#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Wednesday, November 30, 2011

தொழில்முனைவோர்களுக்கு வாய்ப்பு


[விளம்பரம் அல்ல]

விசுவல் மீடியா தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில்புதிய தொழில்முனைவோர்களுக்கு வணக்கங்களும், வாழ்த்துக்களும்.

உலகப்பொருளாதார மந்த நிலையில் சுயதொழில் புரிந்தால் மட்டுமே சற்றாவது  அந்த நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்று உலகப்பொருளாதார நிபுணர்கள் கூறிவருகின்றனர். எனவே அதில் எங்கள் விசுவல்மீடியா நிறுவனத்தின் சார்பில் சில பங்களிப்புகளை தொழில்முனைவோர்களுக்கும், புதிய தொழில்முனைவோர்களுக்கு உதவிட சில முன்னெடுப்பு  முயற்சிகளை செய்துவருகிறோம்.

இன்றைய சூழ்நிலையில் விசிட்டிங் கார்டு வைத்திருருப்பவர்கள் எல்லாம் இணையத்தளத்தினை வைத்திருக்கவேண்டிய கட்டாயம் ஒரு புறம் இருந்தாலும் உண்மையாகவே சில தொழில்முனைவொர்களுக்கு இணையத்தளம் என்பது எட்டாக்கனியாக இருக்கலாம். மேலும் வெப்சைட் பற்றி தெரியாத நபர்கள் அது பற்றி தெரியாமலும் இருக்கலாம். எனவே விசுவல்மீடியா தொழில்நுட்ப நிறுவனம் உண்மையாகவே வெப்சைட் தேவைப்படுபவர்களுக்கு இலவச இணையத்தள இடமும் தந்து, அந்த தளத்தினை இலவச மேலாண்மை செய்யவும் உதவ தயாராகிறது. 

இந்த சேவையில்

1 ஜிபி இடம் மற்றும் சிபேனல் கன்ட்ரோல் பேனல் உடன் 100 மின்னஞ்சல் முகவரியுடன் சேவை தரப்படுகிறது.

இந்த இலவச சேவையுடன்

250 மென்பொருள் அடங்கிய சேவையுள் உள்ளது. எனவே இதில் அவர்களுக்கு தேவையான 
பிராஜக்ட் மேனேஜ்மெண்ட், 
மின்னஞ்சல் மேலாண்மை, 
எச்ஆர் மேனேஜ்மெண்ட், 
இமேஜ் காலரி, 
ஆன்லைன் ஷாப்பிங், 
பாரம், 
சப்போர்ட

  என பல்வேறு துறைகளின் கீழ் உள்ள மென்பொருட்கள் இடம் பெற்றுள்ளன.

மேலும்  சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களைப் பெற்றி பிறருக்கு மார்க்கெட்டிங் செய்திட  இலவச எஸ்எம்எஸ் சேவையும் உடன் இமெயில் மார்க்கெட்டிங்கான வழிவகையும் செய்து தரப்படும்.

மேலும் அவர்களுக்கு தேவையான சட்டரீதியான ஆலோசனைகளும், கணக்காளர்கள் சேவையும் இணைந்து தரப்படும்.

நிபந்தனை

இணையத்தள இடம், மற்றும் அந்த தளத்திற்கான மேலாண்மை செய்யும் பணிகளை விசுவல் மீடியா நிறுவனம் முதல்வருடம் மட்டும் இலவசமாவேக சேவை தர தயாராக உள்ளது. இரண்டாவது வருடத்தில் இருந்து  சாதாரண கட்டணம்வசூலிக்கப்படும்.


புதிய தொழில்முனைவொர்களும், இணையத்தளம் இருந்தால் தங்கள் வியாபாரத்திற்கு இன்னமும் முன்னேற்றம் கிடைக்கும் என்பவர்களும், கிராமப்பொருட்களை இணையத்தில் விற்பனை செய்ய தயாராக உள்ளவர்களுக்கும், அரசாங்க துறைகளுக்கும் மேற்கண்ட சேவை வழங்கப்படும்.

ஏற்கனவே வெப்சைட் மற்றும் வெப்சைட் பெயர்கள் வாங்கியிருந்தால் அவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.புதியவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு.

இத்திட்டம் முழுதும் புதிய தொழில்முனைவோர்களுக்கு மட்டுமே

 உடனே கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு முழுவிபரங்களுடன் தாங்கள் செய்யவிருக்கும் தொழில் பற்றியும், இணையத்தளம் இருந்தால் அது அவர்களுக்கு எந்த வகையில் பயனளிக்கும் எனவும் தெரிவித்து  அவர்களுக்கான பேன் கார்டு எண்ணையும் மின்னஞ்சல் அனுப்புங்கள். உடனடியாக அவர்கள் கேட்டப்பெயரில் இலவச வெப்சைட் பெயரும், இணையத்தள இடமும் உருவாக்கித்தரப் படும்

இந்த வசதியை தவறாக பயன்படுத்தினால் எங்களது குழு இதைக்கண்டறிந்து அத்தளம் முடக்கப்படும். 

இந்தவசதி புத்தாண்டு முதல் செயல்படும். எனவே இதைப்பற்றிய கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.


நன்றி


---------------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Sunday, November 13, 2011

அணுக்கள் பற்றி தமிழில் காணப்படும் சேதிகள்


அணுவைப்பற்றி சங்க கால தகவல்கள் சொல்லும் சேதி

கம்பராமாயணத்தில் உள்ள யுத்தகாண்டத்தில் ராவணுனக்கு விபீசணன் ஆலோசனை சொல்கிறான். அப்போது அவர் ஹிரண்யகசிபுரை பற்றிச்சொல்லும்போது கீழ்க்கண்டவாறு சொல்கிறான்

உங்கள் உள்ளான் உன் இறைவன் ? என்று தன் மகனைப் பார்த்து சீறினான் ஹிரண்யகசிபு.
பிரகாலதன் பதில் கூறுகிறான்

 ' சாணிலும் உளன், ஒரு தன்மை அணுவினை சத கூறு இட்ட கோணிலும் உளன்" 

என்று அணுவுக்குள்ளே அணுவாக இருக்கிறான் என்று சொல்கிறான். இதில் குறிப்பிட்டத்தக்க சேதி ஒரு சிறு அணுவை எடுத்து அந்த அணுவிலே 100 பகுதியில் ஒன்றிற்கு கோண் எனப்பெயரும் வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.

மேலும் போர்களத்தில் இந்திரஜித் இறந்துகிடக்கும்போது அவன் தாய் மண்டோதரி அழுகிறார், தலை சிறந்த வீரனான உன்னை - இந்திரனையே வென்ற இந்திரஜீத் என்ற பெயர் பெற்ற உன்னை, கொன்று விட்டார்களே, அணு ஆயூதத்தை ஏவ, அது ஓடிவந்து வெடித்துச்சிதறி நாசத்தை உண்டாக்கியது போல் இருக்கிறது என்கிறாள். அந்த வரி

உக்கிட அணு ஒன்று ஓடி உதைத்தது போலும் அம்மா

ஆக அணுக்கள் அக்காலத்திலயே நம்முடைய ஆட்களுக்கு மிகச்சிறந்த அறிவு இருந்திருக்கிறது என்பதே உண்மை.
--------------------------------------------------------------------------------------------------------



ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Wednesday, November 9, 2011

SQL Interview - புதிய புத்தகத்தின் மதிப்புரை

அவசரமாக ரயிலில் செல்லவேண்டிய கட்டாயம். உடனடியாக ரிசர்வேசன் கவுன்டருக்கு செல்கிறோம்...பணம் கட்டுகிறோம். .. கணினி யில் பிரிண்ட்அவுட் எடுத்து தருகிறார்கள்..............
ஆனால் எத்தனை பேருக்கு தெரியும்... அங்கே என்ன நடக்கிறது என்று?

மிகப்பெரிய வங்கியில் தகவல் பரிமாற்றங்கள் தொடர்ந்து சேமிக்கப்பட்டுவருகின்றது. ஆனால் அதன் பின்புலத்தில் என்ன நடைபெறுகின்றது. கொஞ்சம் மாறினாலும் பணக்காரன் ஏழையாகலாம், ஏழை பணக்காரனாகலாம்....எப்படி தகவல்கள் சேமிக்கப்படுகின்றன.......

வானவெளிக்கு செயற்கை கோள்கள் செலுத்தப்பட்டு அவைகள் பற்பல தகவல்களை நம்மிடையே பரிமாற்றப்பட்டு சேமித்துவைக்கப்படுகின்றது. இப்படித்தான் முதன்முதலில் ஆம்ஸ்டராங் நிலவிற்கு போய் வந்த தகவல்களுடன் சமீபத்தில் நமது சந்திராயன் போய் திரட்டிய தகவல்கள் ஒப்பீட்டு அளவுகள் செய்யப்பட்டது.... இதன் பின் புலத்திலும் தகவல்கள் சேமிக்கப்படுகின்றன...

இப்படி சேமிக்கப்படும் தகவல்களுக்கு பெயர்தான் தரவுத்தளம்... (டேட்டாபேஸ்)
டேட்டம் என்ற சொல்லிருந்து டேட்டா என்ற வார்த்தையை கணினியில் நாம் பயன்படுத்திவருகிறோம்.

இந்த டேட்டாபேஸ்கள் தான்இன்று உலகில் ஒட்டுமொத்த நிர்வாகத்தை சீரும் சிறப்புமாக நடத்திக்கொண்டு வருபவை. மேலேக்கண்ட எல்லா விபரங்களையும் இந்த டேட்டாபேஸ்கள் தான் நிர்வகித்து வருகின்றன.
டேட்டாபேஸ் இல்லாத கணினி என்பது உப்பில்லா பண்டம் குப்பையிலே போன்றதுதான்... அந்த அளவிற்கு இந்த டேட்டாபேசின் பணி மிக முக்கியமானது

இவ்வளவு முக்கியத்தும் வாய்ந்த இந்த டேட்டாபேஸ் துறையில் இன்றும் வளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. ஆனால் இத்துறையில் உள்ள நிறுவனங்கள் சரியான ஆட்கள் எங்களுக்கு கிடைப்பதில்லை என்கிறார்கள். ஏன்? டேட்டாபேசை சொல்லித்தருகிறோம் என்று பொத்தாம்பொதுவாக சில கல்விநிறுவனங்கள் சொல்லித்தருகின்றன. அவைகள் எப்படி பயன்படுகின்றன, எப்படி பயன்படுத்தப்படுகின்றன என்ற அடிப்படை விபரங்கள் கூட அவர்களுக்கு சொல்லித்தருவதில்லை. அவர்களுக்கு அனுபவ அறிவு இருப்பினும் டேட்டாபேசை பற்றிய அடிப்படை அறிவு இல்லாமல் போகும்போது கிடைக்க கூடிய வேலை வாய்ப்பும் கைவிட்டு போய்விடுகிறது. 

இதற்காக சிலவெளிநாட்டு புத்தகங்களை வாங்கிப்படித்தால் அவர்களின் நடை புரிவதற்கு நமக்கும் சிக்கலாக இருக்கும்.
இதற்கெல்லாம்தீர்வாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் SQL துறையில் அனுபவம் வாய்ந்த பினல் தேவ் மற்றும் நம்ம ஊரு ஆள் வினோத்குமார் (மதுரை) ஆகிய இருவரும் இணைந்து எல்லா தரப்பினரும் புரிந்துகொள்ளும் வகையில் SQL Interview என்ற புத்தகத்தினை வெளியிட்டுள்ளனர்.

இப்புத்தகத்தில் டேட்டாபேசின் அடிப்படை கட்டமைப்பு முதற்கொண்டு சமீபத்திய வரவான டேட்டாவேர்ஹவுஸ் வரை விளக்கியும் , இன்டர்வியூக்களில் கேட்கப்படும் கேள்விகளுக்கும் அவர்களே சிறப்பான முறையில் பதிலையும் அளித்திருக்கிறார்கள்.

என்னடா மைக்ரோசாப்ட் நபர்கள் மைக்ரோசாப்ட் SQL மட்டுமே எழுதியிருப்பார்கள் என்று நினைக்கவேண்டாம். எல்லா தரப்பு மென்பொருள் உற்பத்தியாளர்களுக்கும் சேர்த்தே எழுதியிருக்கிறார்கள்....மேலும் புதியநபர்கள் SQL பழகிக்கொள்ள சில மாதிரிகளை விளக்கத்துடன் எழுதியே இணைத்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் சிறப்பான புத்தகம்.SQL துறையில் வேலை தேடுபவர்களுக்கும், இத்துறையில் வேலை வாய்ப்பு பெறவிரும்புவர்களும் முக்கியமாக படிக்கவேண்டி ஒரு புத்தம் இது.

 கிடைக்குமிடம் அமேசான் மற்றும் பிலிப்ஆர்ட்

அமேசானில் சற்று விலை அதிகம் , FLIpkart ல் வாங்கலாம்...











ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Tuesday, September 27, 2011

மொபைல் வழியாக கிரகங்களுடன் வாக்கிங் போகலாம் வாங்க--


கூகிள் ஸ்கை மேப் ஆன்டிராய்டின் அருமையான மென்பொருள்


விண்வெளி துறையில் ஆர்வமுள்ளவர்களும், விண்வெளி துறையில்மில்லாதவர்கள் ஆர்வம் ஏற்படுத்திக்கொள்ளவும் உதவும் மென்பொருள் கூகிள் ஸ்கை மேப்.

அட அப்படியென்ன அதிசயம் என்கிறீர்களா?

உங்கள் மொபைலில் இருந்தபடி இந்நேரத்தில் சூரியன் கிரகம் எங்கே இருக்கும், சந்திரன் கிரகம் எங்கே இருக்கும்,  மேலும் சூரிய கிரகணத்தின் போது போது சூரியன், சந்திரன்  எங்கே உள்ளது  போன்ற எல்லா விபரங்களையும் உங்கள் மொபைல் வழியாக காணலாம்  நிகழ்நேரத்தில்....

சில நேரங்களில் பகலில் சில நட்சத்திரம் தெரியும். அந்த நட்சத்திரம் எந்த நட்சத்திரம் என்பதையும் நீங்கள் அறிந்துகொள்ளலாம்.

எப்படி சாத்தியம்...

நம்முடைய ஆன்டிராய்டு மொபைல்களில் உள்ளிணைந்த வசதியாக உள்ள ஜிபிஎஸ் கருவி துணைக்கொண்டு நம்முடைய பூகோள இருப்பிடத்தை அறிந்து அதைக்கணக்கில் கொண்டு அந்நேரத்தில் எந்தெந்த கிரங்கள் எங்கே உள்ளது என்பதை செயற்கை கோள்கள் உதவியுடன் காட்டுகிறது நம்முடைய ஆன்டிராய்டு மொபைல்.

வானத்தில் திடீரென ஒரு நட்சத்திரம் பிரகாசமாக தெரிகிறதா? உடனே ஆன்டிராய்டில் உள்ள மென்பொருளை ஆன் பண்ணுங்க... உங்களுக்கு அதியசம் தெரியும்.. ஏன்னா அது சில கிரகமாக கூட இருக்கலாம். அந்த கிரகத்து பெயர்  கூட இம்மென்பொருளில் தெரிஞ்சிடலாம் இல்லையா?

வாங்க சூரிய குடும்பத்துடன் நாம வாக்கிங் கூட போகலாம்...... :)

பிளாக்பெர்ரி, நோக்கியா, ஐபோன் என எல்லா மொபைல்களுக்கும் மென்பொருள் சேவை இருக்கிறது


https://market.android.com/details?id=com.google.android.stardroid&feature=search_result







-------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Friday, September 9, 2011

வாங்க பழகலாம்!!, வெப்ஹோஸ்டிங் - 4!!

வணக்கம் நண்பர்களே!!

மீண்டும் நான்காம் பாகத்தில்உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.....
இதுவரை வெப்சர்வர்கள், டிஎன்எஸ் சர்வர்கள், இணையம், பேண்ட்வித் என்றால் என்ன என்பது பற்றி பார்த்தோம்!!

இதுக்கு முன்னாடி நாம பார்த்தது Domain name system எனப்படும் வெப்சைட் பெயர்கள். அதைப்பற்றி விரிவாக பார்ப்போமா?

DNS பற்றி நிறைய பார்த்தோம். இந்த DNS எப்படி முழுமையாக இயங்குகிறது என்று பார்ப்போமா?

DNS பற்றி படிக்காதவர்கள் இங்கே இருந்து படிக்கலாம்...http://itnewshot.blogspot.com/2011/08/2.html

இந்த DNS முழுமையாக இயங்க கீழ்க்கண்ட பதிவுகள் அவற்றிற்கு முக்கியமாக தேவை.


A - பதிவு

இந்த A பதிவானது DNS ன் முக்கியமான அங்கம். அதாவது ஒரு இணையதளத்தின் பெயரை கொடுத்து உலாவும்போது அந்த இணையதளத்தின் ஆவணங்கள் எல்லாம் ஒரு சர்வரில் பதிந்து வைக்கப்பட்டுள்ளது. அந்த சர்வரின் IP முகவரியை இந்த A பதிவானது கொண்டிருக்கும். 

உதாரணத்திற்கு www.tamilvanigam.com என்று கொடுத்தவுடன் நம் DNS சர்வரானது tamilvanigam.com ல் உள்ள DNS பதிவுகளை படிக்கிறது. அதில் A பதிவில் உள்ள 75.126.38.186 என்ற சர்வர் ஐபி முகவரியை பார்க்கிறது. பின் அந்த முகவரியை தொடர்புகொளளும்போது அங்கே உள்ள டிஎன்எஸ் ஆனது இந்த தளம் இந்த சர்வரில் இந்த பயனருக்கான இடத்தில் இந்த போல்டரில்(கோப்புக்குள்) (உதாரணம்: http://75.126.38.186/tamilva/public_html)  வைக்கப்பட்டுள்ளது. 

இந்த 75.126.38.186 என்ற ஐபி முகவரியானது ஒரு  IPV4 முகவரியை கொண்டுள்ளது. இந்த IPV4 வரிசை எண்கள் எல்லாம் முடிந்துவிட்டதால் தற்போது IPV6 முறைமைக்கு மாறியிருக்கிறார்கள். அந்த ஐபி முகவரி 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334 இப்படி வரும். 


ஐபி பற்றி அறிந்துகொள்ள கீழ்க்கண்ட பதிவை காணவும்
http://itnewshot.blogspot.com/search/label/%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF4


AAAA - பதிவு

இந்த பதிவானது  A பதிவை போலத்தான். அவைகள் 12 டிஜிட்களுக்கு(32bit) மட்டுமே இடமளிக்கும். ஆனால் IPV6 முறைக்கு மாறியிருக்கிறார்கள். அந்த ஐபி முகவரி 2001:0db8:85a3:0000:0000:8a2e:0370:7334 இப்படி வரும்.  128 bit என்ற அளவில் இருக்கும்.

CName - Canonical name record

 என்பதேன் சுருக்கமே இந்த சிநேம்.

இந்த சிநேம் வலைபதிவர்கள் எல்லாம் அறிவார்கள். ஏனெனில் www.test.blogspot.com என்பதினை .www.test.com என்ற பெயருக்கு மாற்றம் செய்வதை நாம் அனைவரும் அறிவோம். இப்படி ஒரு இணையதள பெயரை சுருக்கியோ அல்லது ஒரு சர்வரில் இருந்து இன்னொரு சர்வருக்கோ  அதே சர்வரில் உள்ள வேறு இடத்திற்கோ மாற்றம் செய்து தருவதுதான் இந்த சிநேம். நுட்பரீதியாக நிறைய பயனளிக்க கூடியது.


