" இணையத்தில் பிரவுசிங் செய்யும் நபர்களை எட்டிப்பார்ப்பது அடுத்தவர்களின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதற்கு சமம் எனும்போது பிரவுசிங் சென்டர் முதலாளி எப்படி அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்க்க முடியும். மேலும் அப்படி பார்த்தால் மீண்டும் அடுத்த முறை அந்த நபர்கள் திரும்பவும் அவர்களின் பிரவுசிங் சென்டர்களுக்கு வரமாட்டார்கள்."
உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் மற்றும் பேச்சுரிமையுடைய நாடான இந்தியாவில் இணைய சட்டங்கள் இன்னமும் ஒரு சாதாரண அளவில்தான் உள்ளன. 1.25 பைசாவை திருடினால் ஜெயிலில் அடைக்கும் அதேச்சட்டத்தில் சில லட்சம் கோடிகளை ஊழல் செய்தவர்களுக்கு ஜாமீன்-ல் வெளிவிடுவதும், அவர்களை "ராஜா " மாதிரி நடத்துவருகிறது. சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட நடைமுறைகள் இன்னமும் முழுமையாக அமல்படுத்தாத நிலையில் இச்சட்டங்களை ப் பயன்படுத்தி சமூக வலைத்தளங்கள் மற்றும் வலைப்பூ பதிவாளர்களை தண்டிக்கும் செயல் அங்காங்கே நடந்து கொண்டுள்ளது.
2008ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவரான சோனியா காந்திக்கு எதிரான கருத்துக்கள் கூகுளின் ஆர்குட்டில் பதிக்கப்பட்டது. அச்செய்தியை பதித்தவரை கைது செய்ய கூகுள், பயனாளரின் ஜபி அட்ரஸைத் தர கூகுள் முடிவு செய்தது.மற்றொரு அரசியல் கட்சியின் இமேஜ் இணையம் மூலம் சரிந்தது.
26/11 மும்பை தாஜ் ஹோட்டலை தீவிரவாதிகள் தாக்கியது தொடர்பாக வலைப்பூவில் shoddy journalism பற்றி எழுதியதற்காக NDTV நிர்வாக இயக்குனர் பார்கா தத் வலைப்பூ உரிமையாளருக்கு சட்டம் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.
முழுமையான சட்ட விதிகள் இல்லாமல் ஏதாவது பிரச்னைகுரியஎழுத்துக்கள் என்று வரும் வாசகரின் கருத்துக்கள் அரசியல் கட்சிக்கு எதிரானதோ இல்லையோ, போலீஸ் அந்த குறிப்பிட்ட இணையதளத்தை மூடவே முயற்சி செய்கிறது.
சிலநேரங்களில் மேற்சொன்ன சில உதாரணங்கள் மூலம் மேம்படுத்தப்பட்ட இணைய சட்டங்கள் இந்தியாவிற்கு அவசியம் என்பதும், அடிப்படை உரிமைகளில் ஒன்றான பேச்சுரிமை இணையத்தில் மிக தவறான முறையில் பயன்படுதப்படுகிறது என்பதும் கண்ணார கண்டாலும் முழுமையான சட்டத்திட்டங்கள் விதிக்கப்படாமல் இணையத்தில் அவ்வப்போது ஏற்படும் பிரச்னைகளுக்கு மட்டும் விதிகளை எழுதிக்கொள்வது தவறான ஒன்று.
இந்நிலையில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள புதிய இணையச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது,
பயனாளர்கள் மற்றவர்களை புண்படுத்தும் வகையிலான கருத்துக்களையோ, அடுத்தவரின் அந்தரங்களையோ,மற்ரவரை வெறுக்கும் கருத்துக்களையோ,சூதாட்டத்தை ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்களையோ மற்றும் சட்டத்திற்கு புறம்பான எந்தவொரு கருத்துக்களையும் பதிக்கவோ,மாற்றவோ,பதிவேற்றவோ, பகிரவோ கூடாது .
நாட்டின் ஒற்றுமை,சட்டம் ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் பொதுவுடமையை பாதிக்கும் எந்தவொரு கருத்துக்களையும்,வெளிநாட்டு நட்புறவைப் பாதிக்கும் கருத்துக்கள், மற்ற நாடுகளை அவமானப்படுத்தும் கருத்துக்களை பதிக்கக் கூடாது...
இதில் முக்கியமான விசயம் என்னவெனில்
சர்வதேச பயங்கரவாதிகளை பதுக்கி வைத்துக் கொண்டு இல்லை என்று சொல்லும் நாட்டிற்கு எதிராய் நாம் ஏதேனும் கருத்துக்கள் பதித்தால், நம்மை ஜெயிலில் பிடித்துப் போட அரசாங்கத்திற்கு அனுமதி அளிக்கிறது மேற்சொன்ன சட்டவரிகள்.இந்தியாவில் அரசியல் கட்சி தலைவர்கள் பற்றிய எதிரான கருத்துக்களை வெளியிட்டால், அடுத்த நிமிடம் ஜெயில் களி தின்பதற்கு வழி செய்கிறது.
மேம்படுத்தப்பட்ட புதிய விதிகள் இண்டர்நெட் உரிமையாளர்களுக்கும் ஒருபுறம் பெரும் பிரச்னை. ஏனெனில். தங்கள் இணையம் மூலம் யாரும் தவறான கருத்துக்கள், சட்டத்திற்கு புறம்பான நிகழ்வுகளுக்கு பயன்படுத்தாமல் இருக்க, அதற்கென ஒரு தனி ஏஜென்சி மூலம் கண்காணிக்க வேண்டியுள்ளது.மேலும் நிர்வாண வீடியோக்கள்,படங்களை யாரும் பதிவேற்றாமல்ிருக்க, அதற்கென தனியே தடை செய்யும் மென்பொருள்களை பயன்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர்
.ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு இலவச இணைய வசதி வழங்கும் போதும் இணையம் தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படாமல் இருக்க, ஹோட்டல் நிர்வாகம் கண்காணித்தே தீர வேண்டும்.பதிவு செய்யப்பட்ட இணைய வசதி மையங்கள் வாடிக்கையாளர்களின் பேர், முகவரி,பாலினம்,அடையாள அட்டை, இணையம் பயன்படுத்திய நேரம் போன்றவற்றை குறிப்பெடுத்துக் கொள்ள வேண்டிய நிலையில் உள்ளன.
மேலும் இதைவிட கொடுமை வயிற்றுப்பிழைப்பிற்காக நடத்தும் பிரவுசிங் சென்டர்களில் யாரோ சில விசமிகள் செய்யும் பிரச்னைக்காக போலீசார் நேரடியாக பிரவுசிங் சென்டர் நடத்துபவர்களை பிடித்துச்செல்கிறார்கள்.... இது மிகவும் தவறான ஒன்று. இணையத்தில் பிரவுசிங் செய்யும் நபர்களை எட்டிப்பார்ப்பது அடுத்தவர்களின் படுக்கையறையை எட்டிப்பார்ப்பதற்கு சமம் எனும்போது பிரவுசிங் சென்டர் முதலாளி எப்படி அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்க்க முடியும். மேலும் அப்படி பார்த்தால் மீண்டும் அடுத்த முறை அந்த நபர்கள் திரும்பவும் அவர்களின் பிரவுசிங் சென்டர்களுக்கு வரமாட்டார்கள்.
இதைவிட பெரிய கொடுமை... தமிழ்நாடு போலீஸ் க்கு என்று அரசு சார்ந்த மின்னஞ்சல்கள் ஏதும் கிடையாது. அவர்களே ஜிமெயில், ஹாட்மெயில் போன்றவற்றில் மின்னஞ்சல்களை பயன்படுத்துகின்றனர். இவைகளை வெகு எளிதாக ஹேக் செய்யலாம். ஆர்பிஐ தன் வங்கிக்கு சில விதிமுறைகளை விதித்துள்ளது, என்னவெனில் வங்கி சார்ந்த எந்த ஒரு தகவலும் இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டின் சர்வர்களிலும் இருக்ககுடாது.
அப்படியிருக்க ஒரு போலீஸ் துறை தன் துறை சார்ந்தத பயன்பாடுகளுக்கு அரசாங்க தனி சர்வர்களை ஒதுக்காமல் அவர்கள் தனியார் நிறுவனங்களின் சேவைகளை பயன்படுத்துவது எந்த அளவிற்கு சரியானது என்று தெரியவில்லை.
இதற்கு தீர்வு என்ன
இவையெல்லாவற்றையும் அரசாங்கமே இந்தியாவின் டிஎன்எஸ் சர்வர்களில் தேவையான மாற்றங்கள் செய்தாலே போதும். ஆனால் அரசாங்கம் தன் வ(லி)ழியை மட்டுமே பார்க்கிறது. தொழில்நுட்பம் பெருகும்போது அதற்கேற்றார்ப்போல் கட்டுப்பாடுகளும் மாற்றப்படவேண்டும். ஆனால் நுட்பம் ராக்கெட் வேகத்தில் பயணிக்க கட்டுப்பாடுகள் ஆமையில் பயணிக்கிறது...
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------
4 comments:
அருமை தம்பி , மிகவும் நேர்த்தியான சரியான தகவல்.
அன்புடன்
வின்மணி
http://winmani.wordpress.com
அருமையான கட்டுரை.
சிறந்த பதிவு தோழர்
பிரவுசிங் சென்டர் வைச்சிருங்கீங்க போல.... உங்கள் அலைபேசி எண் தரவும்
vijayblog08@gmail.com
Post a Comment