#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Tuesday, August 30, 2011

ஆன்டிராய்டு மொபைல் சிறந்த 5 மென்பொருட்கள்

உலகளவில் நோக்கியா நிறுவனம் தான் மொபைலில் பெருமளவு சந்தையை கொண்டுள்ளது.  நோக்கியாவின் பெரும்பகுதி சந்தையை உடைக்க சாம்சங், எல்ஜி, மோட்டோரோலா, ஐபோன் என்று பழம் பெரும் நிறுவனங்களும் போராடிவருகின்றன.

இடையில் சீன/ கொரிய மொபைல்களும். அப்படியிருக்கையில்  கூகிளின் ஆன்டிராய்டு அலைபேசியின் இயங்குதளமானது கட்டற்ற முறையில் வெளியிடப்பட்டுள்ளதால் இயங்குதளம் சார்ந்த அலைபேசி சந்தையில் பாதிக்கு மேல் ஆன்டிராய்டு தன்னகத்தே கொண்டுள்ளது.

உலகில் எப்போதெல்லாம் தகவல் தொழில்நுட்பத்தின் புதிய புரட்சிகள் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் அந்த புரட்சிகளின் தமிழ் சார்ந்த வல்லுநர்களும் தங்கள் பணியை அப்புரட்சியில் கொண்டுவந்துவிடுவார்கள்.

சரி ,ஆன்டிராய்டின் சிறந்த 25 மென்பொருட்களை பார்ப்போமா?

திரு.முகுந்த் அவர்கள் தலைமையிலான தமிழா மென்பொருட்கள் குழுவில் உள்ள குரு.ஜெகதீஷ் அவர்கள் உருவாக்கியுள்ள இம்மென்பொருள் அலைபேசிகளில் தமிழ் தட்டச்சு செய்யும் வசதி இல்லை என்ற தமிழ் ஆர்வலர்களின் குறையை நீக்கியுள்ளது. 
      இதில் முக்கியமான சிறப்பம்சம் என்னவெனில் ஆன்டிராய்டில் நேரடியாக தமிழ் மொழிக்கு சேவை வழங்கப்படவில்லை எனினும் நாம் தமிழில் தட்டச்சு செய்தவற்றை டிஸ்கி(tscii) வழியாக காட்டச்செய்து, யுனிகோடில் பதிவு செய்கிறார்கள்.இது ஒரு மிக முக்கியமான அம்சம். ஒபேராவில் உலாவினால் தமிழ் தட்டச்சு செய்வதும், தமிழில் படிப்பதும் சாத்தியமே....கணினியே தேவையில்லாமல் நேரடியாக ஆன்டிராய்டு வழியாக மின்உலகில் வலம்வரலாம்....தமிழ் விசையின் உதவியுடன் . இலவசம்

கொசுறு:

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் மின் புத்தகம். எல்லா பகுதிகளையும் மின் புத்தகமாக வெளியிட்டுஉள்ளனர். இது வரவேற்கவேண்டி ஒன்று. என்னாலும் இன்னமும் நிறைய புத்தகங்கள் வெளிவரவேண்டும். இலவசம்


இந்த மேப் மென்பொருளின் உதவிக்கொண்டு நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம். நீங்கள் இருக்கும் இடத்திற்கும் செல்லவேண்டிய இடத்திற்கும்  எவ்வளவு தூரம், நடந்தே சென்றால் எவ்வளவு நேரம், காரில் சென்றால் எவ்வளவு நேரம், மின்னூர்தியில்(Train) சென்றால் எவ்வளவு நேரம், எப்படி செல்வது என்று வரிசையாக காட்டிக்கொண்டே வரும். மேலும் நாம் செல்ல இது சரியான வழியில்தான் செல்கிறோமோ என்பது முதற்கொண்டு காட்டிவிடுகிறது. 
இதை பயன்படுத்தும்போது பேட்டரி வெகு எளிதில் தீர்ந்துவிடும். கவனம் 
இலவசம்


உங்கள் ஆன்டிராய்டு அடிப்படையிலான மொபைலை மிகச்சிறப்பாக இயங்க வைக்க உதவும் ஒரு சிறந்த மென்பொருள். ஏனெனில் ஆன்டிராய்டு இயங்குவது இயங்குதளத்தின் அடிப்படையில் என்பதால் முதன்மை நினைவகத்தினை அவ்வப்போது தேவையில்லாத மென்பொருளை வெளியேற்றி நினைவகத்தினை சிறப்பாக மேலாண்மை செய்வதால் மென்பொருள்களும் சிறப்பாக இயங்குகின்றன.
இலவசம்

இம்மென்பொருள் மிகச்சிறப்பான பாதுகாப்பு மென்பொருள். இந்த மென்பொருளில் ஆன்டிவைரஸ், பயர்வால் மற்றும் ஆன்டிராய்டில் உள்ள நமது அலைபேசி எண்களை பேக் ப் எடுக்கவும் வசதிஉள்ளது. மேலும் நம் அலைபேசி எங்கேனும் தொலையும் பட்சத்தில் இதில் உள்ள mobile antilost வழியாக எளிதில் கண்டறியலாம். மேலும் மெமரியையும்(முதன்மை நினைவகம்-RAM ) அதிகமாக எடுத்துக்கொள்ளாது.


இரு நண்பர்களுக்குள் தாங்கள் எடுத்த படங்கள், வீடியோக்கள் பைல்கள் ஆகியவற்றை ஆகியவற்றை வெகு எளிதாக பரிமாற்ற இரு மொபைல்களையும் கிட்டே வைத்தாலே அவற்றை பரிமாற்றிட உதவும் மென்பொருள். 

இலவசம்






-------------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Tuesday, August 23, 2011

வாங்க பழகலாம்!!, வெப்ஹோஸ்டிங் - 3!!


வணக்கம் நண்பர்களே!!
மீண்டும் வெப்ஹோஸ்டிங் பழகலாம் - 3 பகுதியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.
இதுவரை நாம் பார்த்தவைகள் என்னென்ன......?

இப்போது நாம் பார்க்கவிருப்பது இணையத்திலும் சரி நுட்பத்திலும் சரி மிகவும் முக்கியமானது
வெப்சைட்கள் எனப்படும் இணையத்தளங்கள் எதற்கு தேவை
வெப்சர்வர்கள், டிஎன்எஸ் சர்வர்கள், இணையம் எப்படி இயங்குகிறது

என்று பார்த்தோம்.

சரி, அன்னியன் படத்தில் கிளைமேக்சில் பிரகாஷ் ராஜ் அன்னியனை எப்படி கண்டுபிடிப்பார் என்று சொல்ல முடியுமா? அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்ககூடாது. அதற்கான பதில்களை சொன்னால் நீங்கள் இந்த கோர்சை வெகு எளிதாக கற்றுக்கொள்ளலாம்.

சரி பேண்ட்வித் என்று ஒரு வார்த்தை கேள்வி கேட்டிருக்கலாம் எல்லாரும்.  இணையத்தினை பயன்படுத்துபவர்கள் எல்லாரும் அறிந்திருப்பார்கள்.

ஆம், நம் வீட்டில் பயன்படுத்தும் இணையம் முதற்கொண்டு இணையத்தில் பயன்படுத்தும் இணையத்தளங்கள்  வரை எல்லாருக்கும் பேண்ட்வித் தேவை.

இப்படித்தான் நம்மூர் முனுசாமி ஒரு நிறுவனத்தில் பிராட்பேண்ட் சேவையை வாங்கி ஒரு மூணு மாசம் கழித்து வந்த கட்டண அறிக்கையை பார்த்தபோது அவருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறை. ஆம், சாதாரணமாக வரவேண்டிய கட்டணத்தினை விட திடீரென அதிகமான 5 மடங்கு வந்துவிட்டதுதான் அதற்கு காரணம்.  உடனடியாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வேகமாக ஓடினார். அவர் பில்லை காட்டி இது என்னன்னு எனக்கு தெரியாது. ஆனா வெளிநாட்டில் இருக்கிற பையன் ட்ட பேசறதுக்கு தான் பயன்படுத்துவேன். இவ்வளவுவெல்லாம் வராதுன்னு அடிச்சுப்பேசிபார்த்தார். ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் சாதாரண நிறுவனமா,, ஒரு ஆள் உயரத்திற்கு ஒரு அறிக்கையை கொடுத்து நீங்க பயன்படுத்துன இணையத்திற்கான விபரம் இதில் இருக்கு.

’’நீங்கள் வழக்கமாக செலுத்திய கட்டணத்திற்கும் நாங்கள் வழங்கும் சேவையை விட அதிகமாக நீங்கள் இணையத்தினை பயன்படுத்துவிட்டீர்கள் ’’ அதனால்தான் பில் கட்டணம் அதிகமாக வந்தது என்று கூறினார்கள். அவருக்கு ஒன்றும் புரியவில்லை. அதிகமாக பயன்படுத்தினேன் சொன்னீங்களே அது பேர் என்னங்க என்று கேட்டார் அந்த அதிகாரிகளிடம்....

அப்போதுதான் அவரிடம் இருந்து பதில் வந்தது.... பேண்ட்வித் அதிகமாக இருக்கு.  நாங்க கொடுத்த லிமிட் தாண்டி நீங்கள் பயன்படுத்தியதால் அதற்கேற்றார்ப்போல் நாங்கள் கட்டணம் கேட்டோம் என்றார்கள்.... 

அப்போதும் புரியவில்லை பேண்ட்வித் என்றால் என்ன என்று..?

பேண்ட்வித் என்பது நாம் செலவழித்த இணையம். அதாவது ஒரு இணையதளத்தினை துவங்கும்போது அந்த இணைய தளத்தில் உள்ள படங்கள், காணொளிகள், டெக்ஸ்ட்கள் என எல்லாமே உங்கள் கணினியில் தோன்றும்போது  அவைகள் எல்லாம் முதலில் உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்யப்படும். அந்த தரவிறக்கம் செய்யப்படும் அளவே பேண்ட்வித்.

இன்னமும் விளக்கமா சொல்லப்பொனால் தினமலர்.காமில் ஒரு படம் 1 எம்பி இருக்கிறது,. அதை உங்கள் கணினியில் பார்த்தால் ஒரு முறை பார்த்தால் 1 எம்பி பேண்ட்வித் செலவாகிறது. இதே போன்ற படத்தினை 10 முறை பார்த்தால் 10 எம்பி  பேண்ட்வித் காலி. 100 முறை பார்த்தால் 100 எம்பி, 30 நாட்களில் 100 முறை பார்த்தால் 100 பெருக்கல் 30 பெருக்கல் 1 எம்பி = 3000 எம்பி - 3 ஜிபி. மாதம்  250 ரூபாய்க்கு 2 ஜிபி இணையக்கட்டணம் என்று கணக்கெடுத்தால் மீதமுள்ள 1 ஜிபிக்கு நாம் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு பணம் செலுத்தணும்.

இந்த பேண்ட்வித் சாதாரண ஆள் இல்லை, இந்த பேண்ட்வித் பிரச்னைதான் மிக முக்கியமான ஒன்று எல்லா நுட்பத்திற்கும்... ஆமாம், 2ஜி, 3ஜி, 4ஜி , 5ஜி என எத்தனை ஜீ வந்தாலும் அதன் கட்டணம் இந்த பேண்ட்வித் ஐ பொறுத்துத்தான் அமையும். புரிந்திருக்குமே..... :)



----------------------------------------------------------------------------------------

ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Saturday, August 6, 2011

வாங்க பழகலாம்!!, வெப்ஹோஸ்டிங் - 2!!

வணக்கம் நண்பர்களே,

முதல் பகுதியில் இணையத்தளம் என்றால் என்ன என்று பார்த்தோம்.

முதலில் இணையம் என்று சொல்கிறோமே, இணையம் என்றால் என்ன? 

இணையம் என்பது பிணையத்தால் வந்தது. அட குழப்புதே என்கிறீர்களா.. 

ஒரு சிறிய உதாரணம். நம்மூரில் எல்லா இடங்களிலும் ஏதோ கேபிள் (வடம்)பதிக்கிறார்கள் என்று என்று சாபம் கொடுப்போமே அந்த கேபிள்(வடம்) இணைப்புக்கள்தான் இன்று தொலைத்தொடர்பு துறையின் முதுகெலும்புகள்.  இந்த கேபிள்கள் ஒவ்வொரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு , அந்த ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு என்று நீண்டுகொண்டே செல்லும். முக்கியமான இடங்களில் OFC எனப்படும் பைபர் ஆப்டிகல் வடத்தினை இணைத்திருப்பார்கள்.

இப்படித்தான் இந்தியா முழுதும் உள்ள இணைப்புகள் இணைக்கப்பட்டிருக்கின்றன. அதனடிப்படையில்தான் இந்தியாவில் உள்ள தொலைதொடர்பு இயங்கிவருகிறது. இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு ஒரு கடல் வழி வடம் உண்டு. இப்படி எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

அதுபோலத்தான் இந்த தொலைதொடர்பு வடங்களை கொண்டுத்தான் இணையம் இயங்குகிறது. எப்படி.

உதாரணத்திற்கு எங்கள் கிராமமான மத்தூரில்  பிஎஸ்என்எல் வழியாக இணைய இணைப்பு வாங்கியிருக்கிறார்கள் எங்கள் மக்கள். அதே மாதிரி அமெரிக்காவில் உள்ள கிராமத்தில் இருந்து அவர்கள் ஊர் At &T வழியாக ஒரு கிராம மக்கள் இணைய இணைப்பு வாங்கியிருக்கிறார்கள். சிங்கப்பூரிலும், ஆஸ்திரேலியா போன்ற இடங்களிலும் மக்கள் இப்படித்தான் ஒரு தொலைதொடர்பு சேவை நிறுவனம் வழியாக இணையத்தினை தொடர்பு கொள்வார்கள்.

இப்படி தொலைதொடர்பு சேவை வழியாக இணையம்வருபவர்களுக்கு மிகச்சரியான தகவல்களை அளிப்பது யார்...
உதாரணத்திற்கு microsoft.com என்று உலாவில் தட்டச்சு செய்து நுழைவு விசையை அழுத்தியவுடன் microsoft.com என்பது எங்கே இருக்கிறது என்ற தகவல்களை நமக்கு தருவது யார்.

இங்கே நமக்கு உதவுபவர்கள் இருவர்.
இணைய வழங்கி, டிஎன்எஸ் வழங்கி ஆகிய இருவரும் இருடல் ஓருயிர் போல... ஒருவர் இல்லை என்றால் மற்றொருவர் இல்லை. அந்த அளவுக்கு ஒரு நெருக்கம்...

இவற்றில் உள்ள டிஎன்எஸ் வழங்கிதான் பெரிய பணியை செய்கிறார்.  அவர் பணி என்ன?

நம் தொலைதொடர்பு துறை வழியாக இணையதளத்தினை தொடர்புகொள்ளும்போது தொலைதொடர்பு துறையின் DNS அமைப்பு வழியாக இணைய வழங்கி இருக்குமிடத்தை கண்டறிந்து உங்களை சரியான இடத்திற்கு கொண்டு சேர்ப்பவர் தான் இந்த டிஎன்எஸ்.


 Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எல்லாவற்றிற்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். பங்கேற்கும் கணினிகள் மற்றும் எல்லா இயந்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் Domain பெயர்களுடன் இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது. அதுவுமில்லாமல் கணினியின் வன்பொருட்களையும், பெயர்களையும் அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் அவற்றை தொடர்புகொள்வது பெரிய சிரமம். 


  எனவேதான் நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை, இவை இணைய உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா www.tamilvanigam.com என்பது 75.126.38.186 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது. 

இப்ப தொலைதொடர்பு, இணைய வழங்கி , DNS ஆகியவற்றை தெரிந்துகொண்டோம். அடுத்து என்ன ?

வினாக்கள் வரவேற்கப்படுகின்றன,





---------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Friday, August 5, 2011

வாங்க பழகலாம்!!, வெப்ஹோஸ்டிங் !!


இணையத்தில் நிறைய நண்பர்கள் எல்லாம்  கேட்டுக்கொண்டதற்கு இணங்க  இணையத்தளங்கள் பற்றிய ஒரு முழுமையான பார்வை மேலும் இணையத்தளங்களால் சம்பாதிக்க வழியுண்டா? இவ்வளவு பணம் கட்டினோம் பணம்தான் கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறவர்களுக்கான முழுமையாக கட்டுரையாக இது இருக்கும்.



வெப்சைட் -ன் பயன்கள்?

புதிதாக வருபவர்கள் மற்றும் இணையம் பற்றி அறிமுகம் இல்லாத எல்லாருக்கும் வரக்கூடிய சந்தேகமே!!

வெப்சைட் ன என்னா? 

வெப்சைட் என்பது தகவல்கள் கொண்ட தகவல்  களம். அதில் பொது தகவல்களோ, உதவிகுறிப்புகளோ, சமையல் குறிப்புகளோ, உங்களின் தயாரிப்புகளோ , உங்கள் தயாரிப்புகளின் சந்தையாகவோ அல்லது உங்கள் எண்ணங்களோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

இதனால் என்ன பயன்?

தகவல் பரிமாற்றம்தான். இந்த தகவல் பரிமாற்றத்தின் வளர்ச்சியை குறைப்பிட்டு மதிக்க முடியாது. ஏனெனில் இந்த தகவல் பரமாற்றம் என்பது அறிவு பரிமாற்றம் தான். மேற்கண்ட எல்லா துறைகளிலும் இந்த அறிவு பரிமாற்றம்தான் உதவுகிறது.

உதாரணத்திற்கு
 பண்டைய காலங்களில் பெரிய சந்தைகள் எல்லாம் கடற்கரையோரங்களில் இருக்கும். கடற்தாண்டி உள்ள நகர்களில் இருந்து வருவோர்கள் எல்லாம்  அவர்களுக்கு தேவையான பொருட்கள் இங்கே வந்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் காலம் இப்போது வேறு. பெருகிவரும் கால தகவல் தொழில்நுட்ப புரட்சியால் மாற்றம் தொலை தொடர்பு என்பது கண நேரமாகிவிட்டது. அந்த தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சிதான் இந்த வெப்சைட்.
இந்த வெப்சைட் -ன் வளர்ச்சியால் எந்த துறைகள் வளர்ச்சி பெற்றதோ இல்லையோ ஆனால் இணையத்தள சந்தைகள் மிகப்பெரிய வணிகத்தை பெற்றன.
இப்படி இதன் பயன்பாடுகளை சொல்லிக்கொண்டே போகலாம்.

சரி வெப்சைட் எனப்படும் இணையத்தளம் எப்படி செயல்படுகிறது? அதன் அடிப்படை கட்டமைப்பு என்ன.
டொமைன் நேம்
வெப்ஹோஸ்டிங்
வெப்சர்வர்
டொமைன் பார்க்கிங்
MX Entry
பேண்ட்வித்
html இவற்றினைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டும்.
ஒவ்வொன்றாக பார்ப்போமா?






-------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Monday, July 11, 2011

அன்னபூர்ணா - இந்தியாவின் 7வது சூப்பர் கம்ப்யூட்டர்...... சென்னையிலிருந்து.....

உலகில் அதிவேகமான கணினிகளை உருவாக்குவதில் உலகில் முன்னணி நாடுகள் போட்டிப்போட்டு செய்துவருகின்றன. அதில் நம் இந்தியாவும் ஒன்று.  இந்தியாவிலிருந்து இதுவரை 6 அதிவேக சூப்பர் கணினிகள் இயங்கிவரும் நிலையில்  தமிழகத்திற்கு மகுடம் வைத்தார்ப்போன்று
சென்னையில் உள்ள இன்ஸ்டியூட் ஆப் மேத்மெடிக்கல் சயின்ஸ் வளாக பிரிலியண்ட் வல்லுநர்கள் நாட்டின் ஏழாவது  அதிக செயல்திறன் கொண்ட சூப்பர் கணினியானஅன்னபூர்ணாவை வடிவமைத்துள்ளனர். .

1.5 டெரா பைட் மெமரி, 30 டெரா பைட் சேமிக்கும் திறன் கொண்ட இந்த அதிவேக சூப்பர் கணினி, இயற்பியல்,லாட்டிஸ் தியரி, கம்யூட்டனல் பையலாஜி போன்ற துறைகளில் ஆராய்ச்சி செய்ய பயன்படுத்தப்படும் என்று கூறியுள்ளனர். இந்த அன்னப்பூர்ணா ரூ.6 கோடி செலவில் நாட்டின் ஆராய்ச்சித் துறைக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரி அன்னபூர்ணாவின் செயல்திறன் எப்படி என்று பார்ப்போமா?

1). 1024 கோர் - இண்டெல் நேகலெம் 2.93GHz சிப்ஸ்
(நமது கணினிகளில் நாம் பயன்படுத்துவது 1 கோர்(core) மட்டுமே நமது கணினிகளை விட 1024 மடங்கு வலிமையுடையது இந்த கணினி.)

2).1.5 டெரா பைட் மெமரி
நாம் இப்போது பயன்படுத்துவது  1 GB RAM . 1.5 TB=1500 GB RAM)

3)30 டெரா பைட் ஸ்டோர்ஜ் = 30 TB (1024 gb= 1 TB)

12 டெராபிளாப் வேகம் கொண்ட அன்னபூர்ணா நம் நாட்டின் மூன்றாவது மிக அதிக செயல்திறன் கொண்ட கணினியாக கருதப்படுகிறது.

இதே போன்று பெங்களூரில் உள்ள இண்டியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் ஒரு கணினியையும்,டாடா இன்ஸ்டியூட் ஒரு கணினியையும் முன்பு வடிவமைத்து உள்ளன.

அன்னபூர்ணா இண்டியன் இன்ஸ்டியூட்டின் நான்காவது அதிக செயல்திறன் கொண்ட கணினியாகும்.

ஏற்கனவே கப்ரு,விந்தியா,ஆரவள்ளி ஆகிய முதல் மூன்று கணினிகள் இன்னும் செயல்பாட்டில் உள்ளன.

நாட்டின் 15 இன்ஸ்டியூட்களை இணைக்கும் பணியை செய்யும் கருடா கிரிட் நிறுவனத்திற்காக கப்ரு சூப்பர் கணினி செய்கிறது.



ஆனால் என்ன ஒரு விசயம்...

மின்சாரத்தை நிறைய சாப்பிடும் :)

 சுட்டிக்கம்ப்யூட்டரை உருவாக்கிய நம்மூர் ஆட்களுக்கு வாழ்த்துக்கள்


----------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Thursday, July 7, 2011

வெவ்வாலும், செல்போன் கதிர்வீச்சும்

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்.

இன்று மாலை என்னோட செங்குதிரையில் வந்துட்டு இருந்தப்ப....... திடீர்னு ஒரு வெவ்லவால்  என் மேல வந்து மோதியது.

அப்பத்தான் என்சிற்றறிவுக்கு எட்டியது.
வெவ்வால் கள் தான் வெளியிடும் நுண்ணலைகள் மூலம் எங்கெல்லாம் தடை வருகிறதோ அவைகளை  கண்டறிந்து மாறி சென்றுவிடும். அப்படியிருக்கு இது எப்படி என் மேல் மோதியது...

நான் நின்ற இடத்தில் ஒரு 100 அடி தூரத்தில் செல்போன் டவர் இருந்தது. ஒருவேளை டவரிலிருந்து வெளிவரும் நுண்ணலைகளால் வெவ்வால்களின் நுண்ணலைகள் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டதா?

இதுபற்றி சமீபத்தில்தான் படித்தேன். ஒரு புத்தகத்தில்
நெடுந்தூரம் பறக்கும் பறவைகள் தற்பொது தடம் மாறி பறப்பதாகவும் இதற்கு முக்கிய காரணம் செல்போன் கதீர்வீச்சுக்கள்தான் என்று..
இது உண்மையா?









ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Saturday, July 2, 2011

தமிழக அரசின் லேப்டாப் திட்டம் - பாதுகாப்பானதா..?



" இலவசமாக மாணவர்களுக்கு லேப்டாப் தந்தாலும் அதன் பயன் என்னவென்று அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும். ஏனெனில் நாம் அவர்களை இந்த லேப்டாப் கொடுத்து வரவேற்க விருப்பது கணினியுகத்திற்கும், மாயவலையான இணயத்திற்கும் அழைப்பிதழ். சற்று தடம் மாறினாலும் மாயவலையின் அடிமையாகிவிடுவார்கள்"


தமிழக அரசின் லேப்டாப் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் திட்டம் எல்லா தரப்பிலும் வரவேற்கப்பட்டாலும்  முழுமையான பாதுகாப்பு இல்லாமல் வெளியிடுவது ஆபத்தான ஒன்று. மேலேகண்ட வளர்ந்த நாடுளில் உள்ள குழந்தைகள் கணினிக்கே அடிமையாகிவிட்ட செய்தியும் இருக்கிறது என்பதினை நாம் மனதில் கொள்ளவேண்டும்

முதலில் உலகம் முழுதும் உள்ள  இளம்வயதினர்  பற்றியும் அவர்கள் கணினி சார்ந் த பொருட்களில் செலவிடும் நேரத்தையும் அறிந்துகொள்ளலாமா?

  • 66%  8- முதல்18-வயதுள்ளவர்களிடம் சொந்த செல்போன் 
  • 76% சதவித குழந்தைகளிடம் ஐபாட் உள்ளிட்ட எம்பி ப்ளேயர்கள்
  • 28% மட்டுமே எவ்வளவு நேரம் கணினியை பயன்படுத்தவேண்டும் என்றும் தெரிகிறது.
  • 30% மட்டுமே தெரிகிறது கம்ப்யூட்டர் கேம்ஸ்ன் விதிமுறைகள்
  • 36% மட்டுமே தெரிகிறது கம்ப்யூட்டரை பயன்படுத்தும் விதிமுறைகள்
  • மீடியாவிற்கு( தொலைகாட்சி, கம்ப்யூட்டர் கேம்ஸ், இணையம்) ஆகியவற்றிற்கு மிகஅதிகமாக அடிமையாகிறார்கள்
  • ஒரு நாளைக்கு ஆடியோ, கணினி, வீடியோ கேம்ஸ் மற்றும் படம் பார்த்திலயே அதிகப்படியான நேரத்தினை செலவிடுகிறார்ள்
  • இணையத்தில் சோசியல் தளங்களிலும், விளையாட்டுகளிலும், வீடியொக்களை பார்ப்பதிலுமே நேரம் அதிகமாக செலவாகிறது
  • 74% o7வது முதல் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் எல்லா சோசியல் தளஙகிறது

இப்படி உலகம் முழுதும் குழந்தைகள் /மாணவர்கள் டிஜிட்டல் யுகத்தில் பெரும்பான்மையான நேரத்தினை செலவிடப்படுகிறது என்ற  அதிர்ச்சி தகவல்  ஒரு புறமிருக்க...

பாமர மாணவ/மாணவியர்கு  லேப்டாப் என்பது வரவேற்கத்தக்கது என்று பாமரர்கள் போல் நாமும் நினைத்தால் அது நிச்சயமாக தவறு..

நம் நாட்டில் தொழில்நுட்ப சட்டத்திட்டங்கள் இன்னமும் முழுமையாக இல்லை. அப்படியெனும் பட்சத்தில் சட்டத்திட்டங்கள் மிகவும் சரியாக இருக்கவேண்டும்.இல்லாவிட்டில் வளர்ந்துவரும் இளம் முறை தவறான வழியில் செல்லாமல் இருக்கும். சமீபத்தில் வெளிவந்த கணக்கெடுப்பில் இந்தியாவின் இந்த நூற்றாண்டில் இளைஞர்கள்தான் மிக அதிகமாக இருப்பார்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் வளர்ந்துவரும் யுகத்தில் தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரித்துவருகிறது. எனவே வளரும் தலைமுறை தொழில்நுட்பம் கற்க வரும்போது வேறு ஏதாவது தளம் வரும். அப்படி வரும்போது  அவர்கள் தடம்மாறினால் அது இன்னமும் சிக்கலாய் முடியும்... ஏனெனில் இளைஞர்களை சரியான பாதையில் செல்ல வழிகாட்டாவிடில் சிக்கல் சமூகத்திற்குத்தான்...

நம் அரசு இலவசமாக லேப்டாப் உடன் தமிழ் தட்டச்சு கீபோர்ட்டு என்று எல்லாம் தருகிறார்கள். ஆனால் ஒரு எச்சரிக்கை!!

கட்டுரை படிக்கும் எல்லாரும் கூகிளில் தேடலில் "அம்மா" என்று தேடிப்பாருங்கள். கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற தமிழ் இணையப்பயிலரங்கில் இதை தேடிப்பார்த்த நாங்களே அதிர்ந்துதான் போனோம்.


இப்படியிருக்க மாணவர்கள் இணையத்தில் ஏதாவது தேடப்போய் கிடைத்தால் இது போன்று கிடைத்தால் சிலர் அல்லது பலர் தடம் மாற வாய்ப்புள்ளது. மேலும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும் இணையத்தை பயன்படுத்துவதில் சட்டத்திட்டங்களும், கட்டுப்பாடுகளையம், தேவையற்ற தகவல்களையும் கட்டுப்படுத்தும் வகையில் மாற்றங்களை செய்தபின் லேப்டாப்களை தரவைக்கலாம். 

மேலும் தமிழை வளர்க்க தேவையான பணிகளை செய்ய ஆட்கள் இல்லையே என்று எல்லலோரும் வருந்திக்கொண்டிருக்க. நம் ஆட்கள் இதுபோன்ற விசயங்களை வளர்ந்துகொண்டிருக்கிறார்கள் சத்தம் இல்லாமல்...

. இவையெல்லாம் கட்டுப்படுத்தாவிடில் சிக்கல்கள் நிச்சயமாக வளரும் சமூகத்திற்குத்தான்

முதலில் என்னென்ன பிரச்னைகள்:

கணினியில் மேல் உள்ள ஆர்வம் ஒருவேளை அவர்கள் கணினிக்கே அடிமையாகிவிட்டால் முதலுக்கே மோசமாகிவிடும்.

