#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Friday, December 18, 2009

ட்விட்டரும் ஹேக் செய்யப்பட்டது.



சமுக இணைய தளங்களில் அதிவேகமாக வளர்ந்துவரும் ட்விட்டர் இணைய தளம் சில நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது.

ஹேக்செய்யப்பட்ட பின்பு தோன்றிய தள முகப்பில் இத்தளத்தினை இரானியர்கள் இராணுவத்தின் சைபர் பிரிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதோடு அரபு மொழியில்  "இணையத்தை அமெரிக்காத்தான் நிர்வகித்து வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் எங்கள் சக்தியை பயன்படுத்தி நாங்களும் இணையத்தை கட்டுபடுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்."  இதோ அந்த அரபுவார்த்தைகள்ஆங்கிலத்தில்
Iranian Cyber Army
THIS SITE HAS BEEN HACKED BY IRANIAN CYBER ARMY
iRANiAN.CYBER.ARMY@GMAIL.COM

U.S.A. Think They Controlling And Managing Internet
By Their Access, But THey Don't, We Control And Manage Internet By Our Power, So Do Not Try To Stimulation Iranian Peoples To .

NOW WHICH COUNTRY IN EMBARGO LIST? IRAN? USA?
WE PUSH THEM IN EMBARGO LIST
Take Care."
----
சமீப காலமாக ட்விட்டர் தளம் மீது தாக்குதல்கள் அதிகமாக நடைப்பெற்று வருகின்றன.
எனவே ட்விட்டர் பயனாளர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை உடனே மாற்றிவிடவும். அது சாலச்சிறந்தது.


மேலும் எல்லா மின்னஞ்சல் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை ட்விட்டர் உட்பட எந்த சமுக இணையதளத்திலும் பயன்படுத்தாதீர்கள்.

நன்றி



-----------------------------------------------------------------------------------------------------
உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க
WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------

Thursday, December 10, 2009

ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்!

ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்!

கூகிள்
சாப்ட்வேர் உலகின் மன்னாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினை எதிர்க்கொண்டு போட்டியும் தைரியமிக்க நிறுவனம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எல்லாவித மென்பொருளுக்கும் போட்டியான ஒரு மென்பொருளை முழுதும் இலவசமாக வெளியிட்டுவருவது வரவேற்கத்க்க ஒன்று.
ஆனால் கடந்த சில மாதங்களாக அதன் கூகிள் சர்வரில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அதன் வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் கிட்டத்தட்ட 10 தடவைக்கும் மேல் இயங்காமல் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தடங்கள் இலவச வாடிக்கையாளர்களுக்கு  மட்டுமல்லாமல் அதன் கூகிள் ஆப்ஸ் எனப்படும் கட்டண சேவையும் முடங்கியது.
இந்நிலையில் ஜிமெயில் வழங்கியில் ஏற்படும் தடங்கள்களால்  நம்முடைய அதிமுக்கியமான தகவல்களையும், இதர விபரங்களையும் நாம் எங்கிருந்துஎப்படி பெறுவது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். இம்மாதிரி நேரங்களில் வணிக ரீதியாக மின்னஞ்சல்களை பயன்படுத்துபவர்கள் உட்ப அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும். இக்குறையை போக்க ஜிமெயில் கணக்கில் உள்ள எல்லா மின்னஞ்சல்களையும் பாதுகாக்கிறது இந்த மென்பொருள் ஜிமெயில் பேக் அப் என்ற பெயருடைய இந்த மென்பொருள் வழியாக  நம்முடைய ஜிமெயில் மின்னஞ்சல்களை பாதுகாப்பது எளிது.


எப்படி முதலில் கீழ்க்கண்ட தளத்தில் இருந்து இம்மென்பொருளை தரவிறக்கிகொள்ளுங்கள்.
http://www.gmail-backup.com/download

உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து settings -ல் உள்ள IMAP ஐ இயல்பு நிலைக்கு மாற்றிவேண்டும்.

மாற்றிபியன் ஜிமெயில் பேக்-அப் மென்பொருளை துவக்கவேண்டும். அவ்வாறு துவக்கியவுடன் கீழ்க்கண்ட மாதிரி பக்கம் துவக்கப்படும்.


அதில் ஜிமெயில் லாகின் என்ற இடத்தில் நமது முழு ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை தந்திடவேண்டும்.
பின் கடவுச்சொல்லை தந்துவிட்டு நம்முடைய ஜிமெயில் மின்னஞ்சல்கள் நமது வன்தட்டில் எந்த இடத்தில் சேமிக்கப்படவேண்டும் என்று  தேர்வு செய்ய வேண்டும்.
பின் :எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை வந்த மின்னஞ்சல்கள் நமக்கு வேண்டும் என்பதினை since Date, before Date என்ற இடத்தில் தரவேண்டும்.
பிறகென்ன BackUp என்று தந்துவிட்டால் போதும். உங்களின் இணைய வேகத்தை பொறுத்து எல்லா தகவல்களையும் நமது வன்தட்டிற்கு காப்பி செய்யப்பட்டு விடும்.

எனவே இச்சேவையை பயன்படுத்தி கூகிள் மென்பொருள் இணையதளம் இயங்காத நேரத்திலும் நமது மின்னஞ்சல்களை பார்வையிடலாம்.

கூகிள்  நிறுவனத்தின் சேவைகளில் ஏதேனும் காரணங்களால் தடைப்பட்டுள்ளதா என்று பார்க்க கீழ்க்கண்ட முகவரியை சொடுக்குங்கள்.
http://www.google.com/appsstatus#hl=en




உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------

Sunday, November 8, 2009

விண்டோஸ் 7 - ஒரு பார்வை

சமீபத்தில் கோவையில் விண்டோஸ் 7 வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அதில் அடியேனும் பார்வையாளனாக கலந்துகொண்டேன்.

விஸ்டாவின் தோல்வியை மறைப்பதற்கு மைக்ரோசாப்ட் மேற்கொண்டிருக்கும் ப்ரத்யோக வெளியீடு. விஸ்டாவிற்கும் இதற்கும் அதிகப்பட்ச வேறுபாடு மிக குறைவான மெமரியை பயன்படுத்துவதுதான்.

இன்னமும் வேறு என்ன விசேஷங்கள் விண்டோஸ் 7-ல்

மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் வெளியீடு க்கு எப்போதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு. அதுவும் சில நேரங்களில் பல்வேறு மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துவிடும். ஏனெனில் அந்த நிறுவனத்தின் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அவர்களே ஒரு ப்ராடக்ட் உருவாக்கிவிடுவார்கள்.
உதாரணத்திற்கு
விண்டோஸ் விர்ச்சுவல் பிசி, விர்ச்சுவல் சர்வர் - விஎம்வேர் மென்பொருளுக்கு பதிலாக
விண்டோஸ் சிஸ்டம் சென்டர் : ஐபிஎம். எச்பி நிறுவனங்களின் மேலாண்மை பொருளுக்கு
இப்படி அடுக்கிககொண்டே போகலாம்.
ஆனால் இப்படி அவர்கள் உருவாக்கிக்கொணடே வந்தாலும் புதியவனற்றை உருவாக்குவதே இல்லை. ஏற்கனவே வெளிவந்துள்ளவை போன்று உருவாக்கி அதைவிட மேம்படுத்தி தருகிறார்கள். அதாவது சில நிறுவனங்கள் சாப்பிட கற்றுக்கொடுத்தால் இவர்கள் வாயில் ஊட்டிவிட்டுவிடுகிறார்கள்.

சரி.. விண்டோஸ் 7-ன் சிறப்பம்சம் என்ன....
இதை தற்போது வெளிவந்துள்ள உபுண்டுவின் புதிய வெளியீட்டுடன் ஒப்பிட்டும் ஒரு பார்வை
புதிய சக்தி
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 போன்ற மென்பொருட்கள் வெளியீட்டில் அவர்கள் கொண்டுவந்துள்ள தாரகமந்திரம் புதிய சக்தி. அதற்கு அவர்கள் சொல்லும் கதை. ஆரம்ப கால குண்டுபல்பு அதிக மின்சாரத்தை எடுத்தது. ஆனால் இப்போதுள்ள சிஎல்அப் லைட்கள் மிக குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதுதான்.
அதேபோல் பழைய மென்பொருட்கள் விட மிக அதிகமான வேகத்தில் குறைந்த மின்சார செலவுடன் வேலையை எளிதில் முடித்துவிடும் தொகுப்பு விண்டோஸ் 7 என்கிறார்கள்.

பிட்லாக்கர்

மேலும் வன்பொருட்களுடன் இணைந்து தகவல் பாதுகாப்பிற்காக பிட்லாக்கர் மென்பொருளை உள்ளிணைத்திருக்கிறார்கள். இதை தகவல் பாதுகாப்பிற்காக பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம்.

ஆப்ஸ்லாக்கர் : எந்தெந்த மென்பொருட்கள் இயங்கவேண்டும் என்று இந்த பயன்பாட்டில் கொடுத்துவிட்டால் போதுமானது. அந்த குறிப்பிட்ட மென்பொருட்கள் மட்டுமே இயங்கும்.

மேம்படுத்தப்பட்ட தேடல் :
உணமையில் இந்த தேடல் நல்ல அருமையான தேடல். முந்தைய பயன்பாடுகளில் தேடல் என்றால் குறிப்பிட்ட தேடல்களை மட்டும்தான் தேடும். ஆனால் இது அப்படியல்ல.. இணையத்தில் நாம் எப்படி தேடுவோமோ அதே மாதிரி தேடலாம். அதாவது add hardware, add printer, change printer , இப்படி பல முறைகளில் தேடும் வசதி நன்றாகவே இருக்கின்றது.

கிராபிக்ஸ்
விண்டோஸ் விஸ்டாவின் முழு பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றால் கிராபிக்ஸ் பிராசசர்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7-ல் அப்படி ஏதும் இல்லை. மேலும் பின் என்ற முறையின் வழியே அடுககிவைக்கப்பட்டிருக்கும் பயன்பாடுகளை காணலாம். இப்படி எல்லாமே வண்ணமுறையில் வளமாக இருக்கின்றது.
மேலும் நாம் கணினயில் துவங்கியுள்ள பயன்பாடுகளை டாஸ்க்பார் லைவ் என்ற முறையின் வழியே சிறிய அளவி்ல் முன்பார்வை பார்க்கும் வசதியும் அளித்திருக்கிறார்கள்.

வீட்டுகுழுமம்
நாம் கணினியை பல்வேறு இடங்களில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லால் வீட்டிலும் பயன்படுத்தலாம். இதற்கு யுசர் நேரம், பாஸ்வேர்டு போன்ற விபரங்கள் தர தேவையி்ல்லை. நாம் தேர்ந்தெடுத்தவை மட்டும் ஷேர் செய்தால் போதும்.

அதோடு அலுவலகத்தில் தனி பிரிண்டர், வீட்டு உபயோகத்திற்கு தனி பிரிண்டர் என்று வைத்திருப்போம். அவைகளை வீட்டு கணினியில் இணைத்துவிட்டால் வீட்டீல் உபயோகப்படுத்தப்படும் பிரிண்டரை தானாகவே தன்னியல்பாக எடுத்துச்செல்லும் முறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

ஸ்ட்ரீமிங் வீடியோ

இது ஒரு படி மேல்.
அதாவது நமது மடிக்கணினியில் ஸ்பிக்கர் இல்லை எனும்போது வீட்டு உபயோக கணினியில் வீடியோ வை தரவிறக்காமல் நேரடியாக மடிக்கணினியில் இருந்து வீட்டு கணினியில் இயங்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் முறையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

பாதுகாப்பு
இதுவும் ஒரு நல்ல பயன்பாடு
எப்படி?
அதாவது நாம் குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். திடீரென்று அது செயலிழந்துவிட்டது. பதறவே வேண்டாம். அந்த பைலின் மேல் வலது கிளிக் செய்து ரீஸ்டோர் -ல் சென்று பார்த்தால் 5 நிமிஷத்துக்கு முந்தைய கோப்பு, 10 நிமிடம், அரை மணி நேரம் என்று பல்வேறு வகையில் தரவுகளை தானாகவே சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். எனவே எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
அது குறிப்பிட்ட ஆவணத்திற்கு மட்டுமல்ல , கோப்புக்களுக்கும் உண்டு.

அதேபோல் கோஸ்ட் பேக்அப் போல் இங்கேயும் பேக்முறை உண்டு. சிஸ்டம் பைல்கள் மட்டுமே இமேஜ் பேக் அப் எடுக்கலாம்,
அல்லது தேவையான கோப்புகளையும் இங்கே கொடுத்துவிடலாம். இப்படி கொடுத்துவிட்டால் போதுமானது . ப்ரச்னையான நேரத்தின்போது நாமே சிஸ்டத்தை பேக்அப் செய்துகொள்ளலாம்.

டிப்ளாய்மெண்ட் டுுல் கிட்
ஒரே நேரத்தில் பல்வேறு கணினிகளில் விண்டோஸ் 7 ஐ நிறுவிடலாம் வெகு எளிதாக.

குருப் பாலிசி :

இதுவும் கணினி மேலாண்மைக்காக கருவிதான். ஆக மொத்தம் விண்டோஸ் விஸ்டாவில் இருந்து குறையை சரிகட்டி உருவாக்கியிருக்கும் இம்மென்பொருள் விற்பனை மிக நன்றாகவே இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

மேம்படுத்தல்
விணடோஸ் எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயங்குதளங்களில் இருந்து விண்டோஸ் 7 க்கு மாற்றம் செய்திட யுசர் மைகிரேசன் கருவியும் இருக்கின்றது.
இன்னமும் பல்வேறு வசதிகள் இப்பயன்பாட்டில் வெளிவந்திருக்கின்றன.

விலையும் வழக்கும்போல அதிகமாகத்தான் இருக்கும் என்றாலும் விஸ்டாவினை விட சற்று குறைவாகத்தான் இருக்கிறது.

எல்லாத்தையும் சொல்லிட்டு இத சொல்லைன்னா எப்படி?
விண்டோஸ் மென்பொருட்கள் எல்லாவற்றிருக்கும் அதன் வெளியீடு வந்த அனறே லாக் ஐ திறக்க சாவி வந்துவிடும். இதற்கும் வெளியிட்ட அன்றே வந்துவிட்டது. என்ன செய்ய, மென்பொருட்கள் இப்படித்தான் பரவலாயிட்டு இருக்கு.

மொத்தத்தில் 1 ஜிபி ராமும், 16 ஜிபி ஹார்ட் டிஸ்க்கும் இருக்கிறவங்களுக்கு விண்டோஸ் 7 கொண்டாட்டம்

காசு கொடுத்தி பயன்படுத்தினா விண்டோசுக்கு போங்க இல்லைன்னா லினக்சுக்கு வந்திடுங்க
உபுண்டு லினக்சை தரவிறக்கிட்டு பயன்படுத்தி பார்த்துட்டு சொல்றேன்...

Thursday, May 28, 2009

எங்கேயும் எப்போதும் தமிழில் தட்டச்சலாம் சுலபமாக!!.

