வணக்கம் நண்பர்களே!
" விவசாயம் பற்றி ஒரு புத்தகத்தில் படித்தப்போது எப்படியான சூறாவளி காற்றுக்களை தடுக்கவும் வேலி மரங்கள் உள்ளன என்று கூறுகிறார்கள். அதாவது சூறாவளிகளையும் வேலியாக இருந்து காக்கும் வேலி மரங்கள் நிறைய உண்டு. அவைகளையெல்லாம் வேலியாக பயன்படுத்தி பயிர்களை காக்கலாம் "
தானே தாண்டவத்தில் கடலூர், விழுப்புரம், பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களில் தானே ஆடிய தாண்டவம் பற்றி ஆனந்த விகடனில் விரிவாக வந்த செய்தியை படித்தபோது மனம் கனத்துத்தான் போனது.
அங்கே உள்ள விவசாய நிலங்கள் எல்லாம் சீரழிக்கப்பட்டன என்றது நாமெல்லாம் அறிந்ததே!! அதோடு மட்டுமல்லாமல் பலா, முந்திரி ஆகிய மரங்கள் எல்லாம் 75% அழிந்தே விட்டன. மீண்டும் அவைகள் காய் காய்க்க ஒரு தலைமுறையே எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள். அதுவரை இவர்கள் எப்படி விவசாயம் செய்வார்கள். மீண்டும் பலா, முந்திரி , தென்னை போன்றவை வளர ஒரு தலைமுறை இடைவெ ளி வேண்டியிருக்கிறது.
எனவே விவசாயத் துறையில் ஆர்வமுள்ளவர்கள் ஏன் இதை ஒரு சவாலாக எடுத்து செய்யக்கூடாது. அவர்களின் வாழ்வாதாரணமான மரங்களை சீக்கிரமாக ஆனால் பாரம்பரிய முறைப்படி எப்படி மீண்டும் விரைவாக காய் காய்க்க செய்யலாம்.
இவைற்றையெல்லாம் சோதனை முயற்சியாக பரிட்சித்துப்பார்த்தால் அடுத்தும் வரும் புயல்களில் இருந்து அவர்களையும் காக்க முடியும்.
மேலும் ஒரு வீட்டையே பெயர்த்தெடுத்து எடுத்து இன்னொரு இடத்தில் வைக்கும் நுட்பங்கள் நம்மிடம் நிறைய உள்ளது. அப்படியெனில் மரத்தினை பெயர்த்தெடுத்து நாம் ஏன் அங்காங்கே வைக்க கூடாது. ?
இதை எப்படி தயார் செய்யலாம்
மரங்களின் கிளைக்கு பதியம்போடுவதை விட மரங்களுக்கே ஏன் பதியம் போடக்கூடாது. அதாவது அதன் கிளைகள் உட்பட எல்லாவற்றினையும் வெட்டிவிட்டு அதன் வேரோடு தாய் மண்ணையும் சேர்த்து 3 அடிகளுக்கு சேர்த்து பத்தியம் போட்டால் வெகு எளிதாக அவற்றினை எங்கேயும் வளர்த்துவிடலாம். ஆனால் விரைவாக....
மண் ஒப்புக்கொள்ளுமா என்று கேட்கலாம். இந்த பதிய மரம் பதியப்போகும் இடத்தில் மண்ணின் தரத்தினை ஊட்டப்படுத்தும் முறையினை கையாளலாம். மண்புழு உரம், வேப்பம் புண்ணாக்கு, பஞ்ச கவ்யா போன்றவற்றினை சேர்த்து செய்யலாம்.
இதுபோன்ற இள மரங்களுக்கு என்ன செய்யலாம்.
மரங்கள் எங்கெல்லாம் அதிகமாக வளக்கப்படுகின்றதோ அவர்களிடம் கேட்டு வர வைக்கலாம். பலா மரங்களுக்கு தமிழ்நாட்டில் நிறைய இடங்களில் கன்றுகள் நிறைய கிடைக்கும். புதியதாக நடும் 20 கன்றுகளுக்கு ஒரு மரங்கள் என்று வைத்தால் கூட ஒரளவு பிரச்னைகளை சமாளிக்கலாம்.
முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை. :)
ஏனெனில் மக்களின் வாழ்வதாராம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள போது அவர்களுடன் அரசாங்க இயந்திரங்களும் சேர்ந்து பாதிப்பது இயல்பு. எனவே விபரம் அறிந்தவர்கள் முயற்சிக்கலாம்
------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------
1 comment:
Excellent thinking
Post a Comment