வணக்கம் நண்பர்களே,
முதல் பகுதியில் இணையத்தளம் என்றால் என்ன என்று பார்த்தோம்.
முதலில் இணையம் என்று சொல்கிறோமே, இணையம் என்றால் என்ன?
இணையம் என்பது பிணையத்தால் வந்தது. அட குழப்புதே என்கிறீர்களா..
ஒரு சிறிய உதாரணம். நம்மூரில் எல்லா இடங்களிலும் ஏதோ கேபிள் (வடம்)பதிக்கிறார்கள் என்று என்று சாபம் கொடுப்போமே அந்த கேபிள்(வடம்) இணைப்புக்கள்தான் இன்று தொலைத்தொடர்பு துறையின் முதுகெலும்புகள். இந்த கேபிள்கள் ஒவ்வொரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு , அந்த ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு என்று நீண்டுகொண்டே செல்லும். முக்கியமான இடங்களில் OFC எனப்படும் பைபர் ஆப்டிகல் வடத்தினை இணைத்திருப்பார்கள்.
இப்படித்தான் இந்தியா முழுதும் உள்ள இணைப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில்தான் இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு இயங்கிவருகிறது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு கடல் வழி வடம் உண்டு. இப்படி எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.
அதுபோலத்தான் இந்த தொலைதொடர்பு வடங்களை கொண்டுத்தான் இணையம் இயங்குகிறது. எப்படி.
உதாரணத்திற்கு எங்கள் கிராமமான மத்தூரில் பிஎஸ்என்எல் வழியாக இணைய இணைப்பு வாங்கியிருக்கிறார்கள் எங்கள் மக்கள். அதே மாதிரி அமெரிக்காவில் உள்ள கிராமத்தில் இருந்து அவர்கள் ஊர் At &T வழியாக ஒரு கிராம மக்கள் இணைய இணைப்பு வாங்கியிருக்கிறார்கள். சிங்கப்பூரிலும், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் மக்கள் இப்படித்தான் ஒரு தொலைதொடர்பு சேவை நிறுவனம் வழியாக இணையத்தினை தொடர்பு கொள்வார்கள்.
இப்படி தொலைதொடர்பு சேவை வழியாக இணையம்வருபவர்களுக்கு மிகச்சரியான தகவல்களை அளிப்பது யார்...
உதாரணத்திற்கு microsoft.com என்று உலாவில் தட்டச்சு செய்து நுழைவு விசையை அழுத்தியவுடன் microsoft.com என்பது எங்கே இருக்கிறது என்ற தகவல்களை நமக்கு தருவது யார்.
இங்கே நமக்கு உதவுபவர்கள் இருவர்.
இணைய வழங்கி, டிஎன்எஸ் வழங்கி ஆகிய இருவரும் இருடல் ஓருயிர் போல... ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் இல்லை. அந்த அளவுக்கு ஒரு நெருக்கம்...
இவற்றில் உள்ள டிஎன்எஸ் வழங்கிதான் பெரிய பணியை செய்கிறார். அவர் பணி என்ன?
நம் தொலைதொடர்பு துறை வழியாக இணையதளத்தினை தொடர்புகொள்ளும்போது தொலைதொடர்பு துறையின் DNS அமைப்பு வழியாக இணைய வழங்கி இருக்குமிடத்தை கண்டறிந்து உங்களை சரியான இடத்திற்கு கொண்டு சேர்ப்பவர் தான் இந்த டிஎன்எஸ்.
Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எல்லாவற்றிற்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். பங்கேற்கும் கணினிகள் மற்றும் எல்லா இயந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் Domain பெயர்களுடன் இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது. அதுவுமில்லாமல் கணினியின் வன்பொருட்களையும், பெயர்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் அவற்றை தொடர்புகொள்வது பெரிய சிரமம்.
இப்ப தொலைதொடர்பு, இணைய வழங்கி , DNS ஆகியவற்றை தெரிந்துகொண்டோம். அடுத்து என்ன ?
வினாக்கள் வரவேற்கப்படுகின்றன,
---------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------
7 comments:
நல்ல தகவல். நன்றி அடுத்து தொடருங்கள்
தேவையான பகிர்வு நண்பா.
@ பொன்மலர்
மிக்க நன்றி பொன்மலர்....
@
முனைவர்.இரா.குணசீலன்
நன்றி நண்பரே!!
அருமையான முயற்சி பயனுள்ள தகவலகள் வலம் வருகின்றன அவற்றை மின் அஞசலில் நேரடியாக கிடைக்க செய்தால் நன்று வளர்க உங்கள் பணி
புதுகை ஜீ வீ ஆர்
நண்பர் வரதராஜன் அவர்களே,,
உடனே ஏற்படுத்திவிடலாம்.
நன்றி!!
தொடர்ந்து வருகிறோம் இமயம் தொட.. நல்ல தகவல் பகிர்வு..
சிறப்பான பதிவு முரளி.நன்றி.
Post a Comment