ்சுக்கணும்.
     Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எந்த வள ஆதாரங்களுக்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். பங்கேற்கும் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் Domain பெயர்களுடன் இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது.

     குறிப்பாக நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை, இவை இணைய உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா www.tamilvanigam.com என்பது 174.37.210.240 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது. 
Opendns Setting


அடிப்படை பற்றி தெரிந்துகொண்டீர்கள்.

    இனி பாதுகாப்பு பற்றி பார்க்கலாம். வீட்டிலும், அலுவலகத்திலும் , இணைய தள சென்டர்களிலும் இணையத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு இணையதள பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான்.
ஒரு வீட்டில் குழந்தைகளை விளையாட்டு மற்றும் எக்ஸ் தளங்களுக்கு  தளங்களிற்கு செல்லாத வகையில் தடை செய்ய முயன்று அதற்கான தனி மென்பொருட்களை பணம் கட்டியும் பயன்படுத்துவோம். சில நேரங்களில் அந்த மென்பொருள்  நாம் செல்லவேண்டிய இணைய தளங்களையும் தடுத்து நிறுத்திவிடும்.
        இணையத்தை பாதுகாப்பான முறையிலும் அதே சமயத்தில் தடுக்கப்பட்ட இணைய தளங்களை யராவது பார்க்க முயற்சித்தாலும் உடனே நம்முடைய முகவரிக்கு மின்னஞ்சல் வந்துவிடும்இந்த ஓபன்டிஎன்எஸ்.
   இந்த ஓபன்டிஎன்எஸ் மென்பொருளை எளிதாக எல்லா இடத்திலும்  பயன்படுத்தலாம்.வீட்டுக்கணினி, அலுவலக கணினி போய் பெரிய நிறுவனங்களில் திசைவி(ரவுட்டர்)க்களில்  பயன்படுத்தி ஒட்டுமொத்த நெட்வொர்க்களையும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்  இந்த ஓபன் டிஎன்எஸ்சை  தனியாளர் கணிப்பொறிகளில் ஆரம்பித்து எல்லாரும் பயன்படுத்தலாம். பாதுகாப்பாக இருக்கலாம்.
இந்த ஓபன்டிஎன்எஸ் ஐ பயன்படுத்துவதால் என்ன லாபம்?
மிக முக்கியமாக இந்த ஓபன் டிஎன்எஸ் சில தேவையில்லாத தளங்களை முடக்குவதும், மேலாண்மை செய்வதும் வெகு எளிது.  அதோடு ஸ்பாம் தளங்களையும் வெகு எளிதாக முடக்கிவிடும்.
சிறப்பம்சங்கள் : கன்டென்ட பில்டரிங் எனும் தேர்வு வசதியும் உண்டு. இதன் வழியாக ஒரு செய்தியில் ஆபாச செய்திகள் இருந்தால் அவற்றையும்  முடக்கிவிடும். அதேபோல் இந்த ஓபன்டிஎன்எஸ் தளத்தில் கன்டென்ட் பில்டரிங் வசதியில் 5 தேர்வுகள் உண்டு.
அதாவது High என்ற தேர்வில் பாதுகாப்பு பலமாக இருக்கும். குறிப்பிட்ட இணைய தளங்களை தவிர வேறு எந்த தளத்திற்கும் செல்ல இயலாது. சாட், விவாதகளம், கேம்ஸ்,  சமூக இணையதளங்கள், கேம்ப்ளிங், ஆல்கஹால்,  இப்படி 27 வகையான தளங்களில் உள்ளே நுழைய முடியாது.
அடுத்து உள்ள Modurate, , Low, None, , என்று படிப்படியாக தேவையான அளவு பாதுகாப்புகளை அளித்துவருகின்றன.
இதில் முக்கியமாக custom என்ற இடத்தில் நமக்கு ஏற்றவாறு எந்த அடிப்படையிலான தளங்களை தடுக்கவேண்டும் என்ற கொடுத்துவிட்டால் போதும்.
அட இவ்வளவு பாதுகாப்பு நிறைய விஷயத்தை எப்படி பயன்படுத்தறதுன்னு நீங்க கேட்கலாம்.
இதோ அதற்க்கான வழிமுறைகள்
https://www.opendns.com/dashboard/create
இந்த தளத்திற்கு போய் உடனே ஒரு கணக்கு துவங்கிடுங்க.....
துவங்கியவுடனே உஙகளுக்கான கட்டுப்பாட்டகம் திறக்கப்படும். அதில் உங்களுக்கான டிஎன்எஸ் சர்வர்க ஐபி எண்களை அவர்கள் உங்களுக்கு தருவார்கள். அதை உங்களது கணினியில் கீழ்க்கண்ட இடத்தில் கொடுத்தால் போதும்.உங்களது கணக்கு துவக்கப்பட்டவுடன் அவர்கள் ஒரு மென்பொருளை அளிப்பார்கள். அது உங்களது கணிப்பொறியில் அமர்ந்துகொண்டு நாம் செல்லும் இணைய தளங்களை கண்காணிக்கும். தேவையற்றவை என்று நாம் குறிப்பிட்டிருக்கும் செய்திகளை உடனடியாக நிறுத்திவிடும்.

Phishing Site Blocked

.


உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------