ஆம், தொழில்நுட்பம் வளர வளர கணினியில் தமிழை பயன்படுத்தவதற்க்கான தொழில்நுட்பங்களும் தமிழ்ஆர்வலர்களால் உருவாக்கப்பட்டு வருகிறது.
உலகின் பல்வேறு நாடுகளுக்கும் தங்கள் மொழியினை பயன்படுத்தி தட்டச்சு செய்வதற்கு ஏதுவாக ட்வெல்சாப்ட்(Tavultesoft) நிறுவனம் கீமேன் என்ற மென்பொருளை வழங்கிவருகிறது. அதனடிப்படையிலைனா விசைப்பலகைகளை உருவாக்க கீமேன் டெவலெப்பர் என்ற மென்பொருளை விற்கிறது.
நமது தமிழா முகுந்த் அவர்கள் வழங்கி இ-கலப்பையும் இதனடிபப்டையிலானது என்பது அனைவரும் அறிவர்.
தற்போது அதே ட்வெல்சாப்ட் (Tavultesoft) நிறுவனம் முழுவதும் இணையம் சார்ந்த விசைபலகைகளை வெளியிட்டு உள்ளது. ஜாவாஸ்கிரிப்ட் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இம்மென்பொருள்.
நம் higopi தளத்தின் கோபி அவர்களும் இதே போன்ற மென்பொருளை உருவாக்கியிருந்தாலும் இணைய பக்கங்களிலோ அல்லது வலைப்பூக்களிலிலோ ஒட்டியெடுத்துத்தான் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. ஆனால் இந்த கீமேன் வெப் என்ற மென்பொருளின் மூலம் எந்த மெனபொருள்களையும் நிறுவிட அவசியம் இல்லை. எங்கேயும் எப்போதும் இணையத்தில் நாம் தமிமிழை தட்டச்சலாம். இதில் குறிப்பிட்டத்தக்க அம்சம் என்னவெனில் எங்கெல்லாம் உரைப்பெட்டி (text box) பயன்படுத்தப்படுகிறதோ அங்கே தாமாகவே இதனுடைய தட்டச்சு பலகைகள் தாமாகவே தோன்றும்.
இதன் சோதனை ஓட்டம் தமிழ்வணிகத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விபரங்களுக்கு பாருங்க.
http://keymanweb.com

இதன் சோதனை ஓட்டம் : www.tamilvanigam.in-ல் காணுங்கள்

ஆனால் இதிலும் சிக்கல். இந்த மென்பொருளை மாதம் 3000 Hit கள் மட்டுமே பயன்படுத்தமுடியும் அதற்கு மேல் போனால் பணம்தான் கட்டவேண்டும்.

என்றும் அன்புடன்
செல்வமுரளி

Thursday, April 2, 2009

இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டம்!

இணையத்தில் ஆபரேட்டிங் சிஸ்டமா?
ஆச்சர்யத்தோட நானும் ஓடிப்போய் பார்த்தேன். என்னடா ப்ராசசர், மதர்போர்டு , ராம் இல்லாம எப்படி வேலை செய்யும்னு குழப்பத்தோட நானும் ஓடிப்போய் அந்த மென்பொருளை அப்படியே எடுத்து இன்ஸ்ட்டால் பண்ணினேன்.
அட ஆமா

உண்மையாகவே ஒரு ஆபரேட்டிங் சிஸ்டம் வேலை செஞ்சுட்டு இருக்கு.... இணையத்தின் வழியா,
நம்ம லோக்கல் கம்ப்யூட்டர்லயும் இயக்கலாம்.

எப்படி வேலை செய்யுது. எந்த தொழில்நுட்பம்னு ஆராய்ந்து பார்த்தால்

அஜெக்ஸ் Ajax (asynchronous JavaScript and XML) தொழில்நுட்பம்

அஜெக்ஸ் (AJAX = Asynchronous JavaScript And XML) என்பது வலைச்செயலிகளை உருவாக்குவதற்கான ஒரு முறைமையாகும். ஜாவாஸ்க்ரிப்ட், எக்ஸ் எம் எல் போன்ற வலைத்தள வடிவமைப்புக்கு பயன்படுத்தும் மொழிகளைப் பயன்படுத்தி பயனர் இடையீட்டுடன் கூடிய, இணையத்தை அடிப்படையாக கொண்டியங்கும் செயலிகளை வடிவமைக்க பயன்படுத்தப்படும் ஒரு தொழில்நுட்ப உத்தியே ஆகும்.

இவ்வடிப்படையில் வலைத்தளம் அல்லது வலைச்செயலி ஒன்றை வடிவமைக்கும்போது மரபான முறைமைகள் வழியாக அமைக்கப்பட்டதிலும் பார்க்க அதிக வேகம் மிக்கதாகவும், கவர்ச்சிகரமானதாகவும், பயனர் ஊடாட்டம் இலகுபடுத்தப்பட்டும் இருக்கும்.

இம்முறைமை பின்வரும் நிரலாக்க மொழிகளை அடிப்படையாகக் கொண்டது.

XHTML, CSS - வலைப்பக்க சட்டகத்தை உருவாக்கவும் எழிலூட்டி வடிவமைக்கவும் பயன்படுகிறது.
Javascript - (அல்லது உலாவியை மையமாக கொண்டியங்கும் பயனர் பக்க நிரல் மொழி ஒன்று) வழங்கப்பட்ட தகவல்களை இயங்கு நிலையில் காண்பிக்கவும் பெற்றுக்கொள்ளவும் பயன்படுகிறது.
XML - வழங்கிக்கும் உலாவிக்குமான தகவற் பரிமாற்றத்தை ஒழுங்குபடுத்தப்பட்ட வடிவத்தில் கடத்த உதவுகிறது.

குறிப்பு :
இந்த மென்பொருளை இப்போதைய நவீன ப்ரவுசர்கள் மூலமாக பயன்படுத்தினால் இன்னும் நன்றாக இருக்கும்.
ஆப்பிள் கம்ப்யூட்டர் இடைமுகப்போடு கூடிய இந்த மென்பொருளில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கிறது.

ஆபிஸ் நிர்வாகத்திற்கு எம்எஸ் ஆபிஸ் மற்றும் ஓபன் ஆபிசை போன்று இதில் தந்திருக்கிறார்கள். இதில் குறிப்பிட்டதகுந்த விஷயம் ஓபன் ஆபிசில் சில மாற்றங்கள் மற்றும் செய்து அப்படியே உருவாக்கியுள்ளனர்
ஓபன் ஆபிசை அப்படியே இங்கே கொண்டு வந்திருக்கிறார்கள்.

இம்மென்பொருளின் வழியாக உறுப்பினர்கள் அனைவருக்குள்ளும் சாட்டிங் செய்யும் வசதி.

இரண்டு நண்பர்கள் இணைந்து விளையாடும் விளையாட்டுக்கள்

நமது கணினியில் இருந்து இந்த தகவல்களை இந்த மென்பொருளில் ஏற்றி வைத்து பின் தேவையான போது எடுத்துக்கொள்ளலாம்.

மிக மிக சிறப்பம்சம் என்னெவென்றால் இந்த மென்பொருளை மொபைல் வழியாகவும் பயன்படுத்தலாம்.

இப்படி ஏகப்பட்ட வசதிகள். ஒரு அசாதாரண இயங்கு தளத்திற்கு என்னென்ன தேவையா அவைகள் இடம்பெற்றிருக்கு இந்த மென்பொருளில்

என்னென்ன மென்பொருட்கள் இருக்கிறது என்ற விபரங்கள் கீழே
eyeos.org/

Monday, March 30, 2009

கான்பி(லி)க்கர் .சி வைரஸ்களை எப்படி சமாளிக்கலாம்?

வைரஸ் என்றாலும் கதி கலங்கும் நமக்கு மேலும் நடுங்க வைக்கும் அளவிற்கு கடந்த சில நாட்களாக ஒவ்வொரு செய்தித்தாள்களிலும், மீடியாக்களிலும் சாதாரண மனிதர்களை காட்டிலும் புகழ்ப்பெற்றுள்ளது கான்பி(லி)க்கர்.சி.
மனிதர்களை பருவ நிலை மாற்றத்தின் போது நோய்கள் தாக்குவது போல குறிப்பிட்ட கால இடைவெளிகளில் கணினிகளை தாக்கும் வைரஸ்களும் உருவாக்கப்பட்டுள்ளன.
அதில் ஒன்றுதான் இந்த கான்பி(லி)க்கர்
நாமெல்லாம் முட்டாள்கள் தினமன்று அனைவரையும் முட்டாள்களாக்க யோசித்துக்கொண்டிருக்கையில் நமது கணினிகளில் உள்ள விண்டோஸ் அடிப்படையிலான இயங்குதளங்களை குறிவைத்து தாக்கும்விதமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த வைரஸ். இதை வார்ம் என்று அழைக்கலாம்.

இதற்கு முன் வெளிவந்த கான்பி(லி)க்கர் வைரஸ் 1999-2001 காலக்கட்டங்களில் ஒரு கோடி கணினிகளை தாக்கி செயலிக்க வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது எவ்வாறு இயங்குகிறது?

நமது கணினிகளில் இருந்து மற்ற கணினிகளுக்கு தகவல்களை பரிமாற்ற உதவும் ப்ரோட்டோகால்களின் (SMTP, IRC Port) வழியே நமது தகவல்களை களவாடவும், இடைவிடாத தாக்குதல்களை மேற்கொண்டு கணினிகளை செயலிழக்க வைக்கும் DDOS என்ற முறையின் கீழ் இது செயல்படும் என்று கூறப்படுகிறது.

அதோடு இந்த கணினிகளில் இந்த வைரஸ்கள் உள்நுழைந்தால் இயங்குதளங்களில் உள்ள windowsupdate , windows security center, workstation) போன்ற சர்வீஸ்களை முடக்கிவிடுகின்றன. இதனால் நமது கணினியில் பாதுகாப்பும், இயங்கு தளங்களின் மேம்பட்ட பாதுகாப்பு நீட்சிகளை இயக்க முடியாமல் போய்விடுகின்றன. இதனை பயன்படுத்தி நமது கணினிகளை மேற்கொண்டு செயலிழக்க வைக்கவும் முடியும்.

இந்த வைரஸ்கள் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கணினிகளில் பாதுகாப்பு குறைவாக உள்ள கணினிகளை வெகுஎளிதில் தாக்கும்.



இதோ இது குறித்து ஒரு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை


http://mtc.sri.com/Conficker/addendumC/


சரி எப்படி தடுக்கலாம்?

இந்த வைரஸ்கள் இயங்குவது மைக்ரோசாப்ட் இயங்குதளங்களை குறிவைத்துத்தான். எனவே இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தளத்தில் பார்த்தபோது அங்கே அவர்கள் அளித்துள்ள செய்தி இன்னுமொரு பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், அப்படியென்ன அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் என்றால் இந்த கான்பி(லி)க்கர் வைரஸ்களை உருவாக்கியவர்களை கண்டுபிடித்து தருபவர்களுக்கு இரண்டரை லட்சம் டாலர்களை வழங்க உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.ஓன்றே கால் கோடி.

