#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Wednesday, November 30, 2011

தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்பு


[விளம்பரம் அல்ல]

விசுவல் மீடியா தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில்புதிய தொழில்முனைவோர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

உலகப்பொருளாதார மந்த நிலையில் சுயதொழில் புரிந்தால் மட்டுமே சற்றாவது  அந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்று உலகப்பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். எனவே அதில் எங்கள் விசுவல்மீடியா நிறுவனத்தின் சார்பில் சில பங்களிப்புகளை தொழில்முனைவோர்களுக்கும், புதிய தொழில்முனைவோர்களுக்கு உதவிட சில முன்னெடுப்பு  முயற்சிகளை செய்துவருகிறோம்.

இன்றைய சூழ்நிலையில் விசிட்டிங் கார்டு வைத்திருருப்பவர்கள் எல்லாம் இணையத்தளத்தினை வைத்திருக்கவேண்டிய கட்டாயம் ஒரு புறம் இருந்தாலும் உண்மையாகவே சில தொழில்முனைவொர்களுக்கு இணையத்தளம் என்பது எட்டாக்கனியாக இருக்கலாம். மேலும் வெப்சைட் பற்றி தெரியாத நபர்கள் அது பற்றி தெரியாமலும் இருக்கலாம். எனவே விசுவல்மீடியா தொழில்நுட்ப நிறுவனம் உண்மையாகவே வெப்சைட் தேவைப்படுபவர்களுக்கு இலவச இணையத்தள இடமும் தந்து, அந்த தளத்தினை இலவச மேலாண்மை செய்யவும் உதவ தயாராகிறது. 

இந்த சேவையில்

1 ஜிபி இடம் மற்றும் சிபேனல் கன்ட்ரோல் பேனல் உடன் 100 மின்னஞ்சல் முகவரியுடன் சேவை தரப்படுகிறது.

இந்த இலவச சேவையுடன்

250 மென்பொருள் அடங்கிய சேவையுள் உள்ளது. எனவே இதில் அவர்களுக்கு தேவையான 
பிராஜக்ட் மேனேஜ்மெண்ட், 
மின்னஞ்சல் மேலாண்மை, 
எச்ஆர் மேனேஜ்மெண்ட், 
இமேஜ் காலரி, 
ஆன்லைன் ஷாப்பிங், 
பாரம், 
சப்போர்ட

  என பல்வேறு துறைகளின் கீழ் உள்ள மென்பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும்  சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களைப் பெற்றி பிறருக்கு மார்க்கெட்டிங் செய்திட  இலவச எஸ்எம்எஸ் சேவையும் உடன் இமெயில் மார்க்கெட்டிங்கான வழிவகையும் செய்து தரப்படும்.

மேலும் அவர்களுக்கு தேவையான சட்டரீதியான ஆலோசனைகளும், கணக்காளர்கள் சேவையும் இணைந்து தரப்படும்.

நிபந்தனை

இணையத்தள இடம், மற்றும் அந்த தளத்திற்கான மேலாண்மை செய்யும் பணிகளை விசுவல் மீடியா நிறுவனம் முதல்வருடம் மட்டும் இலவசமாவேக சேவை தர தயாராக உள்ளது. இரண்டாவது வருடத்தில் இருந்து  சாதாரண கட்டணம்வசூலிக்கப்படும்.


புதிய தொழில்முனைவொர்களும், இணையத்தளம் இருந்தால் தங்கள் வியாபாரத்திற்கு இன்னமும் முன்னேற்றம் கிடைக்கும் என்பவர்களும், கிராமப்பொருட்களை இணையத்தில் விற்பனை செய்ய தயாராக உள்ளவர்களுக்கும், அரசாங்க துறைகளுக்கும் மேற்கண்ட சேவை வழங்கப்படும்.

ஏற்கனவே வெப்சைட் மற்றும் வெப்சைட் பெயர்கள் வாங்கியிருந்தால் அவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.

