#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Sunday, November 8, 2009

விண்டோஸ் 7 - ஒரு பார்வை

சமீபத்தில் கோவையில் விண்டோஸ் 7 வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அதில் அடியேனும் பார்வையாளனாக கலந்துகொண்டேன்.

விஸ்டாவின் தோல்வியை மறைப்பதற்கு மைக்ரோசாப்ட் மேற்கொண்டிருக்கும் ப்ரத்யோக வெளியீடு. விஸ்டாவிற்கும் இதற்கும் அதிகப்பட்ச வேறுபாடு மிக குறைவான மெமரியை பயன்படுத்துவதுதான்.

இன்னமும் வேறு என்ன விசேஷங்கள் விண்டோஸ் 7-ல்

மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் வெளியீடு க்கு எப்போதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு. அதுவும் சில நேரங்களில் பல்வேறு மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துவிடும். ஏனெனில் அந்த நிறுவனத்தின் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அவர்களே ஒரு ப்ராடக்ட் உருவாக்கிவிடுவார்கள்.
உதாரணத்திற்கு
விண்டோஸ் விர்ச்சுவல் பிசி, விர்ச்சுவல் சர்வர் - விஎம்வேர் மென்பொருளுக்கு பதிலாக
விண்டோஸ் சிஸ்டம் சென்டர் : ஐபிஎம். எச்பி நிறுவனங்களின் மேலாண்மை பொருளுக்கு
இப்படி அடுக்கிககொண்டே போகலாம்.
ஆனால் இப்படி அவர்கள் உருவாக்கிக்கொணடே வந்தாலும் புதியவனற்றை உருவாக்குவதே இல்லை. ஏற்கனவே வெளிவந்துள்ளவை போன்று உருவாக்கி அதைவிட மேம்படுத்தி தருகிறார்கள். அதாவது சில நிறுவனங்கள் சாப்பிட கற்றுக்கொடுத்தால் இவர்கள் வாயில் ஊட்டிவிட்டுவிடுகிறார்கள்.

சரி.. விண்டோஸ் 7-ன் சிறப்பம்சம் என்ன....
இதை தற்போது வெளிவந்துள்ள உபுண்டுவின் புதிய வெளியீட்டுடன் ஒப்பிட்டும் ஒரு பார்வை
புதிய சக்தி
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 போன்ற மென்பொருட்கள் வெளியீட்டில் அவர்கள் கொண்டுவந்துள்ள தாரகமந்திரம் புதிய சக்தி. அதற்கு அவர்கள் சொல்லும் கதை. ஆரம்ப கால குண்டுபல்பு அதிக மின்சாரத்தை எடுத்தது. ஆனால் இப்போதுள்ள சிஎல்அப் லைட்கள் மிக குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதுதான்.
அதேபோல் பழைய மென்பொருட்கள் விட மிக அதிகமான வேகத்தில் குறைந்த மின்சார செலவுடன் வேலையை எளிதில் முடித்துவிடும் தொகுப்பு விண்டோஸ் 7 என்கிறார்கள்.

பிட்லாக்கர்

மேலும் வன்பொருட்களுடன் இணைந்து தகவல் பாதுகாப்பிற்காக பிட்லாக்கர் மென்பொருளை உள்ளிணைத்திருக்கிறார்கள். இதை தகவல் பாதுகாப்பிற்காக பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம்.

ஆப்ஸ்லாக்கர் : எந்தெந்த மென்பொருட்கள் இயங்கவேண்டும் என்று இந்த பயன்பாட்டில் கொடுத்துவிட்டால் போதுமானது. அந்த குறிப்பிட்ட மென்பொருட்கள் மட்டுமே இயங்கும்.

மேம்படுத்தப்பட்ட தேடல் :
உணமையில் இந்த தேடல் நல்ல அருமையான தேடல். முந்தைய பயன்பாடுகளில் தேடல் என்றால் குறிப்பிட்ட தேடல்களை மட்டும்தான் தேடும். ஆனால் இது அப்படியல்ல.. இணையத்தில் நாம் எப்படி தேடுவோமோ அதே மாதிரி தேடலாம். அதாவது add hardware, add printer, change printer , இப்படி பல முறைகளில் தேடும் வசதி நன்றாகவே இருக்கின்றது.

கிராபிக்ஸ்
விண்டோஸ் விஸ்டாவின் முழு பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றால் கிராபிக்ஸ் பிராசசர்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7-ல் அப்படி ஏதும் இல்லை. மேலும் பின் என்ற முறையின் வழியே அடுககிவைக்கப்பட்டிருக்கும் பயன்பாடுகளை காணலாம். இப்படி எல்லாமே வண்ணமுறையில் வளமாக இருக்கின்றது.
மேலும் நாம் கணினயில் துவங்கியுள்ள பயன்பாடுகளை டாஸ்க்பார் லைவ் என்ற முறையின் வழியே சிறிய அளவி்ல் முன்பார்வை பார்க்கும் வசதியும் அளித்திருக்கிறார்கள்.

