#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Friday, September 9, 2011

வாங்க பழகலாம்!!, வெப்ஹோஸ்டிங் - 4!!

வணக்கம் நண்பர்களே!!

மீண்டும் நான்காம் பாகத்தில்உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.....
இதுவரை வெப்சர்வர்கள், டிஎன்எஸ் சர்வர்கள், இணையம், பேண்ட்வித் என்றால் என்ன என்பது பற்றி பார்த்தோம்!!

இதுக்கு முன்னாடி நாம பார்த்தது Domain name system எனப்படும் வெப்சைட் பெயர்கள். அதைப்பற்றி விரிவாக பார்ப்போமா?

DNS பற்றி நிறைய பார்த்தோம். இந்த DNS எப்படி முழுமையாக இயங்குகிறது என்று பார்ப்போமா?

DNS பற்றி படிக்காதவர்கள் இங்கே இருந்து படிக்கலாம்...http://itnewshot.blogspot.com/2011/08/2.html

இந்த DNS முழுமையாக இயங்க கீழ்க்கண்ட பதிவுகள் அவற்றிற்கு முக்கியமாக தேவை.


A - பதிவு

இந்த A பதிவானது DNS ன் முக்கியமான அங்கம். அதாவது ஒரு இணையதளத்தின் பெயரை கொடுத்து உலாவும்போது அந்த இணையதளத்தின் ஆவணங்கள் எல்லாம் ஒரு சர்வரில் பதிந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சர்வரின் IP முகவரியை இந்த A பதிவானது கொண்டிருக்கும். 

உதாரணத்திற்கு www.tamilvanigam.com என்று கொடுத்தவுடன் நம் DNS சர்வரானது tamilvanigam.com ல் உள்ள DNS பதிவுகளை படிக்கிறது. அதில் A பதிவில் உள்ள 75.126.38.186 என்ற சர்வர் ஐபி முகவரியை பார்க்கிறது. பின் அந்த முகவரியை தொடர்புகொளளும்போது அங்கே உள்ள டிஎன்எஸ் ஆனது இந்த தளம் இந்த சர்வரில் இந்த பயனருக்கான இடத்தில் இந்த போல்டரில்(கோப்புக்குள்) (உதாரணம்: http://75.126.38.186/tamilva/public_html)  வைக்கப்பட்டுள்ளது. 

இந்த 75.126.38.186 என்ற ஐபி முகவரியானது ஒரு  IPV4 முகவரியை கொண்டுள்ளது. இந்த IPV4 வரிசை எண்கள் எல்லாம் முடிந்துவிட்டதால் தற்போது IPV6 முறைமைக்கு மாறியிருக்கிறார்கள். அந்த ஐபி முகவரி 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334 இப்படி வரும். 


ஐபி பற்றி அறிந்துகொள்ள கீழ்க்கண்ட பதிவை காணவும்
http://itnewshot.blogspot.com/search/label/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF4


AAAA - பதிவு

இந்த பதிவானது  A பதிவை போலத்தான். அவைகள் 12 டிஜிட்களுக்கு(32bit) மட்டுமே இடமளிக்கும். ஆனால் IPV6 முறைக்கு மாறியிருக்கிறார்கள். அந்த ஐபி முகவரி 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334 இப்படி வரும்.  128 bit என்ற அளவில் இருக்கும்.

CName - Canonical name record

 என்பதேன் சுருக்கமே இந்த சிநேம்.

இந்த சிநேம் வலைபதிவர்கள் எல்லாம் அறிவார்கள். ஏனெனில் www.test.blogspot.com என்பதினை .www.test.com என்ற பெயருக்கு மாற்றம் செய்வதை நாம் அனைவரும் அறிவோம். இப்படி ஒரு இணையதள பெயரை சுருக்கியோ அல்லது ஒரு சர்வரில் இருந்து இன்னொரு சர்வருக்கோ  அதே சர்வரில் உள்ள வேறு இடத்திற்கோ மாற்றம் செய்து தருவதுதான் இந்த சிநேம். நுட்பரீதியாக நிறைய பயனளிக்க கூடியது.


MX     - Mail Exchanger Record (MX record) 

இது நம் நிறுவன பெயர்களிலோ அல்லது வேறு நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துவர்களுக்கு தெரியும். நம் மின்னஞ்சல் முகவரிகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்வர்கள் எங்கே இருக்கின்றன என்பதினை கொண்டிருக்கும் விபரம்தான் இந்த mx 


SOA  - Specifies authoritative information

 என்பதன் சுருக்கமே இந்த SOA
இதன் முக்கியபணி நம் வழங்கியின் பெயர் விபரம் மற்றும் அந்த வழங்கியின் தள மேலாளர் முகவரி அடங்கிய விபரம் இருக்கும்.

அடுத்த பாகத்தில் வெப் சர்வர்கள் பற்றி பார்ப்போம்!!

வெப்சைட்தொடர்பான உங்கள் கேள்விகளையும் நீங்கள் தாரளமாக கேட்கலாம்...
நன்றி!



-----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

6 comments:

menan said...

Maddog domain name இலுருந்து blogger இக்கு எப்படி மாத்துவது என்று விளக்க முடியுமா ??? அதாவது maddogஇல் டொமைன்நேம் வாங்கியபின் அதைbloggerகு எப்படி divert பண்ணுவது தெரிந்தால் உதவவும்

செல்வமுரளி said...

@ மேனன்

டீம்வியூவர் வழியாக சொல்லித்தரலாம் உங்களுக்கு..
ஏனெனில் ஒவ்வோருவரின் கன்ட்ரோல்பேனல் ஒவ்வொன்று போல் இருக்கும்.

அல்லது DNS control பக்கத்தினை பிரிண்ட்ஷாட் அனுப்புங்கள்.
நன்றி!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

ADMIN said...

பயனுள்ள பதிவு..! தொடருங்கள்.!

Anonymous said...

என்னப்பு நல்லாருக்கியா?! :)

பயனுள்ள பதிவு முரளி

Ramesh said...

நல்ல தொடர்...வாழ்த்துக்கள், ஒரு சிறிய விண்ணப்பம்...சில டெக்னிகள் வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, அதற்கான ஆங்கில எழுத்தையும் அடைப்புகுறிக்குள் கொடுத்தால்...இன்னும் பயனுள்ளதாக இருக்கும்..நன்றி..