MX     - Mail Exchanger Record (MX record) 

இது நம் நிறுவன பெயர்களிலோ அல்லது வேறு நிறுவனத்தின் மின்னஞ்சல் சேவைகளை பயன்படுத்துவர்களுக்கு தெரியும். நம் மின்னஞ்சல் முகவரிகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் சர்வர்கள் எங்கே இருக்கின்றன என்பதினை கொண்டிருக்கும் விபரம்தான் இந்த mx 


SOA  - Specifies authoritative information

 என்பதன் சுருக்கமே இந்த SOA
இதன் முக்கியபணி நம் வழங்கியின் பெயர் விபரம் மற்றும் அந்த வழங்கியின் தள மேலாளர் முகவரி அடங்கிய விபரம் இருக்கும்.

அடுத்த பாகத்தில் வெப் சர்வர்கள் பற்றி பார்ப்போம்!!

வெப்சைட்தொடர்பான உங்கள் கேள்விகளையும் நீங்கள் தாரளமாக கேட்கலாம்...
நன்றி!



-----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

Thursday, September 1, 2011

திருக்கோயில் | கோயில்களுக்கான இலவச வலைத்தளம்!


வணக்கம் நண்பர்களே!!
விசுவல் மீடியா குழுமத்தின் சார்பில் வெளியிடப்படும் அடுத்த வெளியீடு. திருக்கோயில்.காம்

இத்தளத்தின் முக்கிய பயனே.. உலகெங்கும் உள்ள கோயில்களின் தகவல்களை ஒரே இடத்தில் திரட்டுவதே.....
-----------------------------------------------------------------------------------------------------------------
திருக்கோயில் தளத்திற்கும் வரும் வாசகர்கள் யாவருக்கும் எங்கள் கனிவான வணக்கமும் வரவேற்புகளும்….
நோக்கம்
இத்தளத்தின் முக்கியமான நோக்கம் பெருகிவரும் இணையப்பயன்பாட்டில் எல்லா துறையினரும் இணையத்தின் பயன்பாடுகளில் நேரடியாக பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் ஆன்மீகம் சார்ந்த தகவல்களும், கோயில்களின் தகவல்களும் கிடைக்கப்பெறாமல் இருக்கும் நிலையை மாற்றி உலகமெங்கும் உள்ள திருக்கோயில்களை திரட்டி அவைகளுக்கு தனி வலைதளத்தினை உருவாக்கிடவே இத்தளம்
பயன்
இத்தளத்தில் எல்லா கோயில்களின் தகவல்களை இணைப்பதன் வழியாக இணையத்தில் பரிகார கோயில்கள், நட்சத்திர கோயில்கள், கோவில்களின் சிறப்பம்சங்கள், வரலாற்றுத்தகவல்கள் என அக்கோயில் பற்றி தகவல்களையும், படங்களையும், காணொளி யையும் இணைக்கும் வசதியையும் ஏற்படுத்தியுள்ளோம்.
வாசர்களின் பணி

உங்களுக்கு தெரிந்த எல்லா கோயில்களுக்கும் தனி வலைப்பூவை உருவாக்கிக்கொள்ளலாம். இது போன்ற ஒரு சேவைதான்.

வணிகப்பயன்பாடா?
இத்தளம் நிச்சயம் வணிகப்பயன்பாட்டுக்காக இருக்காது. மாறாக இத்தளத்தின் மேலாண்மை மற்றும் இணைய வழங்கிக்கு ஏற்படும் செலவுகளை ஈடுகட்ட இரண்டு விளம்பரங்கள் மட்டுமே இணைக்கப்படும்.
வாருங்கள்!! ஒன்றிணையுங்கள்!!

உலகத்திருக்கோயில்களின் தகவல் களஞ்சியத்தினை தொகுப்போம்

----------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------

தொடுவானம்- இந்திய மின்னாளுமை திட்டங்களின் முன்னோடி


வான்வெளியில் உள்ள செயற்கை கோள்களை மேலாண்மை செய்திட, பெரிய நிறுவனங்களில் உற்பத்தி பணியில் இயந்திரங்களை மேலாண்மை செய்திட , 
சேவை நிறுவனங்களில் மேலாண்மை செய்திட, இரு சக்கர வாகனங்கள் முதற்கொண்டு எல்லாவற்றிலும் கணினிகள் நுழையாத இடமில்லை. இவ்வளவு ஏன் சச்சின் டெண்டுல்கரை வீழ்த்த கூட தனியாக வியூகம் வகுக்க கூட கணினிகள் நுழைந்துவிட்டன. ஆனால் மக்களுக்கு சேவை செய்யவே தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்தில் மட்டும் இன்னமும் முழுமையாக கணினிகள் நுழையாமல் இருப்பது மிகப்பெரிய ஆச்சர்யமே.....

ஆனால் அந்தக்குறையும் தற்போது நிவர்த்தியாகிவிட்டது... மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் முயற்சியால்  அரசாங்க இயந்திரங்கள் வேகமாக இயங்க கணினி நுட்பம் பயன்படுத்தி மக்களின் குறைகளை களையவும், அலுவலர்களின் பணிச்சுமையை குறைக்கவும் கொண்டுவரப்பட்டதுதான் தொடுவானம்

ஆம் ,  உயர்திரு.மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் மதுரை மாவட்ட மக்களுக்காக கிராமங்களில்இருந்தபடியே மனுக்களை நேரடியாக ஆட்சியருக்கு அனுப்பும் தொடுவானம் என்ற திட்டத்தினையும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடுதிரை வழியாக குறைகளை சொல்லும் திட்டத்தினையும் அமல்படுத்தியுள்ளார்.

இத் தொடுவானம் திட்டம் இந்திய மின்னாளுமை திட்டத்தின் முன்னோடி என்று தாரளமாக சொல்லலாம். அட அப்படியென்ன வசதிகள் இத்திட்டத்தில் என்கிறீர்களா? இதோ பார்ப்போம்... 

எல்லாஇடங்களிலும் கணினி பயன்படுத்துகிறோம். ஆனால் அரசாங்க இயந்திரங்களில்  கணினியை பயன்படுத்துவதால் என்ன நன்மை?

இதோ மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்திரு.சகாயம்  அவர்கள் சொல்கிறார்..

ஏதோ ஒரு காரணத்திற்காக ஒரு மனு கொடுக்க ஆட்சியரை சந்திக்க வரும் ஒரு விவசாயி அந்த ஒரு நாளிற்காக அவன் வேலையை விட்டுவிட்டு காசு செலவு செய்துகொண்டு தன் கூலியை இழந்து வந்து  சந்திக்கிறான்,  அது தேவையா? அவர்கள் இருக்குமிடத்திலயே மனுக்களை அளிக்கும் வசதியை ஏற்படுத்திவிட்டால் அவர்கள் வேலை இழக்கவேண்டிய அவசியம் இல்லையே.... ஊதியத்தினை இழக்கவேண்டியதில்லையே.....

என்ற அவரின் எண்ணத்தில் எழுந்த திட்டம் படிப்படியாக தமிழ்உலகம் அறக்கட்டளை சார்பாக திரு. ஆல்பர்ட் பெர்னான்டோ அவர்கள் முன்னெடுப்பில் தகடூர் கோபி அவர்களின் தலைமையில் தொடுவானம் http://www.thoduvanam.com திட்டம் முதற்கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டது. 

இத்தொடுவானம் திட்டம் வழியாக இணையம் வழியாக நேரடியாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்களையும்/ஆலோசனைகளையும் அனுப்பலாம். மேலும் மாவட்ட ஆட்சியருடன் நேரடியாக காணொளி வழியாக கலந்துரையாடலாம். இதனால் யாரும் அவரவர்கள் பணியை விட்டுவிட்டு வர வேண்டிய அவசியம் இல்லையே. ஏனெனில் கிராமங்களுக்கு 5 தன்னார்வலர்களை எடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்து  அவர்கள் வழியாக அக்கிராமத்தில் உள்ள மக்கள் தங்கள் குறைகளை தொடுவானம் இணைய தளம் வழியாக மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிவிடுவார்கள். பின் மாவட்ட ஆட்சியர் இதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி உடனுக்குடன் தீர்வு காண அனுப்பிவைப்பார். 

