என்னதான் ஆன்டிராய்டு அலைபேசி இயங்குதளம் கட்டற்ற மென்பொருட்களாக வந்தாலும் வந்தது இன்று நோக்கியா, மைக்ரோசாப்டு, ஐபேடு புகழ் ஆப்பிள் நிறுவனத்திற்கும், பெரிய கலக்கமே வந்துவிட்டது.
பின்னே இருக்காத, அலைபேசியை தன்னுள்ளே வைத்திருந்த பிளாக்பெர்டி கூட ஆடிப்போய்விட்டது. அந்த அளவிற்கு ஆன்டிராய்டு எங்கும் எப்போது பயன்படுத்தப்பட்டு வருகிறது.
நாம் இப்போது ஆன்டிராய்டு நிறைய பேர் வாங்கினாலும் அதில் மென்பொருட்களை தேவைப்படும் மென்பொருட்களை எப்படி நிறுவுவவது என்று தெரியவில்லை.
அதைத்தான் பார்க்கப்போகின்றோம். ஆன்டிராய்டு போன்ற நவீன நுட்ப(ஸ்மார்ட) அலைபேசிகள் மிகப்பெரிய பலம் வாய்ந்தவை. ஆனால் அவற்றினை நாம் பயன்படுத்துவதில்தான் அதன் பணியே இருக்கின்றது.
எனவே ஆன்டிராய்டில் மென்பொருட்களை நிறுவுவது எப்படி என்று பார்க்கலாம்.
அதற்கு முன்னர் எல்லா இயங்குதளங்களுக்கும் இயங்கும் சில நீட்சிகள் (Extensions) உள்ளன.
மைக்ரோசாப்ட் . இயங்குதளம் - EXE
மைக்ரோசாப்ட் எம்படட் - .CAB
லினக்ஸ் - sh
இப்படி பலவகையான நீட்களில் இயங்கும். அதேபோல் ஆன்டிராய்டில் இயங்கும் மென்பொருட்களுக்கு சில நீட்சிகள் உள்ளன.
அதுதான் .APK - Android Package (APK) file
சரி இந்த மென்பொருளை நேரடியாக இயக்க முடியுமா? முடியும் என்றாலும் பாதுகாப்பு காரணம் கருதி கூகிள் நிறுவனம் பொதுவான ஒரு இடத்தில் பதிந்துவைத்துள்ளது. எந்த மென்பொருட்கள் வேண்டும் என்றாலும் அங்கே இருந்து பெற்றுக்கொள்ளலாம். அந்த பொதுவான இடத்திற்கு பெயர்தான் Market தற்போது Play Store.
சரி, கூகிள் நிறுவனம் ஏன் இப்படி செய்கிறது.தேவைப்படுபவர்கள் எல்லாம் அப்படியே நேராக இன்ஸ்ட்டால் செய்யலாமே என்கிறீர்களா?
ஆனால் அங்கேயும் சில பிரச்னைகள் உள்ளது. என்ன தெரியுமா? பாதுகாப்பு
ஏன் பாதுகாப்பு வேண்டும்?
நீங்கள் நேரடியாக மென்பொருளை நிறுவும் பட்சத்தில் நீங்கள் பயன்படுத்தும் ஆன்டிராய்டு அலைபேசி/ டேப்ளேட் உங்களுக்கே தெரியாமல் உங்களைப்பற்றிய தகவல்களை வேறு ஒருவருக்கு மாற்றும் ஸ்பை வேலையை செய்துவரும்.
அல்லது வைரஸ்களை இன்ஸ்ட்டால் செய்யும்.
இப்படி தனித்தனியாக மென்பொருட்களை நிறுவினால் நிறைய பிரச்னைகளை வரும் என்பதை கருத்திக்கொண்டே எல்லா நிறுவனங்களுக்கும் தனக்கென்று ஒரு மென்பொருள் சந்தையை உருவாக்கியுள்ளன.
Iphone - Istore
மேற்கண்ட நிறுவனங்களின் மென்பொருட்களை நிறுவும்போது நீங்கள் நிறுவும் மென்பொருள் சரியானதா? அல்லது அதனுள் வேறு ஏதேனும் நச்ச நிரல்கள் உள்ளிணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்து அதன் பின்னரே வெளியிடுவார்கள். இதனால் அவர்களுக்கும் பிரச்னையில்லை. அவர்களின் வாடிக்கையாளர்களான நமக்கும் பிரச்னையில்லை.
இவ்வாறு நாம் பிளே அல்லது மார்க்கெட்டில் மென்பொருட்களை நிறுவும்போது சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும். என்னவெனில் நாம் நிறுவ நினைக்கும் மென்பொருட்களை நம்மால் நிறுவிட இயலாது. அந்த சமயத்தில் அங்கே நமக்கு ஒரு பிழை தகவல் காட்டப்படும். என்னவெனில் இந்த மென்பொருள் உங்கள் அலைபேசி (டேப்ளேட்) ஒத்திசை ( Comp ability) இல்லை. என்று.
