#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Monday, March 23, 2009

ஆட்டோரன்- வைரஸ்களை நிறுத்துவது எப்படி?

ஆட்டோரன் வைரஸ்களை நிறுத்துவது எப்படி?

பொதுவா சிடி அல்லது டிவிடி ட்ரைவ்களை உங்கள் கணினியில் இட்டபின் தானாகவே ஒரு விண்டோ துவங்கி சிடி/டிவிடியில் உள்ள தகவல்கள் காட்டும். அதற்கு உதவுவதுதான் autonrun.inf .
ஆனால் நம் ஹேக்கர்கள் இதன்வழியே வைரஸ்களை இயங்கும்படி செய்துவிடுவார்கள். எப்படி?

ஒரு வைரஸ் இருக்கும் பென் ட்ரைவ் கணினியில் நுழைத்தவுடன் உங்கள் கணினியின் மவுசை கவனியுங்கள். அது கணினி இயங்கா நிலையில் இருந்தாலும் கணினி இயங்கு நிலையில் இருப்பது போல் processing simple காட்டும். அவ்வாறு காட்டினாலே வைரஸ்கள் உங்கள் கணினியில் விளையாட ஆரம்பித்துவிட்டன என்று அர்த்தம். நீங்கள் எவ்வளவு நல்ல ஆன்டி வைரஸ்கள் வைத்திருந்தாலும் அவற்றுக்கும் சேர்த்து ஆப்புத்தான்.
அந்த அளவுக்கு போட்டு வாட்டிவிடும்.
சரி இதிலிருந்து தப்பிக்க என்ன வழி.....

இதோ கீழ்க்கண்ட மென்பொருட்களை நிறுவிக்கொள்ளுங்கள். ப்ரச்னையிலிருந்து தப்பியுங்கள் முக்கால் வாசி அளவிற்கு. ஏனெனிலெ நாள்தோறும் தொழில்நுட்பங்கள் மாறும்போது இப்போதிருக்கும் பாதுகாப்புகளை தகர்த்தெறிந்துவிடுகிறார்கள்.

முதலில் கீழ்க்கண்ட பைல்களை உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்துகொண்டு அவற்றை piz என்ற நீட்சியுடன் இருப்பவற்றை .zip என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
பின் இவைகளை இயக்குங்கள்.
http://www.tamilvanigam.in/file/AutoRunGuard.piz

இந்த பைலானது நமது கணினியில் ஆட்டோரன் எந்த ட்ரைவில் இருந்தாலும் அவற்றை இயங்காமல் தடுத்து நிறுத்துவதோடு அனைத்து ட்ரைவ்களிலும் ஆட்டோரன் என்ற பைல் இயங்குவதை நிறுத்திவிடும். இதன் மூலம் ஆட்டோரன் மூலம் சிடி மற்றும் பென் ட்ரைவ்களில் உள்ள ஆட்டோரன் தானாக இயங்குவதை தடுத்து நிறுத்தலாம்.

http://www.tamilvanigam.in/file/CPE17AntiAutoruna.piz

இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் இயக்கினால் அந்த பைல் உங்கள் டாஸ்க் பாரில் இயக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும்.cpe17 Autorunkiller என்ற மென்பொருள் உங்கள் இயங்குதளத்தின் இயங்குநிலையில் உட்கார்ந்து கண்கொத்தி பாம்பாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும். எங்காவது ஆட்டோரன் இயங்கினால் அந்த் தகவலை தெரிவித்துவிட்டு பிறகு அதை நிறுத்திவிடும்.
நீங்கள் உங்கள் கணினியில் பென் ட்ரை நுழைத்தவுடன் பச்சைக்கலரில் அறிவிப்பு வந்தால் அந்த பென் ட்ரைவில் எந்த ப்ரச்னையும் இல்லை. ஆனால் பென் ட்ரைவில் வைரஸ் இருந்தால் அந்த சிகப்பு கலரில் அறிவிப்பு வரும். அதோடு ஆட்டோரன் மூலம் இயங்கும் வைரஸ்களை வகைப்படுத்தி காட்டி அனைத்தையும் இயங்காமல் செய்துவிடும்.
அவ்வளவுதான் ப்ரச்னை மிக எளிதாக தீர்ந்தது.

ஆனால் இதை போட்டு எங்கள் கணினியை நாங்கள் நன்றாக வைத்திருந்தும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏனெனில் நெட்வொர்க்கில் கலந்திருப்பதால் மற்ற கணினிகளிலிருந்து தாக்குதல் தொடர்ந்து நடைபெறும்.....

இந்த வைரஸ் ப்ரச்னையால் ஒரு இடத்தில் எனக்கு வேலை கிடைக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால் கடைசி கட்ட தேர்விற்கு செல்லமுடியதாதல் என்னை நிராகரித்துவிட்டனர். என்ன செய்ய... வைரஸ் கம்ப்யூட்டருக்கு வேட்டு வைக்குத்துன்னு பார்த்தா வேலைக்கே வேட்டு வைக்குதுங்க :)

No comments: