பெருகிவரும் இணைய பயன்பாட்டில் 10% குறைவான முகவரியே கையிருப்பு.
முதலில் ஐபி4 பற்றி தெரியாதவர்களுக்கு : பிணையத்திலும், இணையத்திலும் பயன்படுத்தும் கணினிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள ஒவ்வொரு கணினிக்கும் முகவரியாக ஒரு எண்ணைஐ கொடுப்பார்கள். அந்த எண்ணின் வடிவம்தான் ஐபி4.
உலகளாவிய அளவில் இணையம் இயங்குவதற்கு முக்கிய காரணமே இந்த ஐபி முகவரிகளாகிய எண்கள்தான். அப்படியா என்று கேட்பதற்கு முன்னர் ஒரு சிறு விளக்கம் . நம்மில் இணையம் பயன்படுத்தும் அனைவருக்கும் டிஎன்எஸ் என்பது பற்றி தெரியும்.
Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எந்த வள ஆதாரங்களுக்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். இணையத்திலோ அல்லது பிணையத்திலோ பங்கேற்கும் உறுப்புக்கள்(கணினி, அச்சு பொறி, மொபைல், பிடிஏ) என ஒவ்வொன்றுக்கும் ஒரு ஐபி முகவரி ஒதுக்கப்படும்.
குறிப்பாக நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை, இவை இணைய உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா www.tamilvanigam.com என்பது 174.37.210.240 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது.
இதில் 174.37.210.240 என்கிற இந்த எண் ஐபி4 முறைப்படி அமைந்திருக்கிறது.
ஆம் இதில் உள்ள அனைத்து முகவரிகளுக்கும் 32 பிட் அல்லது 4பைட் அளவில் அமைந்திருக்கும்.
இப்படி 0.0.0.0 முதல் 255.255.255.255 வரை முகவரிகளை நாம் வழங்கலாம். இப்படி ஒவ்வொரு கணினிக்கும், அச்சுப்பொறிகளுக்கும், அலைபேசிகளுக்கும் வழங்கினாலும் மொத்தமாக 4,294,967,296,( நானுற்றி 29 கோடியே49 லட்சத்து அறுபத்திஎழு ஆயிரத்து இருநூற்றி தொண்ணுத்தாறு) முகவரிகள்தான் வழங்கமுடியும்.
தற்போது இணையம் சார்ந்த பணிகள் அதிகரித்துவருவதால் ஒவ்வொரு எலக்ட்ரானிக் பொருளுக்கும் ஐபி முகவரி என்பது இன்றியைமயாததாகிறது. தற்போது பெரிய பெரிய அலுவலகங்களில் நிறுவனங்களை மேலாண்மையிட ஐபி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றனது. இப்படி ஒவ்வொரு கேமராக்களிலும் ஐபி முகவரிகள் வழியாக இயங்குவதால் ஐபி முகவரிகள் விரைவாக செலவாகிவிட்டது.
அதிலும் குறிப்பாக இன்னொன்று...
தற்போது அகண்ட அலைவரிசை எனப்படும்ப்ராட்பேண்ட் வழியாக இணையத்தை தொடர்புகொள்வோர்கள் மிக அதிகம். அதனாலும் ஐபி முகவரிகள் குறைந்துவருகின்றன. ப்ராட்பேண்ட் இணையத்தை பயன்படுத்துபவதால் எப்படி ஐபிமுகவரிகள் குறையும் என்று கேட்கலாம்.
ஒவ்வொரு முறையும் கணினி இணையத்தை தொடர்புகொண்டவுடன் அவர்களுக்கான இணைய வழங்கியானது தானாகவே ஒரு ஐபி முகவரியை வழங்கும். இப்போது அகண்ட அலைவரிசையானது குறைந்தவிலையில் கிடைப்பதால் யாரும் இணையத்தை விட்டு அகலுவதேஇல்லை .இதனால் ஒரே கணினி ஒரே முகவரியை பெற்றுவிடுகிறது.
மேலும் வளர்ந்த நாடுகளில் ஒவ்வொரு இணைய இணையப்பிற்கும் ஒரு நிலையான ஐபி முகவரி வழங்கிவிடுகிறார்கள். இப்படி பல்வேறு காரணங்களால் இதுவரை வந்த ஐபி4 இன்னமும் 10% குறைவான அளவுதான் இருக்கிறது.
தீர்வு.
1996ம் ஆண்டிலேயே ஆண்டிலிருந்து ஐபி 6 முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பின் இதற்கு முன்னமே கணினி ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டறிந்து நான்காம் தலைமுறைக்கான புதிய ஐபி முகவரிகளை வடிவமைத்துவருகின்றன.
அதுதுான் ஐபி6 முகவரி. இந்த முகவரி 128 பிட் அளவில் வரும் என்பதால் எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம். அதோடு ஐபி செக்யூர் எனப்படும் பாதுகாப்பு முறைகளும் மேம்படுத்தப்படும்
தற்போது கூகிள் நிறுவனமும், இந்தியாவில் ஃசிபி நிறுவனமும் ஐபி6 முறைக்கு மாறிவருகின்றன என்பது குறிப்பிட்டத்தக்கது.
எனவே இந்த வருடம் தொட்டே அனைத்து நிறுவனங்களும் ஐபி6 முறைக்கு மாறும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கொசுறு : ஐபி4 முறை செப்டம்பர் , 1981ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐபி6 1990ம் ஆண்டில் வெளியிட்டபட்டு வந்தாலும் இன்னமும் இவற்றை முழுமையாக பயன்படுத்தவில்லை.
*. கூகிள் நிறுவனம் 2009ம் ஆண்டு இறுதி வரை தன்னுடைய மொத்த நெட்வொர்க்கில் 28% சதவிதத்தை மட்டுமே ஐபி6 நெட்வொர்க்கிற்கு மாற்றியிருக்கிறது
* 2011 ம் ஆண்டில் ஐபி4 முகவரிகள் முழுவதும் தீர்ந்து ஐபி6 முகவரிகளுக்கு மாற்றும் என்று கணித்துள்ளனர்.
உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------
3 comments:
தெளிவான, விரிவான அலசல்.
நல்லதொரு பகிர்வு
very gud
great work
karurkirukkan.blogspot.com
அருமை
தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள்
Post a Comment