அவசரமாக ரயிலில் செல்லவேண்டிய கட்டாயம். உடனடியாக ரிசர்வேசன் கவுன்டருக்கு செல்கிறோம்...பணம் கட்டுகிறோம். .. கணினி யில் பிரிண்ட்அவுட் எடுத்து தருகிறார்கள்..............
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்... அங்கே என்ன நடக்கிறது என்று?
மிகப்பெரிய வங்கியில் தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து சேமிக்கப்பட்டுவருகின்றது. ஆனால் அதன் பின்புலத்தில் என்ன நடைபெறுகின்றது. கொஞ்சம் மாறினாலும் பணக்காரன் ஏழையாகலாம், ஏழை பணக்காரனாகலாம்....எப்படி தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.......
வானவெளிக்கு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டு அவைகள் பற்பல தகவல்களை நம்மிடையே பரிமாற்றப்பட்டு சேமித்துவைக்கப்படுகின்றது. இப்படித்தான் முதன்முதலில் ஆம்ஸ்டராங் நிலவிற்கு போய் வந்த தகவல்களுடன் சமீபத்தில் நமது சந்திராயன் போய் திரட்டிய தகவல்கள் ஒப்பீட்டு அளவுகள் செய்யப்பட்டது.... இதன் பின் புலத்திலும் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன...
இப்படி சேமிக்கப்படும் தகவல்களுக்கு பெயர்தான் தரவுத்தளம்... (டேட்டாபேஸ்)
டேட்டம் என்ற சொல்லிருந்து டேட்டா என்ற வார்த்தையை கணினியில் நாம் பயன்படுத்திவருகிறோம்.
இந்த டேட்டாபேஸ்கள் தான்இன்று உலகில் ஒட்டுமொத்த நிர்வாகத்தை சீரும் சிறப்புமாக நடத்திக்கொண்டு வருபவை. மேலேக்கண்ட எல்லா விபரங்களையும் இந்த டேட்டாபேஸ்கள் தான் நிர்வகித்து வருகின்றன.
டேட்டாபேஸ் இல்லாத கணினி என்பது உப்பில்லா பண்டம் குப்பையிலே போன்றதுதான்... அந்த அளவிற்கு இந்த டேட்டாபேசின் பணி மிக முக்கியமானது
இவ்வளவு முக்கியத்தும் வாய்ந்த இந்த டேட்டாபேஸ் துறையில் இன்றும் வளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆனால் இத்துறையில் உள்ள நிறுவனங்கள் சரியான ஆட்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை என்கிறார்கள். ஏன்? டேட்டாபேசை சொல்லித்தருகிறோம் என்று பொத்தாம்பொதுவாக சில கல்விநிறுவனங்கள் சொல்லித்தருகின்றன. அவைகள் எப்படி பயன்படுகின்றன, எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படை விபரங்கள் கூட அவர்களுக்கு சொல்லித்தருவதில்லை. அவர்களுக்கு அனுபவ அறிவு இருப்பினும் டேட்டாபேசை பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் போகும்போது கிடைக்க கூடிய வேலை வாய்ப்பும் கைவிட்டு போய்விடுகிறது.
இதற்காக சிலவெளிநாட்டு புத்தகங்களை வாங்கிப்படித்தால் அவர்களின் நடை புரிவதற்கு நமக்கும் சிக்கலாக இருக்கும்.
இதற்கெல்லாம்தீர்வாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் SQL துறையில் அனுபவம் வாய்ந்த பினல் தேவ் மற்றும் நம்ம ஊரு ஆள் வினோத்குமார் (மதுரை) ஆகிய இருவரும் இணைந்து எல்லா தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் SQL Interview என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளனர்.
இப்புத்தகத்தில் டேட்டாபேசின் அடிப்படை கட்டமைப்பு முதற்கொண்டு சமீபத்திய வரவான டேட்டாவேர்ஹவுஸ் வரை விளக்கியும் , இன்டர்வியூக்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் அவர்களே சிறப்பான முறையில் பதிலையும் அளித்திருக்கிறார்கள்.
என்னடா மைக்ரோசாப்ட் நபர்கள் மைக்ரோசாப்ட் SQL மட்டுமே எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவேண்டாம். எல்லா தரப்பு மென்பொருள் உற்பத்தியாளர்களுக்கும் சேர்த்தே எழுதியிருக்கிறார்கள்....மேலும் புதியநபர்கள் SQL பழகிக்கொள்ள சில மாதிரிகளை விளக்கத்துடன் எழுதியே இணைத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் சிறப்பான புத்தகம்.SQL துறையில் வேலை தேடுபவர்களுக்கும், இத்துறையில் வேலை வாய்ப்பு பெறவிரும்புவர்களும் முக்கியமாக படிக்கவேண்டி ஒரு புத்தம் இது.
கிடைக்குமிடம் அமேசான் மற்றும் பிலிப்ஆர்ட்
அமேசானில் சற்று விலை அதிகம் , FLIpkart ல் வாங்கலாம்...
கிடைக்குமிடம் அமேசான் மற்றும் பிலிப்ஆர்ட்
அமேசானில் சற்று விலை அதிகம் , FLIpkart ல் வாங்கலாம்...
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------
No comments:
Post a Comment