இந்த பணத்தை பல்வேறு நிறுவனங்கள் இணைந்து வழங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. (சொக்கா எனக்கில்ல, எனக்கு இல்லவே இல்ல)

மேலும் விபரங்களுக்கு

http://www.microsoft.com/Presspass/press/2009/feb09/02-12ConfickerPR.mspx

வழிமுறை 1

இதோ மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அப்டேட் பைல்
http://www.microsoft.com/technet/security/Bulletin/MS08-067.mspx


இதோ உங்கள் கணினிகளில் கான்பி(லி)க்கர் வைரசை நீக்கும் மென்பொருள்.
http://www.enigmasoftware.com/a1/download/cfremover.exe

வழிமுறை 2

உங்களது கணினிகளில் வெளியாட்கள் உள் நுழையாமல் தடுக்க மற்றும் உங்களது அனுமதியின்றி உங்கள் தகவல்கள் வெளியே செல்லாம் இருக்க தீச்சுவர் எனப்படும் பயர்வால்களை பயன்படுத்துங்கள். இதோ சிறந்த மற்றும் இலவசமான சோன் அலாரம் வழங்கும் இலவச பயர்வால் http://www.zonealarm.com/ இந்த தளத்திற்கு சென்று தரவிறக்கிக்கொள்ளுங்கள்.

மேலும்
உங்களது கணினியில் உள்ள automatic update என்ற மென்பொருளை இயக்கி விண்டோஸ் வழங்கும் அனைத்து அப்டேட்களையும் பெற்றுக்கொள்ளுங்கள்.
இந்த ஆட்டொமெட்டிக் அப்டேட்டினால் நீங்கள் உரிமம் அற்ற இயங்குதளங்களை பயன்படுத்தி மாட்டிக்கொண்டால் கவலையே வேண்டாம்.
கீழே இருக்கும் பைல்களை தரவிறக்கம் செய்து ஒரே பைலை இயக்குங்கள். உங்களது இயங்குதளங்கள் உரிமம் பெற்ற இயங்குதளமாக மாற்றப்பட்டுவிடும்.

இதோ உரிமம் பெற்ற இயங்தளமாக மாற்ற உதவும் பைல்கள்.

இந்த இணைப்பை கிளக்கினால் வரும் பைலை உங்களது கணினிக்கு தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

இயக்கும்வழிமுறைகள்:

1) மேற்க்கண்ட பைலை டவுன்லோடு செய்து எக்ஸ்ட்ராட் செய்துக்கொள்ளுங்கள்

2) உங்களது இயங்கு தளம் XPயாக இருந்தால் crackXP.bat என்ற பைலை ரன் செய்யுங்கள்.

3) உங்களது இயங்கு தளம் vista வாக இருந்தால் crackvista.bat என்ற பைலை ரன் செய்யுங்கள்.

ஒரு கிளிக்கில் மாற்றிடுங்கள் உங்களது இயங்கு தளங்களை ஒரிஜினல் பதிப்பாக

வழிமுறை : 3

மேலும் உங்களது கணினி என்னென்ன பணிகள் செய்துகொண்டிருக்கின்றன என்பதை அறிய http://www.whatsrunning.net/whatsrunning/main.aspx இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள்.
இந்த மென்பொருளில் தற்போது உங்கள் கணினிகளில் என்னென்ன பைல்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. எந்த கணினியுடன் எந்த போர்ட் வழியாக இணைப்பில் உள்ளது அதனோடு தொடர்புடைய அனைத்து dll பைல்களையும் காணலாம்.
உங்களுக்கு சந்தேகமாக உள்ள பைல்களை அங்கேயே நீக்கும் வசதியும் உள்ளது.
முதல்கட்டமாக இந்த மென்பொருளை இயக்கி process என்ற பகுதியில் கணினி செய்துகொண்டிருக்கும் பணிகள் குறித்த விபரங்களை அப்படியே கீபோர்டில் உள்ள Print Screen என்ற பட்டனை பயன்படுத்தி ஓர் படமாக சேமித்திடுங்கள். எப்போதேல்லாம் உங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கருதுகிறீர்களோ அப்போது இந்த படத்தை பார்த்து இப்போது என்னென்ன பணிகள் புதிதாக இயங்கிக்கொண்டிருக்கின்றன என்ற தகவல்களை காணுங்கள். சந்தேகமாக இருந்தால் stop process என்ற கட்டளையின் மூலம் அந்த சந்தேகமான மென்பொருளை அங்கேயே நிறுத்தலாம்.

இந்த மென்பொருளை எனக்கு அறிமுகப்படுத்திய http://muthamilmantram.com ற்கு நன்றி!!

கவனமுடன் பாதுகாத்திடுங்கள் உங்களது கணினிகளை .
அப்படியே அந்த வைரஸ்கள் வந்தாலும் நமது கணினிகளை தாக்கினாலும் நாம் முன்னேச்சரிக்கையாக இருந்தால் தடுத்திடாம்.
உங்களது சந்தேகங்களை தயங்காமல் கேளுங்கள்...........
என்றும் அன்புடன்
செல்வமுரளி



--
M.S.Murali
99430-94945
----------------------------
www.visualmediaa.com

Monday, March 23, 2009

தகர்க்கப்பட்ட தமிழ்வணிகம்.இன்.