நேரடி  காணொளி வசதி

அதே தளத்தில் நேரடியாக ஆட்சியர் அவர்களுடனும், அதிகாரிகளுடனும் பேசி தங்கள் குறைகளையும் கூறலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அரசாங்ககள் முழுமையாக பயன்படுத்தினால் கிராமங்களும் முன்னேறும். நகரங்கள் மேலும் வலுப்பெறும்..



தொடுதிரை

இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஒவ்வொரு திங்கள் கிழமையும் நடைபெறும் மனுநீதிநாளில் வரும் பல்லாயிரக்கணக்கானோர்களை சந்தித்து குறைகள் தீர்ப்பதும்் மிகப்பெரிய பணிதான். அதையும் குறைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடுதிரை(டச் ஸ்கிரின்) மூலமாகவும் குறைகள் அனுப்பலாம்.  இந்த தொடுதிரையில் அவர்கள் பெயர்களை மட்டும் கொடுத்தாலே மற்ற மனு சார்ந்த விபரங்கள் தேர்ந்தெடுத்தாலே போதும்.


அதே தளத்தில் நேரடியாக ஆட்சியர் அவர்களுடனம், அதிகாரிகளுடனும் பேசி தங்கள் குறைகளையும் கூறலாம். தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அரசாங்ககள் முழுமையாக பயன்படுத்தினால் கிராமங்களும் முன்னேறும். நகரங்கள் மேலும் வலுப்பெறும்..

இதைவிட முக்கியம். நேரடியாக பேப்பர் பயன்பாடு என்பதும் அது தொலைந்துவிட்டது போன்ற சிக்கல்களும் இங்கே கிடையாது.


மிகப்பெரிய அதிசயம் !!


மாற்றுத்திறனாளிகளும் நேரடியாக தொடுவானம் தளத்தில் மனுக்களை பதியும் முறைக்காக கரூரை சேர்ந்த  முனைவர். திரு.சரவணன் அவர்கள் 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு  பயிற்சி அளித்தார். 



ஆனால் இதை முன்னெடுத்து செல்வது யார் என்ற கேள்விக்கு முதற்கட்டமாக மதுரைமாவட்ட ஆட்சியர் திரு.சகாயம் அவர்கள் முன்னெடுப்பு செய்துவிட்டார். இதை எல்லா மாவட்டங்களிலும் பயன்படுத்தினால் எல்லா மக்களும் பயனடைவார்கள்.... நடக்கும் என்று நம்புவோமாக...

தொழில்நுட்பம் குழுவினர்:லதானந்த், பேராசிரியர் சரவணன், துரை மணிகண்டன், நாகமணி,  தேனி சுப்ரமணியன், சுலைமான், , ராமசாமி,, திருப்பதி, மாயவரத்தான்,  திருநாவுக்கரசு, , கவிதாயினி மதுமிதா, ‘சங்கமம்’ விஜய்,  கவிஞர் துரை.ந.உ, பஜ்ரங்கபதி, ப்ரித்பால்சிங் , செல்வ.முரளி


 இணையத்தில் நிறைய தமிழ் குழுமங்கள் இருந்தாலும் சில குழுமங்கள் மட்டுமே  சமூகம் பயன்பெறும் திட்டங்களை இணையம் வழியாக செயல்படுத்த பெரும்முயற்சிகள் செய்துவருகின்றன. இதைப்போல் இன்னமும் நிறைய குழுமங்கள் இதைப்போல் சமூக பயன்பாட்டிற்கு தேவையானவற்றை செய்யவேண்டும்.

படங்கள்: சங்கமம் விஜய்
----------------------------------------------------------------------------------------------
ஒரு ரூபாயில் வெப்சைட் வேண்டுமா? உடனே தொடர்புகொள்ளுங்கள் WWW.RUPEESHOST.COM --------------------------------------------------------