பாட்நெட்ஸ் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு முன்னால் சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
தேடல்தளம்
பாட்ஸ்
ரோபாட்ஸ்
அதென்ன தேடல் தளம்.
இதோ இன்று கூகிளாண்டவர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கூகிள் தேடல் இயந்திரமும் ஒரு தேடல்தளம்.
தேடல்தளத்தில் பல துறைகள் உள்ளன. பொதுவான தேடல், துறை தேடல், தேடல்களுக்கெல்லாம் தேடல் என்று பல துறைகள் உள்ளன. (இது பற்றி பின்னர் எழுதுகிறேன்)
சரி தேடல் தளம் என்றால்என்ன என்று பார்த்தோம். இப்ப தேடல்தளங்கள் நாம் தேடியவுடன் எப்படி தகவல்களை தருகின்றது... அதுவும் வேறு வெப்சைட் ல் இருக்கும் தகவல்களை இது திரட்டி தருகின்றது.....
அங்கே உதவுவதுதான்
பாட்ஸ்
பாட்ஸ் என்பது இன்று பரவலாக பயன்படுத்தப்படும் /இணையத்தின் மதிப்புமிக்க சொத்து எனலாம். ஆமாம் ஏனெனில் நமது வலைத்தளமோ அல்லது இணையதளமோ தேடல் தளங்களில் தேடியவுடன் வருவதற்கு ஆவண செய்வது இந்த பாட்தான்.
இதன் முக்கிய வேலை நமது தளத்தில் உள்ள இதர இணையத்தளங்களில் உள்ள தகவல்களை தேடல்தளங்களின் டேட்டாபேஸ்களுக்கு மிகச்சிதமாக கொண்டுபோய் சேர்ப்பது இந்த பாட்ஸ்தான்
இங்கே முக்கிய கேள்வி. நமது தளத்தில் உள்ள தகவல்களை தேடல் தளத்தில் கொண்டு போகின்றனவே என்று அது பாதுகாப்பானதா என்று கேட்கலாம்.
இந்த இடத்தில் நமக்கு உதவுவதுதான்
ரோபாட்ஸ்
நமது தளத்தில் ரோபாடிக்ஸ் என்ற பெயரில் ஒரு ஆவணம் இருக்கும். அதனுள் நமது தளத்தில் அந்த பாட்கள் எங்கெல்லாம் தகவல்களை திரட்டலாம் என்று கொடுத்தால் போதும்.
இந்த பாட் ஆனது எந்த தளத்தில் தகவல்களை சேகரிக்க சென்றாலும் முதலில் இந்த ரோபாடிக்ஸ் ஆவணத்தை படிக்கும். அதனுள் எங்கெல்லாம் தகவல்களை திரட்டலாம் என்று நாம் அனுமதி அளித்த இடத்தில் பாட் ஆனது தகவல்களை திரட்ட ஆரம்பிக்கும்.
இதுதானுங்க தேடல் தளம் தேடும் மற்றும் வேலை செய்யும் விதம்
சரி இப்ப பாட்நெட்ஸ் என்றால் என்னன்னு பார்க்கலாமா?
பாட்நெட்ஸ் என்பது கூட்டுக்களவாணிகளின் கூடுதுறை
பாட்நெட்ஸ் என்பது ஆன்லைன் மோசடி வேலைகள் பலவற்றைச் செய்வதற்கென்றெ சைபர் கிரிமினல் கும்பல் ஒன்று தங்கள் வசம் வைத்திருக்கும் கணினிகளின் தொகுதியாகும். இதன் வழியாக நம்மை அறியாமலேயே நமது கணினிகளை இந்த பாட்நெட் களவாணிகள் அவர்கள் வேலைக்காக பயன்படுத்திக்கொள்வார்கள்.
அது எப்படி சாத்தியம் அங்கே பயன்படுத்துவதுதான் இந்த பாட்ஸ்கள்.
ஹேக்கர்கள் அவர்களுக்கென ஒரு தனி பாட்ஸ் மென்பொருட்களை உருவாக்கி பயன்படுத்திவருகிறார்கள். முன்பே சொன்னதுபோல் பாட்ஸ் என்பது நமது தளத்தில் உள்ள தகவல்களை திரட்டும் அமைப்பு என்பது. ஆனால் இந்த பாட்ஸ் ஆனது ரோபாட்டிக்ஸ் பைல்களில் இருப்பதை தாண்டியும் தேடும். அவர்கள் பயன்படுத்தும்போது நம்மையறியாமல் நமது தகவல்கள் அவர்களுக்கு சென்றுவிடும். அதேபோல் பிரவுசிங் செய்யும்போது பாட்ஸ் உங்கள் கணினிகளில் நீங்கள் அறியாமலேயே இன்ஸ்டால் ஆகிவிடும்.
பின் இந்த பாட்கள் வழியாக உங்கள் கணினியை அந்த கிரிமினல் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடும். அதாவது சி&சி சர்வர் என்று அழைக்கப்படும் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் சர்வர் மூலம் உங்களை கட்டுப்படுத்தத் துவங்கும்.
இதனால் அடையாள திருட்டு, போலி வணிக மின்னஞ்சல்கள், மாபெரும் மோசடி சமாச்சாரங்கள், இன்னபிறவற்றை உங்கள் கணினி மூலம் நடத்தி தங்கள் பாக்கெட்டுகளை பெருமளவு பணத்தால் நிரப்பும் இந்த கும்பல் தற்போது அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகளையும் பெற்றிருக்கிறது. சமீபத்தில் பூமியின் துறை அறியும் சோதனை நடைபெறும் குழும நெட்வொர்க்கில் இணைய வழங்கியை ஹேக் செய்திருக்கிறார்கள்.
சென்ற வருடம் மத்தியில் கான்பிலிக்கர் என்ற வைரஸ் பெரிய அளவில் தாக்கக்கூடும் என்று கணினி வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்..
ஆமாம் உண்மையில் அந்த கான்பிலிக்கர் வைரசில் கிட்டத்தட்ட 10,000,000+ இதன் பின் தொடர்ச்சியாக ஒன்பது பூச்சியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். அத்துணை பாட்ஸ்களை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதன் வழியாக ஒரு நாளைக்கு 10பில்லியன் தாக்குதல்களை கணினிகள் மீது தாக்கலாம். இதன் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலுவான கணினிகளும் மெதுவாக இயங்கும். வலுவிலந்த கணினிகள் அதோகதிதான்.
பெரும்பாலும் பிரவுசர் மூலமே பாட்நெட்ஸ் கணினிகளுக்குள் ஊடுருவுகிறது. இதுதான் கணினியில் வைரஸ் உள்ளிட்ட பிற கிரிமினல் நடவடிக்கை சக்திகள் ஊடுருவ 60 சதவீத வழியாக உள்ளது. இமெயில் அட்டாச்மென்ட்கள் மூலம் 13 சதவீதமும், ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் 11 சதவீதமும், டவுன்லோடு செய்யப்பட்ட இன்டெர்னெட் ஃபைல்கள் மூலம் 9 சதவீதமும் பாட்னெட்ஸ் ஊடுருவுகிறது.
எனவே இதை தடுக்கும் விதமாக முதலில் உங்களது கணினிகளை முறையாக அனுமதி பெற்று பயன்படுத்துங்கள்.
பின் ஆண்டிவைரஸ் மற்றும் பயர்வால் மென்பொருட்களை அவ்வப்போது நிறுவுங்கள்.
உங்கள் கணினியின் இணைய இணைப்பு ஆமை வேகத்தில் உள்ளதா?, பிரவுசரின் விசித்திரமான செயல்பாடுகள், உதாரணமாக உங்கள் முகப்புப் பக்கம் அடிக்கடி மாறுகிறதா? புதிய விண்டோக்கள் திறக்கிறதா? உங்கள் கணினியின் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதா? தானகவே ஆஃப் ஆகி தானாகவே ஸ்டார்ட் ஆகிறதா? பாட்நெட்ஸ் உங்கள் கணினியில் உட்கார்ந்துள்ளதன் அறிகுறிகள் இவை.
அடுத்த கட்ட தொழில்நுட்ப ஆபத்து நம் அருகில் இருக்கிறது.
உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------
No comments:
Post a Comment