#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Sunday, January 2, 2011

"தொடுவானம்" 2010ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப சேவை

தொடுவானம் பற்றி மத்திய இணையமைச்சர் காந்திசெல்வன்

தொடுவானம் என்ற இணையதளம் மூலம் கிராமத்திலிருந்து மாவட்ட கலெக்டருக்கு மனு அளிக்கும் திட்டத்தில் 1,121 பயனாளிகளுக்கு எந்தவித செலவும் இன்றி, யாரையும் அணுகாமல் நிவாரண உதவி கிடைத்துள்ளது. இணையதளம் மூலம் பெறப்பட்ட மனுக்களுக்கு இணைய தளம் மூலமே சம்மந்தப்பட்ட அலுவலர்களால் பதில்  அளிக்கப்படுகிறது. அரசு திட்டங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதிலும், குறைகளை நிவர்த்தி செய்வதிலும் நாமக்கல் மாவட்டம் முதன்மையாக உள்ளது. 



2010ம் ஆண்டில் மிகச்சிறந்த தொழில்நுட்ப சேவை எதுவென்று எடுத்துக்கொண்டால் நிச்சயமாக அது தொடுவானம் என்ற சேவையே இருக்க முடியும்.

அட அப்படியென்னா தொடுவானம் 

ஒரு அழைப்புக்கு நிமிடத்திற்கு 50 ரூபாய் கொடுத்துவந்த செல்போன் சேவை ஒரு நிமிடத்திற்கு 50 காசாகி போச்சு.....

50 நாள் நடந்து போகும் தூரத்தை ஏரோப்ளேன்ல 5 மணி நேரத்தில் கடந்து போக லாம்

அட நம்ம வீட்டில் 50 நிமிசம் ஆகும் சமையல் வேலை 5 நிமிசத்துல கூடி முடிந்து போகுதுங்க.....

இதெல்லாம் எப்படி சாத்தியம்..... 

யாராவது மாய மந்திரம் போட்டுட்டாங்களா என்ன?

இல்லை. எல்லாமே தொழில்நுட்பத்தின் உதவியாக சாத்தியமானது.
மேற்கண்ட செல்போன், ஏரோப்ளேன் என எல்லாமே தொழில்நுட்பம்தான்.

இந்த நுட்பத்தை பயன்படுத்தி அதிகமான நேரத்தினை மிக மிக குறைவாக ஆக்கியது இந்த தொழில்நுட்பம்.

ஆனால் இவையெல்லாம் அனேகமாக மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே பயன்படும். 

அப்படியெனில் 
அடித்தட்டு மக்களுக்கு இந்த நுட்பத்தால் விளைந்த பயன் மேல் தட்டு மக்களுக்கு கிடைத்த அளவு இல்லை.

இந்த தொழில்நுட்பம் அரசாங்கமே இன்றுவரை ஒரளவு தான் பயன்படுத்திவருகிறது. முழுமையாக பயன்படுத்தும் வரை இன்னமும் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திவருகிறது.

ஆனால் அரசாங்கம் இந்த தொழில்நுட்பத்தினை எப்படி பயன்படுத்தவேண்டும் என்று ஒரு முன்மாதிரி 2010 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்டது தொடுவானம் என்ற பெயரில்

ஆம், நாள்தோறும் மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க ஒவ்வொரு அரசு அலுவலர்களின் படியேறி அவர்கள் இங்கேயும் அங்கேயும் அலையவைத்து பின்இறுதியாக பலவருடங்களுக்கு பின் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாற்றாக மக்கள் தங்கள் குறைகளை தீர்க்க அந்த ஊர் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்தாலே போதும் எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக அவர்களின் குறைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

அமெரிக்கவாழ் தமிழரான திரு.ஆல்பர்ட் பெர்ணாண்டோ அவர்களின் முயற்சியாலும்  அப்போதைய நாமக்கல் மாவட்ட ஆட்சியாளரான திரு. சகாயம் அவர்களால் செயல்தீட்டப்பட்டு கடந்த 2010 ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த தொடுவானம். இணையத்தளம்

தொடுவானம் எனும் இணையத்தளம் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மக்கள் எல்லாரும் அவர்களுக்கு ஏற்படும் குறைகளையும், அரசாங்க திட்டங்களையும் பெற அரசு அலுவலகங்களுக்கு வரவேண்டிய தேவையில்லாமல் இணையத்தளம் மூலம் எங்கிருந்தும் தங்கள் குறைகளை அனுப்பலாம் என்று அறவிக்கப்பட்ட இன்று வரை  1817 மனுக்கள் பெறப்பட்டு அதில் 1514 மனுக்கள் தீர்வு பெற்றுள்ளன என்பது  மிகப்பெரிய பெருமை.

இந்த 1514 மனுக்களும் அதன் தீர்வு பெற்றவர்களுக்கும் நிச்சயமாக ஒரே ஒரு முறைதான் அரசு அலுவலகங்களுக்கு சென்றிருப்பார்கள் . 

மேலும் அந்த தொடுவானம் திட்டத்தில் நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் கலந்துரையாடவும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் வழியாக மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் நேரடியாக தங்கள் குறைகளை அவரிடம் எடுத்துசென்று தங்கள் குறைகளையும் தீர்த்திருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய சேவை.

இப்போது சொல்லுங்கள். எந்த ஒரு குடிமக்களும் அரசு அலுவலகங்களை நாடாமல் , அலையாமல் அவர்கள் வீடு தேடி சென்று குறைகளை தீர்க்கும் இத்தொடுவானம் 2010ம் ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப சேவைதான். 
பின்னாளில் வரவிருக்கும் மின்னாளுமை அரசுக்கு முன் மாதிரியும் இந்த தொடுவானம் திட்டமும்தான்.

ஆனால் தற்போது மாவட்ட ஆட்சியர் மாற்றப்பட்டபின் இத்திட்டத்தில் சுணக்கம் கண்டுள்ளது வருத்தத்திற்குறியது. எனவே இதுபற்றி இப்போதைய ஆட்சியாளர் சிறப்பு கவனம் செலுத்தினால் பொதுமக்களுக்கு வசதியாய் இருக்கும்.


இதோ உங்களின் எண்ணங்களை நீங்களும் இங்கே பதிவு செய்யுங்கள்.













ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------