உலகளவில் நோக்கியா நிறுவனம் தான் மொபைலில் பெருமளவு சந்தையை கொண்டுள்ளது. நோக்கியாவின் பெரும்பகுதி சந்தையை உடைக்க சாம்சங், எல்ஜி, மோட்டோரோலா, ஐபோன் என்று பழம் பெரும் நிறுவனங்களும் போராடிவருகின்றன.
இடையில் சீன/ கொரிய மொபைல்களும். அப்படியிருக்கையில் கூகிளின் ஆன்டிராய்டு அலைபேசியின் இயங்குதளமானது கட்டற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ளதால் இயங்குதளம் சார்ந்த அலைபேசி சந்தையில் பாதிக்கு மேல் ஆன்டிராய்டு தன்னகத்தே கொண்டுள்ளது.
உலகில் எப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பத்தின் புதிய புரட்சிகள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அந்த புரட்சிகளின் தமிழ் சார்ந்த வல்லுநர்களும் தங்கள் பணியை அப்புரட்சியில் கொண்டுவந்துவிடுவார்கள்.
சரி ,ஆன்டிராய்டின் சிறந்த 25 மென்பொருட்களை பார்ப்போமா?
திரு.முகுந்த் அவர்கள் தலைமையிலான தமிழா மென்பொருட்கள் குழுவில் உள்ள குரு.ஜெகதீஷ் அவர்கள் உருவாக்கியுள்ள இம்மென்பொருள் அலைபேசிகளில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி இல்லை என்ற தமிழ் ஆர்வலர்களின் குறையை நீக்கியுள்ளது.
இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஆன்டிராய்டில் நேரடியாக தமிழ் மொழிக்கு சேவை வழங்கப்படவில்லை எனினும் நாம் தமிழில் தட்டச்சு செய்தவற்றை டிஸ்கி(tscii) வழியாக காட்டச்செய்து, யுனிகோடில் பதிவு செய்கிறார்கள்.இது ஒரு மிக முக்கியமான அம்சம். ஒபேராவில் உலாவினால் தமிழ் தட்டச்சு செய்வதும், தமிழில் படிப்பதும் சாத்தியமே....கணினியே தேவையில்லாமல் நேரடியாக ஆன்டிராய்டு வழியாக மின்உலகில் வலம்வரலாம்....தமிழ் விசையின் உதவியுடன் . இலவசம்
கொசுறு:
அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மின் புத்தகம். எல்லா பகுதிகளையும் மின் புத்தகமாக வெளியிட்டுஉள்ளனர். இது வரவேற்கவேண்டி ஒன்று. என்னாலும் இன்னமும் நிறைய புத்தகங்கள் வெளிவரவேண்டும். இலவசம்
இந்த மேப் மென்பொருளின் உதவிக்கொண்டு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கும் செல்லவேண்டிய இடத்திற்கும் எவ்வளவு தூரம், நடந்தே சென்றால் எவ்வளவு நேரம், காரில் சென்றால் எவ்வளவு நேரம், மின்னூர்தியில்(Train) சென்றால் எவ்வளவு நேரம், எப்படி செல்வது என்று வரிசையாக காட்டிக்கொண்டே வரும். மேலும் நாம் செல்ல இது சரியான வழியில்தான் செல்கிறோமோ என்பது முதற்கொண்டு காட்டிவிடுகிறது.
இதை பயன்படுத்தும்போது பேட்டரி வெகு எளிதில் தீர்ந்துவிடும். கவனம்
இலவசம்
உங்கள் ஆன்டிராய்டு அடிப்படையிலான மொபைலை மிகச்சிறப்பாக இயங்க வைக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள். ஏனெனில் ஆன்டிராய்டு இயங்குவது இயங்குதளத்தின் அடிப்படையில் என்பதால் முதன்மை நினைவகத்தினை அவ்வப்போது தேவையில்லாத மென்பொருளை வெளியேற்றி நினைவகத்தினை சிறப்பாக மேலாண்மை செய்வதால் மென்பொருள்களும் சிறப்பாக இயங்குகின்றன.
இலவசம்
இம்மென்பொருள் மிகச்சிறப்பான பாதுகாப்பு மென்பொருள். இந்த மென்பொருளில் ஆன்டிவைரஸ், பயர்வால் மற்றும் ஆன்டிராய்டில் உள்ள நமது அலைபேசி எண்களை பேக் ப் எடுக்கவும் வசதிஉள்ளது. மேலும் நம் அலைபேசி எங்கேனும் தொலையும் பட்சத்தில் இதில் உள்ள mobile antilost வழியாக எளிதில் கண்டறியலாம். மேலும் மெமரியையும்(முதன்மை நினைவகம்-RAM ) அதிகமாக எடுத்துக்கொள்ளாது.
இரு நண்பர்களுக்குள் தாங்கள் எடுத்த படங்கள், வீடியோக்கள் பைல்கள் ஆகியவற்றை ஆகியவற்றை வெகு எளிதாக பரிமாற்ற இரு மொபைல்களையும் கிட்டே வைத்தாலே அவற்றை பரிமாற்றிட உதவும் மென்பொருள்.
இலவசம்
-------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------