2011 ம் வருடங்களில் சமூக இணையத்தளங்கள் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளன என்பது யாராலும் மறுக்கமுடியாத ஒன்று.
ஆம், பல நாடுகளில் புரட்சி வெடிக்கவும், ஒருமித்த கருத்துக்களை உடைய குழுக்களை ஒன்றிணைக்கவும் பாலமாக விளங்கியது இந்த சமூக இணையத்தளங்கள். மேலும் ஜப்பானில் மிகப்பெரிய சுனாமி ஏற்பட்ட போது மற்ற நுட்பங்கள் எல்லாம் ஸ்தம்பிக்க சமூக இணையத்தளங்கள் வழியாக அங்கேயுள்ள மக்களின் நிலைமையை அறிந்துகொண்டதும், அங்கே பாதிக்கப்பட்டவர்கள் தமது குடும்பங்களுக்கு தாங்கள் பத்திதிரமாள்ளது பற்றியும் சமூக இணையத்தளங்களின் வழியாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டபோது அவர்களின் குடும்பத்தினர்கள் சகஜ நிலைக்குள்ளானதும் தகவல்களில் தெரிய வந்தது.
ஆக இவைகளெல்லாம் சமூகத்திற்கு ஒரு மிகப்பெரிய சேவை ஆற்றி வருகின்றன என்பது உண்மையே .
நாணயத்தின் இருபக்கத்தினைப்போல் சமூக இணையத்தளங்களுக்கும் நன்மை/தீமை என்ற இரு பக்கம் உள்ளது. சமூக இணையத்தளங்கள் ஒரு மாய உலகம். உள்ளே செல்ல செல்ல பிரபஞ்சத்தின் விரிவடையும் பக்கம் போல நீண்டு கொண்டே செல்லும் உலகம்.
அது ஒரு புறம் என்றால் சமீபகாலமாக கருத்து சுதந்திரம் என்ற ஒன்று இன்று எல்லாரையும் ஆட்டிப்படைக்கிறது. சமீபத்தில் கபில் சிபில் கூட இந்தியாவில் இயங்கும் சமூக இணையத்தளங்களின் நிர்வாகிகளை அழைத்து பேசியது நினைவிருக்கலாம்.
எனவே அரசாங்கங்கள் சமூக இணையத்தளங்களை கட்டுப்படுத்தி அவைகளை பூதாகரமாக வெடிக்கும் முன்னர் அவர்களோடு கரம் சேர்த்துக்கொண்டால் நிச்சயமாக சமூகத்திற்கு மிகப்பெரிய மாற்றம் கிடைக்கும். ஏனெனில் ஒரு அரசாங்கத்தினையே மாற்றும் திறன் இந்த சமூக இணையத்தளங்களுக்கு உண்டு.
தற்போதைய அமெரிக்க அதிபரான ஓபாமே தன்னுடைய வெற்றிக்கு சமூக இணையத்தளங்களை பயன்படுத்திக்கொண்டாரே அப்போதே இதன் பலம் வெளிபட்டுவிட்டது .
எனவே சமூக இணையத்தளங்கள் தனி அரசாளும் முன் அரசாங்கம் அவற்றினை தன்னோடு இணைத்துக்கொண்டு பயனித்தால் யாவருக்கும் பிரச்னையில்லாமல் பயனிக்கலாம். ஆனால் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய மாற்றங்களை தரலாம்.....
சரி அரசாங்கமும் சமூகஇணையத்தளங்களும் இணைந்தால் என்ன பயன்?
முதல்படியாக அரசாங்கம் தம் மின்னாளுமை திட்டங்களில் ஒரு பகுதியாக சமூக இணையத்தளங்களுடன் கைகோர்த்து சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் மிகப்பெரிய மாற்றங்களை செயல்படுத்தலாம். பைசா செலவில்லாமல்
ஆம், அரசாங்கத்திற்கு முக்கிய பிரச்னையே பணப் பற்றாக்குறைதானே. அந்த பண பிரச்னையே இல்லாமல் இதன் வழியாக மின்ஆளுமை திட்டங்களை பைசா செலவில்லாமல் செய்யலாம்.
செலவில்லாமல் என்றால் அரசாங்கம் நிச்சயமாக முன்வரும். இதுபோன்ற பணிகளை எடுத்துச் செய்ய........... :)
அல்லது அரசாங்கம் விருப்பப்பட்டால் தன்னார்வக்குழுக்களுடன் இணைந்தும் தனி சமூக இணையத்தளங்களையே அறிமுகப்படுத்தலாம்.
ஏனெனில் சமூக இணையத்தளங்கள் சமூகங்களுக்காகத்தானே.....
அடுத்த பாகத்தில் அரசாங்கங்கள் ஒவ்வொரு துறையிலும் சமூக இணையத்தளங்களை எப்படி பயன்படுத்தலாம் . துறை ரீதியான விளக்கங்களுடன்........
சந்திப்பேன்................
-----------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------
No comments:
Post a Comment