இணையத்தில் வர்த்தகம் சார்ந்த தகவல்களை தமிழில் தரும் தமிழ்வணிகம்.இன்(http://www.tamilvanigam.in) இணைய தளம் ஹேக்கிங் கடந்த மாதம் ஹேக்கிங் செயயப்பட்டது. இது குறித்து தளத்தில் கூகுள் வழங்கும் அனலடிக்ஸ் மற்றும் இதர மென்பொருள் மூலம் யார் ,. யார் தளத்திற்குள் எங்கிருந்து வந்தார்கள் என்ற பார்த்துக்கொண்டிருந்தபோது ஒரு மொழி புரியாத தளம் ஒன்று இருந்தது. உடனடியாக ஓபன் செய்த பார்த்தபோது அந்த தளத்தின் மொழி எனக்கு சுத்தமாக புரியவில்லை. உடனடியாக கூகிள் ட்ரான்ஸ்லேட்டரின் உதவியை நாடியபோது விபரங்கள் ஆங்கிலத்தில் கிடைத்தது.
இதோ விபரங்கள்

அந்த தளத்தில் ஹேக்கர்கள் அனைவரும் ஒன்று கூடி அவர்கள் ஹேக் செய்த தளங்களை அங்கே பட்டியலிடுகிறார்கள். ஆனால் அவர்களின் மொழி துருக்கி. என்னடா இது வம்பு என்று நண்பர் ஒருவரிம் கேட்டபோது அவர்கள் சொல்லிய தகவல் இன்னமும் ஆச்சர்யப்படுகிறது.

ஆம் இணையத்தில் ப்ராக்ஸி சேவை வழங்கும் சில தளங்கள் இருக்கிறது. அதற்க்்கான மென்பொருட்களும் கிடைக்கின்றன.

அந்த ஹேக்கர்கள் அனைவரும் இந்த ப்ராக்சி வழியே உள்நுழைந்து வருகின்றனர். அதனால் அவர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என்ற தகவல்கள் கிடைப்பதில்லை. அதோடு அவர்கள் சீனர்கள் என்று காட்டு அவர்களை மாட்டிவிட்டு இவர்கள் தப்பிவிடுகிறார்கள்.

இதோ அவர்களுக்கும் தடைவிதிச்சாச்சு..
இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்

இதோ தமிழ்வணிகம் ஹேக் செய்யப்பட்ட போது தோன்றிய முகப்பு

இணைப்பை சொடுக்குங்கள்

இது குறித்து தேடியபோது மற்ற தளங்களையும் அவர்கள் தாக்கியது தெரியவந்தது.
உடனடியாக அனைத்து ப்ராக்சி மற்றும் தேவையற்ற நாடுகளின் வருகையை தடுத்திட்டபின்னர் தளம் நன்றாக இயங்குகிறது என்றாலும் பாதுகாப்புகள் இன்னமும் பலப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.எனவே தளங்கள் நடத்தும் நண்பர்கள் சற்று கவனமாக இருங்கள்.

ஆட்டோரன்- வைரஸ்களை நிறுத்துவது எப்படி?

ஆட்டோரன் வைரஸ்களை நிறுத்துவது எப்படி?

பொதுவா சிடி அல்லது டிவிடி ட்ரைவ்களை உங்கள் கணினியில் இட்டபின் தானாகவே ஒரு விண்டோ துவங்கி சிடி/டிவிடியில் உள்ள தகவல்கள் காட்டும். அதற்கு உதவுவதுதான் autonrun.inf .
ஆனால் நம் ஹேக்கர்கள் இதன்வழியே வைரஸ்களை இயங்கும்படி செய்துவிடுவார்கள். எப்படி?

ஒரு வைரஸ் இருக்கும் பென் ட்ரைவ் கணினியில் நுழைத்தவுடன் உங்கள் கணினியின் மவுசை கவனியுங்கள். அது கணினி இயங்கா நிலையில் இருந்தாலும் கணினி இயங்கு நிலையில் இருப்பது போல் processing simple காட்டும். அவ்வாறு காட்டினாலே வைரஸ்கள் உங்கள் கணினியில் விளையாட ஆரம்பித்துவிட்டன என்று அர்த்தம். நீங்கள் எவ்வளவு நல்ல ஆன்டி வைரஸ்கள் வைத்திருந்தாலும் அவற்றுக்கும் சேர்த்து ஆப்புத்தான்.
அந்த அளவுக்கு போட்டு வாட்டிவிடும்.
சரி இதிலிருந்து தப்பிக்க என்ன வழி.....

இதோ கீழ்க்கண்ட மென்பொருட்களை நிறுவிக்கொள்ளுங்கள். ப்ரச்னையிலிருந்து தப்பியுங்கள் முக்கால் வாசி அளவிற்கு. ஏனெனிலெ நாள்தோறும் தொழில்நுட்பங்கள் மாறும்போது இப்போதிருக்கும் பாதுகாப்புகளை தகர்த்தெறிந்துவிடுகிறார்கள்.

முதலில் கீழ்க்கண்ட பைல்களை உங்கள் கணினிக்கு தரவிறக்கம் செய்துகொண்டு அவற்றை piz என்ற நீட்சியுடன் இருப்பவற்றை .zip என்று மாற்றிக்கொள்ளுங்கள்.
பின் இவைகளை இயக்குங்கள்.
http://www.tamilvanigam.in/file/AutoRunGuard.piz

இந்த பைலானது நமது கணினியில் ஆட்டோரன் எந்த ட்ரைவில் இருந்தாலும் அவற்றை இயங்காமல் தடுத்து நிறுத்துவதோடு அனைத்து ட்ரைவ்களிலும் ஆட்டோரன் என்ற பைல் இயங்குவதை நிறுத்திவிடும். இதன் மூலம் ஆட்டோரன் மூலம் சிடி மற்றும் பென் ட்ரைவ்களில் உள்ள ஆட்டோரன் தானாக இயங்குவதை தடுத்து நிறுத்தலாம்.

http://www.tamilvanigam.in/file/CPE17AntiAutoruna.piz

இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் இயக்கினால் அந்த பைல் உங்கள் டாஸ்க் பாரில் இயக்கத்தில் உட்கார்ந்துகொள்ளும்.cpe17 Autorunkiller என்ற மென்பொருள் உங்கள் இயங்குதளத்தின் இயங்குநிலையில் உட்கார்ந்து கண்கொத்தி பாம்பாக உட்கார்ந்து பார்த்துக்கொண்டே இருக்கும். எங்காவது ஆட்டோரன் இயங்கினால் அந்த் தகவலை தெரிவித்துவிட்டு பிறகு அதை நிறுத்திவிடும்.
நீங்கள் உங்கள் கணினியில் பென் ட்ரை நுழைத்தவுடன் பச்சைக்கலரில் அறிவிப்பு வந்தால் அந்த பென் ட்ரைவில் எந்த ப்ரச்னையும் இல்லை. ஆனால் பென் ட்ரைவில் வைரஸ் இருந்தால் அந்த சிகப்பு கலரில் அறிவிப்பு வரும். அதோடு ஆட்டோரன் மூலம் இயங்கும் வைரஸ்களை வகைப்படுத்தி காட்டி அனைத்தையும் இயங்காமல் செய்துவிடும்.
அவ்வளவுதான் ப்ரச்னை மிக எளிதாக தீர்ந்தது.

ஆனால் இதை போட்டு எங்கள் கணினியை நாங்கள் நன்றாக வைத்திருந்தும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஏனெனில் நெட்வொர்க்கில் கலந்திருப்பதால் மற்ற கணினிகளிலிருந்து தாக்குதல் தொடர்ந்து நடைபெறும்.....

இந்த வைரஸ் ப்ரச்னையால் ஒரு இடத்தில் எனக்கு வேலை கிடைக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால் கடைசி கட்ட தேர்விற்கு செல்லமுடியதாதல் என்னை நிராகரித்துவிட்டனர். என்ன செய்ய... வைரஸ் கம்ப்யூட்டருக்கு வேட்டு வைக்குத்துன்னு பார்த்தா வேலைக்கே வேட்டு வைக்குதுங்க :)

உங்க பாஸ்வேர்டு பாதுகாப்பானதா?

உங்க பாஸ்வேர்டு பாதுகாப்பானதுன்னு நீங்க நினைக்ச்சிங்கன்னா
கீழே உள்ள வழிமுறைகளோடு ஒப்பிட்டு பாருங்க.
எல்லாம் சரின்னா நீங்க சரியான பாஸ்வேர்டுதான் பயன்படுத்தறிங்க.

அப்படி இல்லையா உடனே மாத்திடுங்க.
இல்லைன்னை உங்க பாஸ்வேர்டு களவாடப்பட நீங்களே வழி ஏற்படுத்திவிடாதிர்கள்.

உங்களின் பாஸ்வேர்டு குறைந்த பட்சம் 8 எழுத்துக்களாவது இருக்க வேண்டும்.
அந்த 8 எழுத்துக்களில் 1 சிறப்பு வார்த்தை (~,@,#,$,%,&,^) , ஒரு எண் (1,2,3), ஒரு பெரிய எழுத்து(A,B,C,D,E,F)க்களில் அமைய வேண்டும்

உதாணத்திற்கு ஒரு பாஸ்வேர்டை இங்கே தருகிறேன். p@ssW0rd

இதில் a வுக்கு பதிலாக @ என்ற வார்த்தையையும், o-விற்கு பதிலாக 0 வையும் பயன்படுத்தியிருக்கிறேன்.
அதோடு W என்ற எழுத்து பெரிய எழுத்து (Capital) உள்ளது.

மேலும் சில உதவிக்குறிப்புகள்:
உங்கள் பாஸ்வேர்டுகளில் எங்கெல்லாம் a வருகிறதோ அங்கெல்லாம் @ பயன்படுத்துங்கள்
எங்கெல்லாம் s வருகிறதோ அங்கெல்லாம் $ பயன்படுத்துங்கள்.
L எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் ! பயன்படுத்துங்கள்
o எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் 0 பயன்படுத்துங்கள்
i எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் 1 பயன்படுத்துங்கள்

மேற்கண்ட வழிமுறைகளில் உங்கள் பாஸ்வேர்டுகளை அமைத்து பாதுகாத்துக்கொள்ளுங்கள்.
குறைந்தது 3 மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றிவிடுங்கள் பாஸ்வேர்டுகளை

பாஸ்வேர்டு மறந்துவிட்டால்

குறிப்பாக security question ஐ மறக்காமல் நினைவில் வைத்திருங்கள்.
உங்கள் பாஸ்வேர்டு மறந்து மற்றும் தொலைத்துவிட்டால் security question கொண்டுதான் மீட்டெடுக்க வேண்டியிருக்கும்