இணையமும், இணையத்தில் உள்ள சோசியல் தளங்களும் மாணவர்களின் பெரும்பான்மையான நேரத்தினை எடுத்துக்கொள்கிறது. 

சைபர் சட்டம் பற்றி தெரியாமல் சைபர் குற்றம் சார்ந்த ஏதேனும் குற்றத்தை செய்துவிட்டால்

தேவையில்லாமல் இணையத்தையும் கணினியையும் அதிகமாக பயன்படுத்தினால் படிப்பும் குறையும், கணினி சார்ந்த நோய்களும்வரும்....

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்....

சரி இவ்வளவு பிரச்னைகள் இருக்கிறது. எப்படி சரி செய்ய

இந்த பிரச்னைக்கான லகான் அரசு மட்டும் அரசு சார்ந்த நிறுவனங்கள் மூலமே செய்ய முடியும். அல்லது பெற்றோர்களின் கண்காணிப்பு இருக்கவேண்டும். அப்படியும் இல்லையெனில் மாணவ/மாணவியருக்கு சைபர் கிரைம் சட்டத்திட்டங்கள் தெரிந்திருக்கவேண்டும். மேலும் சுயக்கட்டுப்பாடும் வேண்டும்

அரசாங்கம் என்ன செய்யவேண்டும் ?

 தேவையான தளங்களை மட்டுமே பார்க்க முடியும்படி செய்யலாம்.

சமூக இணையத்தளங்களை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்த செய்யலாம்.

பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு மின்னஞ்சல் முகவரி நேரடியாக பள்ளியில் இருந்து தரும் வசதி. 

ஆபாச வார்த்தைகள் தேடினாலும் கிடைக்காமல் செய்யவேண்டும்.  

அரசாங்கமே ஒரு பொதுவான இணையத்தளத்தை வெளியிட்டு அதிலியே மாணவர்களுக்கு தேவையான மென்பொருள்கள் , தேடும் வசதி, மின் புத்தகம் வசதி , கல்விக்கான வீடியோ என்று எல்லா இணைப்பையும் தரலாம்.

இவைகளெல்லாம் தனித்தனியாக செய்யப்படாமல் அரசாங்கமே ஒரு பொதுவான DNS SYSTEM வழியாக மேற்கண்ட பணிகளை எல்லாம் செய்யலாம்.
பெற்றோர்கள் என்ன செய்யவேண்டும்?

மேலும் பெற்றோர்கள் தேவையற்ற இணையதளங்களை வேண்டாமென்று சொன்னால் அதை தடுக்க தனி மென்பொருள்.

முடிந்தவரை கணினியை அவர்களின் படுக்கையறையில் வைக்காமல் பொது இடத்தில் வைத்தால் கணினியை அதிகமாக பயன்படுத்துவது குறையும்.

அவர்கள் கணினியின் வழியாக என்ன செய்யவேண்டும் என்று சொல்லித்தரவேண்டும்.

மாணவ/மாணவியர்கள் என்ன செய்யவேண்டும்

தங்களுக்கென தனி இலக்கை நிர்ணயித்து அதற்கேற்றார்ப்போல் சரியான பாதையில் பயணிக்கவேண்டும். 

இவற்றில் முக்கியமான லாகன் அரசாங்கத்திடமும், பெற்றோர்களிடமும்தான் இருக்கிறது. எனவே இதையெல்லாம் அரசாங்கம் அறிந்துகொள்ளவேண்டும். 

பலவித சிக்கல்கள் உள்ள இந்த விசயத்தை அரசாங்கம் சாதாரணமாக எடுத்துக்கொண்டு செயல்படுவது ஆச்சரியமாகத்தான் உள்ளது.
இது குறித்து அரசாங்கத்திற்கு விழிப்புணர்வு வேண்டும்.


இவையெல்லாவற்றையும் விட மிக முக்கியமாக கூகிள் நிறுவனத்திற்கு இதுபோன்ற வார்த்தைகள் தேடினால் தளத்தை ஓபன் செய்யாதிருக்க அல்லது தேடலில் காட்டாமல் இருக்க கேட்டுக்கொள்ளப்படவேண்டும். கூகிள் மட்டுமல்லாமல் எல்லா தேடல் தளங்களும் இதை செய்யவேண்டும்.


இல்லாவிடில் சிக்கல் யாருக்கு?


............... .....................................................................உங்கள் எண்ணத்திற்கே......


-----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------