இத்திட்டம் முழுதும் புதிய தொழில்முனைவோர்களுக்கு மட்டுமே

 உடனே கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு முழுவிபரங்களுடன் தாங்கள் செய்யவிருக்கும் தொழில் பற்றியும், இணையத்தளம் இருந்தால் அது அவர்களுக்கு எந்த வகையில் பயனளிக்கும் எனவும் தெரிவித்து  அவர்களுக்கான பேன் கார்டு எண்ணையும் மின்னஞ்சல் அனுப்புங்கள். உடனடியாக அவர்கள் கேட்டப்பெயரில் இலவச வெப்சைட் பெயரும், இணையத்தள இடமும் உருவாக்கித்தரப் படும்

இந்த வசதியை தவறாக பயன்படுத்தினால் எங்களது குழு இதைக்கண்டறிந்து அத்தளம் முடக்கப்படும். 

இந்தவசதி புத்தாண்டு முதல் செயல்படும். எனவே இதைப்பற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


நன்றி


---------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Sunday, November 13, 2011

அணுக்கள் பற்றி தமிழில் காணப்படும் சேதிகள்


அணுவைப்பற்றி சங்க கால தகவல்கள் சொல்லும் சேதி

கம்பராமாயணத்தில் உள்ள யுத்தகாண்டத்தில் ராவணுனக்கு விபீசணன் ஆலோசனை சொல்கிறான். அப்போது அவர் ஹிரண்யகசிபுரை பற்றிச்சொல்லும்போது கீழ்க்கண்டவாறு சொல்கிறான்

உங்கள் உள்ளான் உன் இறைவன் ? என்று தன் மகனைப் பார்த்து சீறினான் ஹிரண்யகசிபு.
பிரகாலதன் பதில் கூறுகிறான்

 ' சாணிலும் உளன், ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்" 

என்று அணுவுக்குள்ளே அணுவாக இருக்கிறான் என்று சொல்கிறான். இதில் குறிப்பிட்டத்தக்க சேதி ஒரு சிறு அணுவை எடுத்து அந்த அணுவிலே 100 பகுதியில் ஒன்றிற்கு கோண் எனப்பெயரும் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

மேலும் போர்களத்தில் இந்திரஜித் இறந்துகிடக்கும்போது அவன் தாய் மண்டோதரி அழுகிறார், தலை சிறந்த வீரனான உன்னை - இந்திரனையே வென்ற இந்திரஜீத் என்ற பெயர் பெற்ற உன்னை, கொன்று விட்டார்களே, அணு ஆயூதத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச்சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது என்கிறாள். அந்த வரி

உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா

ஆக அணுக்கள் அக்காலத்திலயே நம்முடைய ஆட்களுக்கு மிகச்சிறந்த அறிவு இருந்திருக்கிறது என்பதே உண்மை.
--------------------------------------------------------------------------------------------------------



ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Wednesday, November 9, 2011

SQL Interview - புதிய புத்தகத்தின் மதிப்புரை

அவசரமாக ரயிலில் செல்லவேண்டிய கட்டாயம். உடனடியாக ரிசர்வேசன் கவுன்டருக்கு செல்கிறோம்...பணம் கட்டுகிறோம். .. கணினி யில் பிரிண்ட்அவுட் எடுத்து தருகிறார்கள்..............
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்... அங்கே என்ன நடக்கிறது என்று?

மிகப்பெரிய வங்கியில் தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து சேமிக்கப்பட்டுவருகின்றது. ஆனால் அதன் பின்புலத்தில் என்ன நடைபெறுகின்றது. கொஞ்சம் மாறினாலும் பணக்காரன் ஏழையாகலாம், ஏழை பணக்காரனாகலாம்....எப்படி தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.......

வானவெளிக்கு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டு அவைகள் பற்பல தகவல்களை நம்மிடையே பரிமாற்றப்பட்டு சேமித்துவைக்கப்படுகின்றது. இப்படித்தான் முதன்முதலில் ஆம்ஸ்டராங் நிலவிற்கு போய் வந்த தகவல்களுடன் சமீபத்தில் நமது சந்திராயன் போய் திரட்டிய தகவல்கள் ஒப்பீட்டு அளவுகள் செய்யப்பட்டது.... இதன் பின் புலத்திலும் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன...

இப்படி சேமிக்கப்படும் தகவல்களுக்கு பெயர்தான் தரவுத்தளம்... (டேட்டாபேஸ்)
டேட்டம் என்ற சொல்லிருந்து டேட்டா என்ற வார்த்தையை கணினியில் நாம் பயன்படுத்திவருகிறோம்.

இந்த டேட்டாபேஸ்கள் தான்இன்று உலகில் ஒட்டுமொத்த நிர்வாகத்தை சீரும் சிறப்புமாக நடத்திக்கொண்டு வருபவை. மேலேக்கண்ட எல்லா விபரங்களையும் இந்த டேட்டாபேஸ்கள் தான் நிர்வகித்து வருகின்றன.
டேட்டாபேஸ் இல்லாத கணினி என்பது உப்பில்லா பண்டம் குப்பையிலே போன்றதுதான்... அந்த அளவிற்கு இந்த டேட்டாபேசின் பணி மிக முக்கியமானது

இவ்வளவு முக்கியத்தும் வாய்ந்த இந்த டேட்டாபேஸ் துறையில் இன்றும் வளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆனால் இத்துறையில் உள்ள நிறுவனங்கள் சரியான ஆட்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை என்கிறார்கள். ஏன்? டேட்டாபேசை சொல்லித்தருகிறோம் என்று பொத்தாம்பொதுவாக சில கல்விநிறுவனங்கள் சொல்லித்தருகின்றன. அவைகள் எப்படி பயன்படுகின்றன, எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படை விபரங்கள் கூட அவர்களுக்கு சொல்லித்தருவதில்லை. அவர்களுக்கு அனுபவ அறிவு இருப்பினும் டேட்டாபேசை பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் போகும்போது கிடைக்க கூடிய வேலை வாய்ப்பும் கைவிட்டு போய்விடுகிறது. 

இதற்காக சிலவெளிநாட்டு புத்தகங்களை வாங்கிப்படித்தால் அவர்களின் நடை புரிவதற்கு நமக்கும் சிக்கலாக இருக்கும்.
இதற்கெல்லாம்தீர்வாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் SQL துறையில் அனுபவம் வாய்ந்த பினல் தேவ் மற்றும் நம்ம ஊரு ஆள் வினோத்குமார் (மதுரை) ஆகிய இருவரும் இணைந்து எல்லா தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் SQL Interview என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளனர்.

இப்புத்தகத்தில் டேட்டாபேசின் அடிப்படை கட்டமைப்பு முதற்கொண்டு சமீபத்திய வரவான டேட்டாவேர்ஹவுஸ் வரை விளக்கியும் , இன்டர்வியூக்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் அவர்களே சிறப்பான முறையில் பதிலையும் அளித்திருக்கிறார்கள்.

என்னடா மைக்ரோசாப்ட் நபர்கள் மைக்ரோசாப்ட் SQL மட்டுமே எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவேண்டாம். எல்லா தரப்பு மென்பொருள் உற்பத்தியாளர்களுக்கும் சேர்த்தே எழுதியிருக்கிறார்கள்....மேலும் புதியநபர்கள் SQL பழகிக்கொள்ள சில மாதிரிகளை விளக்கத்துடன் எழுதியே இணைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் சிறப்பான புத்தகம்.SQL துறையில் வேலை தேடுபவர்களுக்கும், இத்துறையில் வேலை வாய்ப்பு பெறவிரும்புவர்களும் முக்கியமாக படிக்கவேண்டி ஒரு புத்தம் இது.

 கிடைக்குமிடம் அமேசான் மற்றும் பிலிப்ஆர்ட்

அமேசானில் சற்று விலை அதிகம் , FLIpkart ல் வாங்கலாம்...











ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------