காரணம்
நமக்கு நமது அலைபேசி/ டேப்ளேட்களில் நிறுவிட நினைக்கும் மென்பொருட்களை உருவாக்கியவர் இதை ஒரு குறிப்பிட்ட கருவிகளில் அல்லது குறிப்பிட்ட அளவுகளில் உள்ள மென்பொருட்களில் மட்டுமே நிறுவிட முடியும் என்று அதற்கேற்றார்ப்போல் அந்த மென்பொருட்களை உருவாக்கியிருப்பார். அந்த குறிப்பிட்ட கருவிகளில் மட்டுமே அந்த மென்பொருட்களும் இயங்கும். அவ்வளவுதான் வித்தியாசம்
திரை அளவு
எப்படியெனில் நாம் அலைபேசியை பயன்படுத்தினால் அதன் திரை அளவு 320x240, 800*480 என்று வரும். அதே சமயத்தில் பெரிய டேப்ளேட் கணினிகளில் பல திரை அளவுகள் இருக்கும். இப்படி பல அளவுகள் உள்ளதால் அந்த மென்பொருள் வடிவமைப்பாளர் குறிப்பிட்ட திரை அளவுகளுக்கு மட்டுமே அனுமதி அ ளித்திருப்பார். அந்த அளவுகள் கொண்டவற்றில் மட்டுமே நிறுவிடவும் முடியும்.
மென்பொருட்கள் ஒத்திசைவு
சில மென்பொருட்கள் மேம்பட்ட ஆன்டிராய்டு இயங்கு தளத்தில் மட்டுமே மென்பொருட்களை நிறுவிட வழிவகை செய்யும். எனவே அவற்றினையும் நம்மால் நிறுவிட இயலாது.
ஆனால் எல்லா மென்பொருட்களையும் நிறுவிட வழிவகைகள் உண்டு என்றாலும் நாம் நிறுவும் மென்பொருட்களை நமக்கு தீங்கு செய்யாது என்று நமக்கு என்னமிருந்தால் நிச்சயமாக நிறுவலாம்
சரி இப்போது நாம் மென்பொருட்களை நிறுவலாமா?
வழி 1 : உங்கள் அலைபேசி அல்லது டேப்ளேட் கணினியில் இந்த குறும்படம் உள்ளதா என்று பாருங்கள் . இருந்தால் கிளிக் செய்யவும்
வழி 2: முதல்முறை பயன்படுத்துபவராக இருந்தால் உங்களுக்கான தனி கணக்கினை துவக்கும் படி அறிவுறுத்தும். பின் ஒரு முறை கணக்கு விபரங்களை கொடுத்து சேமித்துவிட்டால் மீண்டும் மீண்டும் தானாகவே எடுத்துக்கொள்ளும். கணக்கு இல்லாதவர்கள் உருவாக்கிக்கொள்ளவும். இருப்பவர்கள் உங்கள் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை தந்து உள்ளே செல்லவும்
வழி 3 :
மேலே உள்ள Search Button உள்ள இடத்தில் கிளிக் செய்தால் உள்ளீட்டு பெட்டி ஒன்று தோன்றும் அதில் உங்களுக்கு தேவையான மென்பொருளின் பெயரினை தட்டச்சு செய்த கடைசியில் உள்ள பூதக்கண்ணாடியை :) கிளிக் செய்தால் விபரங்கள் காட்டப்படும். அதில் உங்களுக்கு தேவையான மென்பொருளை கிளிக் செய்தால் கீழ்க்கண்டது போல் காட்டப்படும்.
பின் அந்த திரையில் Install என்ற பட்டனை அழுத்த வேண்டும்
வழி 4
அந்த மென்பொருள் இயங்க என்னென்ன அனுமதி தேவை மற்றும் அந்த மென்பொருள் நம்முடைய அலைபேசி/டேப்ளேட் கணினியில் என்னென்ன மென்பொருட்களுடன் இயங்கும் என்பது போன்ற தகவல்கள் இருக்கும். அதன்பின் accept & Download என்பதினை கிளிக் செய்தால் உங்களுக்கு தேவையான மென்பொருள் உங்கள் அலைபேசி/ டேப்ளேட் கணினிகளில் நிறுவப்படும்.
மேற்கண்ட இதே வழிமுறைகளை பயன்படுத்தி உங்களுக்கு தேவையா மென்பொருட்களை நீங்கள் நிறுவிக்கொள்ளலாம். முக்கியமாக ஒன்று. நீங்கள் தரவிறக்கும் மென்பொருள் உங்களுக்கு உபயோகமானதாக இருந்தால் தயவு செய்து அந்த மென்பொருளுக்கு நட்சத்திர மதிப்பை வழங்குங்கள். அது அந்த மென்பொருள் உருவாக்குநருக்கு ஊக்கமாக இருக்கும்
நன்றி!
------------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------
1 comment:
விளக்கமான பதிவு நண்பா...
தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி…
Post a Comment