வீட்டுகுழுமம்
நாம் கணினியை பல்வேறு இடங்களில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லால் வீட்டிலும் பயன்படுத்தலாம். இதற்கு யுசர் நேரம், பாஸ்வேர்டு போன்ற விபரங்கள் தர தேவையி்ல்லை. நாம் தேர்ந்தெடுத்தவை மட்டும் ஷேர் செய்தால் போதும்.

அதோடு அலுவலகத்தில் தனி பிரிண்டர், வீட்டு உபயோகத்திற்கு தனி பிரிண்டர் என்று வைத்திருப்போம். அவைகளை வீட்டு கணினியில் இணைத்துவிட்டால் வீட்டீல் உபயோகப்படுத்தப்படும் பிரிண்டரை தானாகவே தன்னியல்பாக எடுத்துச்செல்லும் முறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

ஸ்ட்ரீமிங் வீடியோ

இது ஒரு படி மேல்.
அதாவது நமது மடிக்கணினியில் ஸ்பிக்கர் இல்லை எனும்போது வீட்டு உபயோக கணினியில் வீடியோ வை தரவிறக்காமல் நேரடியாக மடிக்கணினியில் இருந்து வீட்டு கணினியில் இயங்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் முறையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

பாதுகாப்பு
இதுவும் ஒரு நல்ல பயன்பாடு
எப்படி?
அதாவது நாம் குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். திடீரென்று அது செயலிழந்துவிட்டது. பதறவே வேண்டாம். அந்த பைலின் மேல் வலது கிளிக் செய்து ரீஸ்டோர் -ல் சென்று பார்த்தால் 5 நிமிஷத்துக்கு முந்தைய கோப்பு, 10 நிமிடம், அரை மணி நேரம் என்று பல்வேறு வகையில் தரவுகளை தானாகவே சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். எனவே எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
அது குறிப்பிட்ட ஆவணத்திற்கு மட்டுமல்ல , கோப்புக்களுக்கும் உண்டு.

அதேபோல் கோஸ்ட் பேக்அப் போல் இங்கேயும் பேக்முறை உண்டு. சிஸ்டம் பைல்கள் மட்டுமே இமேஜ் பேக் அப் எடுக்கலாம்,
அல்லது தேவையான கோப்புகளையும் இங்கே கொடுத்துவிடலாம். இப்படி கொடுத்துவிட்டால் போதுமானது . ப்ரச்னையான நேரத்தின்போது நாமே சிஸ்டத்தை பேக்அப் செய்துகொள்ளலாம்.

டிப்ளாய்மெண்ட் டுுல் கிட்
ஒரே நேரத்தில் பல்வேறு கணினிகளில் விண்டோஸ் 7 ஐ நிறுவிடலாம் வெகு எளிதாக.

குருப் பாலிசி :

இதுவும் கணினி மேலாண்மைக்காக கருவிதான். ஆக மொத்தம் விண்டோஸ் விஸ்டாவில் இருந்து குறையை சரிகட்டி உருவாக்கியிருக்கும் இம்மென்பொருள் விற்பனை மிக நன்றாகவே இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

மேம்படுத்தல்
விணடோஸ் எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயங்குதளங்களில் இருந்து விண்டோஸ் 7 க்கு மாற்றம் செய்திட யுசர் மைகிரேசன் கருவியும் இருக்கின்றது.
இன்னமும் பல்வேறு வசதிகள் இப்பயன்பாட்டில் வெளிவந்திருக்கின்றன.

விலையும் வழக்கும்போல அதிகமாகத்தான் இருக்கும் என்றாலும் விஸ்டாவினை விட சற்று குறைவாகத்தான் இருக்கிறது.

எல்லாத்தையும் சொல்லிட்டு இத சொல்லைன்னா எப்படி?
விண்டோஸ் மென்பொருட்கள் எல்லாவற்றிருக்கும் அதன் வெளியீடு வந்த அனறே லாக் ஐ திறக்க சாவி வந்துவிடும். இதற்கும் வெளியிட்ட அன்றே வந்துவிட்டது. என்ன செய்ய, மென்பொருட்கள் இப்படித்தான் பரவலாயிட்டு இருக்கு.

மொத்தத்தில் 1 ஜிபி ராமும், 16 ஜிபி ஹார்ட் டிஸ்க்கும் இருக்கிறவங்களுக்கு விண்டோஸ் 7 கொண்டாட்டம்

காசு கொடுத்தி பயன்படுத்தினா விண்டோசுக்கு போங்க இல்லைன்னா லினக்சுக்கு வந்திடுங்க
உபுண்டு லினக்சை தரவிறக்கிட்டு பயன்படுத்தி பார்த்துட்டு சொல்றேன்...

No comments: