#navlist ul { margin-left: 0; padding-left: 0; white-space: nowrap; } #navlist li { display: inline; list-style-type: none; } #navlist a { padding: 3px 10px; } #navlist a:link, #navlist a:visited { color: #fff; background-color: #036; text-decoration: none; } #navlist a:hover { color: #fff; background-color: #369; text-decoration: none; }

Tuesday, April 6, 2010

சைபர் கிரைம் கவனிக்குமா?

அலிபாபா.காம் இணையதளம் வணிக உலகில் மிக முக்கியமான இணையதளம். புதிதாக வளர்ந்து வருபவர்களுக்கும், பொருட்களை விற்க உதவுவதற்கும் இது மிகவும் உதவுகிறது.
இந்த இணைய தளத்தில் சும்மா உலாவிக்கொண்டிருந்தபோது இதோ அங்கே நித்தியானந்தர் பெயரில் ஒரு ப்ரா விற்பதாகவும் அது தமிழ்நாடு அரசாங்கம் அனுமதியுடன் விற்பதாகவும் தொடர்புக்கு உள்ள முகவரியில் சன்டிவி.காம் என்ற பெயரும் இருக்கிறது. மேலும் இதில் உள்ள படங்கள் அனைத்தும் xxx படங்களாகவே இருக்கிறது.  ஒரு பிரபல இணையதளத்தில்  நம்மூர் முதல்வர் படத்தை போட்டுவிட்டு உள்ளே xxx படங்களை
வைத்திருக்கிறார்கள்.
இதை அரசாங்கம் கவனிக்குமா அல்லது சைபர் க்ரைம்தான் கவனிக்குமா?
http://www.alibaba.com/product-free/109524409/ladys_bra.html
http://www.alibaba.com/member/in110083454/contactinfo.html






உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------

Thursday, January 28, 2010

அடுத்த கட்ட தொழில்நுட்ப ஆபத்து : பாட்நெட்ஸ்


Botnet.svg
பாட்நெட்ஸ் என்றால் என்ன என்பதை அறிந்துகொள்வதற்கு முன்னால் சில அடிப்படை தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
தேடல்தளம்
பாட்ஸ்
ரோபாட்ஸ்
அதென்ன தேடல் தளம்.

இதோ இன்று கூகிளாண்டவர் என்று அனைவராலும் அழைக்கப்படும் கூகிள் தேடல் இயந்திரமும் ஒரு தேடல்தளம்.
தேடல்தளத்தில் பல துறைகள் உள்ளன. பொதுவான தேடல், துறை தேடல், தேடல்களுக்கெல்லாம் தேடல் என்று பல துறைகள் உள்ளன. (இது பற்றி பின்னர் எழுதுகிறேன்)

சரி தேடல் தளம் என்றால்என்ன என்று பார்த்தோம். இப்ப தேடல்தளங்கள் நாம் தேடியவுடன் எப்படி தகவல்களை தருகின்றது... அதுவும் வேறு வெப்சைட் ல் இருக்கும் தகவல்களை இது திரட்டி தருகின்றது.....

அங்கே உதவுவதுதான்

பாட்ஸ்


    பாட்ஸ் என்பது இன்று பரவலாக பயன்படுத்தப்படும் /இணையத்தின் மதிப்புமிக்க சொத்து எனலாம். ஆமாம் ஏனெனில் நமது வலைத்தளமோ அல்லது இணையதளமோ தேடல் தளங்களில் தேடியவுடன் வருவதற்கு ஆவண செய்வது இந்த பாட்தான்.
இதன் முக்கிய வேலை நமது தளத்தில் உள்ள இதர இணையத்தளங்களில் உள்ள தகவல்களை தேடல்தளங்களின் டேட்டாபேஸ்களுக்கு மிகச்சிதமாக கொண்டுபோய் சேர்ப்பது இந்த பாட்ஸ்தான்

இங்கே முக்கிய கேள்வி. நமது தளத்தில் உள்ள தகவல்களை தேடல் தளத்தில் கொண்டு போகின்றனவே என்று அது பாதுகாப்பானதா என்று கேட்கலாம்.
இந்த இடத்தில் நமக்கு உதவுவதுதான்

ரோபாட்ஸ்

நமது தளத்தில் ரோபாடிக்ஸ் என்ற பெயரில் ஒரு ஆவணம் இருக்கும். அதனுள்  நமது தளத்தில்  அந்த பாட்கள் எங்கெல்லாம் தகவல்களை திரட்டலாம் என்று கொடுத்தால் போதும்.

இந்த பாட் ஆனது எந்த தளத்தில் தகவல்களை சேகரிக்க சென்றாலும் முதலில் இந்த ரோபாடிக்ஸ் ஆவணத்தை படிக்கும். அதனுள் எங்கெல்லாம் தகவல்களை திரட்டலாம் என்று நாம் அனுமதி அளித்த இடத்தில் பாட் ஆனது தகவல்களை திரட்ட ஆரம்பிக்கும்.
இதுதானுங்க தேடல் தளம் தேடும் மற்றும் வேலை செய்யும் விதம்
சரி இப்ப பாட்நெட்ஸ் என்றால் என்னன்னு பார்க்கலாமா?

பாட்நெட்ஸ் என்பது  கூட்டுக்களவாணிகளின் கூடுதுறை

பாட்நெட்ஸ் என்பது ஆன்லைன் மோசடி வேலைகள் பலவற்றைச் செய்வதற்கென்றெ சைபர் கிரிமினல் கும்பல் ஒன்று தங்கள் வசம் வைத்திருக்கும் கணினிகளின் தொகுதியாகும். இதன் வழியாக நம்மை அறியாமலேயே நமது கணினிகளை இந்த பாட்நெட் களவாணிகள் அவர்கள் வேலைக்காக பயன்படுத்திக்கொள்வார்கள்.

அது எப்படி சாத்தியம் அங்கே பயன்படுத்துவதுதான் இந்த பாட்ஸ்கள்.
ஹேக்கர்கள் அவர்களுக்கென ஒரு தனி பாட்ஸ் மென்பொருட்களை உருவாக்கி பயன்படுத்திவருகிறார்கள். முன்பே சொன்னதுபோல் பாட்ஸ் என்பது நமது தளத்தில் உள்ள தகவல்களை திரட்டும் அமைப்பு என்பது.  ஆனால் இந்த பாட்ஸ் ஆனது ரோபாட்டிக்ஸ் பைல்களில் இருப்பதை தாண்டியும் தேடும். அவர்கள் பயன்படுத்தும்போது நம்மையறியாமல் நமது தகவல்கள் அவர்களுக்கு சென்றுவிடும். அதேபோல் பிரவுசிங் செய்யும்போது பாட்ஸ் உங்கள் கணினிகளில் நீங்கள் அறியாமலேயே இன்ஸ்டால் ஆகிவிடும்.


பின் இந்த பாட்கள் வழியாக உங்கள் கணினியை அந்த கிரிமினல் கும்பல் தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விடும். அதாவது சி&சி சர்வர் என்று அழைக்கப்படும் கமாண்ட் அண்ட் கன்ட்ரோல் சர்வர் மூலம்  உங்களை கட்டுப்படுத்தத் துவங்கும்.


இதனால் அடையாள திருட்டு, போலி வணிக மின்னஞ்சல்கள், மாபெரும் மோசடி சமாச்சாரங்கள், இன்னபிறவற்றை உங்கள் கணினி மூலம் நடத்தி தங்கள் பாக்கெட்டுகளை பெருமளவு பணத்தால் நிரப்பும் இந்த கும்பல் தற்போது அனைத்து விதமான தொழில்நுட்ப வசதிகளையும்  பெற்றிருக்கிறது. சமீபத்தில் பூமியின் துறை அறியும் சோதனை நடைபெறும் குழும நெட்வொர்க்கில் இணைய வழங்கியை ஹேக் செய்திருக்கிறார்கள்.


சென்ற வருடம் மத்தியில் கான்பிலிக்கர் என்ற வைரஸ் பெரிய அளவில் தாக்கக்கூடும் என்று கணினி வல்லுநர்கள் தெரிவித்திருக்கின்றனர்..
ஆமாம் உண்மையில் அந்த கான்பிலிக்கர் வைரசில்  கிட்டத்தட்ட  10,000,000+ இதன் பின் தொடர்ச்சியாக ஒன்பது பூச்சியங்களை சேர்த்துக்கொள்ளுங்கள். அத்துணை பாட்ஸ்களை அவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள். இதன் வழியாக ஒரு நாளைக்கு 10பில்லியன் தாக்குதல்களை கணினிகள் மீது தாக்கலாம். இதன் தொடர்ச்சியான தாக்குதல்களால் வலுவான கணினிகளும் மெதுவாக இயங்கும். வலுவிலந்த கணினிகள் அதோகதிதான்.


பெரும்பாலும் பிரவுசர் மூலமே பாட்நெட்ஸ் கணினிகளுக்குள் ஊடுருவுகிறது. இதுதான் கணினியில் வைரஸ் உள்ளிட்ட பிற கிரிமினல் நடவடிக்கை சக்திகள் ஊடுருவ 60 சதவீத வழியாக உள்ளது. இமெயில் அட்டாச்மென்ட்கள் மூலம் 13 சதவீதமும், ஆபரேட்டிங் சிஸ்டம் மூலம் 11 சதவீதமும், டவுன்லோடு செய்யப்பட்ட இன்டெர்னெட் ஃபைல்கள் மூலம் 9 சதவீதமும் பாட்னெட்ஸ் ஊடுருவுகிறது.


எனவே இதை தடுக்கும் விதமாக முதலில் உங்களது கணினிகளை முறையாக அனுமதி பெற்று பயன்படுத்துங்கள்.
பின் ஆண்டிவைரஸ் மற்றும் பயர்வால் மென்பொருட்களை அவ்வப்போது நிறுவுங்கள்.

உங்கள் கணினியின் இணைய இணைப்பு ஆமை வேகத்தில் உள்ளதா?, பிரவுசரின் விசித்திரமான செயல்பாடுகள், உதாரணமாக உங்கள் முகப்புப் பக்கம் அடிக்கடி மாறுகிறதா? புதிய விண்டோக்கள் திறக்கிறதா? உங்கள் கணினியின் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதா? தானகவே ஆஃப் ஆகி தானாகவே ஸ்டார்ட் ஆகிறதா? பாட்நெட்ஸ் உங்கள் கணினியில் உட்கார்ந்துள்ளதன் அறிகுறிகள் இவை.

அடுத்த கட்ட தொழில்நுட்ப ஆபத்து நம் அருகில் இருக்கிறது.










உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------

Thursday, January 21, 2010

சிக்கலில் ஐபி4 முகவரி .......


பெருகிவரும் இணைய பயன்பாட்டில் 10%  குறைவான முகவரியே கையிருப்பு.

முதலில் ஐபி4 பற்றி தெரியாதவர்களுக்கு  : பிணையத்திலும், இணையத்திலும் பயன்படுத்தும் கணினிகளை எளிதில் அடையாளம் கண்டுகொள்ள ஒவ்வொரு கணினிக்கும் முகவரியாக ஒரு எண்ணைஐ கொடுப்பார்கள். அந்த எண்ணின் வடிவம்தான் ஐபி4.

Sunday, January 10, 2010

பாதுகாப்பான இணையதள பயன்பாட்டிற்கு..... ஓபன் டிஎன்எஸ்

வெளிநாடுகளில் வசித்தாலும் நம்மூரில் நம்ம வீட்டு கணினியின் இணையத்தையும்ல இணையதளங்களையும் வெகு எளிதாக மேலாண்மை செய்யலாம் . முக்கியமாக நமது குழந்தைகள் இதர தளத்திற்கு செல்லவிடாமல் தடுக்கலாம். அப்படியே குழந்தைகள் தடுக்கப்பட்ட தளங்களைப் பார்த்தாலும் அது உங்களுக்கு மடல் அனுப்பிவிடும்.

அனுமதி பெற்ற  தகவல்களை பார்க்கும்  மட்டும் பார்க்கும்  நுட்பத்துடன் கவர்ச்சி விளம்பரங்கள், மால்வேர், பிஷ்ஷிங், கணினி தாக்குதல்கள், மற்றும் பாட்நெட் ஹேக்கர்களிடம்  இருந்து பாதுகாப்பை உங்கள் கணினிக்கு அளிக்கிறது.


முக்கியமா இணையதளங்களை கண்டறியும் வேகம் அதிகரிக்கும்.
 


அட அப்படி என்னங் மென்பொருள் னு கேட்கறிங்களா? அதுதான்

 ஓபன் டிஎன்எஸ்.

     அட அப்படியான்னு ஆச்சர்யப்படாதிங்க.... ஓபன்டிஎன்எஸ்  என்ன ன்னு பார்க்கிறதுக்கு முன்னாடி சில அடிப்படை விஷயங்களை நாம தெரிஞ்சுக்கணும்.
     Domain Name System என்பது கணினிகள், சேவைகள், அல்லது இணையம் அல்லது ஒரு தனியார் வலையமிப்பில் இணைப்புற்றிருக்கும் எந்த வள ஆதாரங்களுக்கும் வரிசைக்கிரமமாய் பெயரிடும் முறைமையாகும். பங்கேற்கும் உறுப்புகள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கப்படும் Domain பெயர்களுடன் இது பல்வேறு தகவல்களை தொடர்புபடுத்துகிறது.

     குறிப்பாக நமக்கு பொருள்புரிவதாக இருக்கும் களப் பெயர்களை, இவை இணைய உலகளாவிய வகையில் அடையாளம் காணும் வலையமைப்பு சாதனங்களுக்கு புரிகிற எண் அடையாளங்களாக இது மொழிபெயர்க்கிறது. மனிதருக்கு எளிதான கணினி வன்பொருகளை இணைய முகவரிகளாக மொழிபெயர்ப்ப்பது இதன் பணி. எ.கா www.tamilvanigam.com என்பது 174.37.210.240 என்கிற எண்ணாக மொழிபெயர்க்கப்படுகிறது. 
Opendns Setting


அடிப்படை பற்றி தெரிந்துகொண்டீர்கள்.

    இனி பாதுகாப்பு பற்றி பார்க்கலாம். வீட்டிலும், அலுவலகத்திலும் , இணைய தள சென்டர்களிலும் இணையத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு இணையதள பாதுகாப்பு என்பது கேள்விக்குறிதான்.
ஒரு வீட்டில் குழந்தைகளை விளையாட்டு மற்றும் எக்ஸ் தளங்களுக்கு  தளங்களிற்கு செல்லாத வகையில் தடை செய்ய முயன்று அதற்கான தனி மென்பொருட்களை பணம் கட்டியும் பயன்படுத்துவோம். சில நேரங்களில் அந்த மென்பொருள்  நாம் செல்லவேண்டிய இணைய தளங்களையும் தடுத்து நிறுத்திவிடும்.
        இணையத்தை பாதுகாப்பான முறையிலும் அதே சமயத்தில் தடுக்கப்பட்ட இணைய தளங்களை யராவது பார்க்க முயற்சித்தாலும் உடனே நம்முடைய முகவரிக்கு மின்னஞ்சல் வந்துவிடும்இந்த ஓபன்டிஎன்எஸ்.
   இந்த ஓபன்டிஎன்எஸ் மென்பொருளை எளிதாக எல்லா இடத்திலும்  பயன்படுத்தலாம்.வீட்டுக்கணினி, அலுவலக கணினி போய் பெரிய நிறுவனங்களில் திசைவி(ரவுட்டர்)க்களில்  பயன்படுத்தி ஒட்டுமொத்த நெட்வொர்க்களையும் பாதுகாப்பாக பயன்படுத்தலாம்  இந்த ஓபன் டிஎன்எஸ்சை  தனியாளர் கணிப்பொறிகளில் ஆரம்பித்து எல்லாரும் பயன்படுத்தலாம். பாதுகாப்பாக இருக்கலாம்.
இந்த ஓபன்டிஎன்எஸ் ஐ பயன்படுத்துவதால் என்ன லாபம்?
மிக முக்கியமாக இந்த ஓபன் டிஎன்எஸ் சில தேவையில்லாத தளங்களை முடக்குவதும், மேலாண்மை செய்வதும் வெகு எளிது.  அதோடு ஸ்பாம் தளங்களையும் வெகு எளிதாக முடக்கிவிடும்.
சிறப்பம்சங்கள் : கன்டென்ட பில்டரிங் எனும் தேர்வு வசதியும் உண்டு. இதன் வழியாக ஒரு செய்தியில் ஆபாச செய்திகள் இருந்தால் அவற்றையும்  முடக்கிவிடும். அதேபோல் இந்த ஓபன்டிஎன்எஸ் தளத்தில் கன்டென்ட் பில்டரிங் வசதியில் 5 தேர்வுகள் உண்டு.
அதாவது High என்ற தேர்வில் பாதுகாப்பு பலமாக இருக்கும். குறிப்பிட்ட இணைய தளங்களை தவிர வேறு எந்த தளத்திற்கும் செல்ல இயலாது. சாட், விவாதகளம், கேம்ஸ்,  சமூக இணையதளங்கள், கேம்ப்ளிங், ஆல்கஹால்,  இப்படி 27 வகையான தளங்களில் உள்ளே நுழைய முடியாது.
அடுத்து உள்ள Modurate, , Low, None, , என்று படிப்படியாக தேவையான அளவு பாதுகாப்புகளை அளித்துவருகின்றன.
இதில் முக்கியமாக custom என்ற இடத்தில் நமக்கு ஏற்றவாறு எந்த அடிப்படையிலான தளங்களை தடுக்கவேண்டும் என்ற கொடுத்துவிட்டால் போதும்.
அட இவ்வளவு பாதுகாப்பு நிறைய விஷயத்தை எப்படி பயன்படுத்தறதுன்னு நீங்க கேட்கலாம்.
இதோ அதற்க்கான வழிமுறைகள்
https://www.opendns.com/dashboard/create
இந்த தளத்திற்கு போய் உடனே ஒரு கணக்கு துவங்கிடுங்க.....
துவங்கியவுடனே உஙகளுக்கான கட்டுப்பாட்டகம் திறக்கப்படும். அதில் உங்களுக்கான டிஎன்எஸ் சர்வர்க ஐபி எண்களை அவர்கள் உங்களுக்கு தருவார்கள். அதை உங்களது கணினியில் கீழ்க்கண்ட இடத்தில் கொடுத்தால் போதும்.உங்களது கணக்கு துவக்கப்பட்டவுடன் அவர்கள் ஒரு மென்பொருளை அளிப்பார்கள். அது உங்களது கணிப்பொறியில் அமர்ந்துகொண்டு நாம் செல்லும் இணைய தளங்களை கண்காணிக்கும். தேவையற்றவை என்று நாம் குறிப்பிட்டிருக்கும் செய்திகளை உடனடியாக நிறுத்திவிடும்.

Phishing Site Blocked





.






உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------

Friday, December 18, 2009

ட்விட்டரும் ஹேக் செய்யப்பட்டது.



சமுக இணைய தளங்களில் அதிவேகமாக வளர்ந்துவரும் ட்விட்டர் இணைய தளம் சில நாட்களுக்கு முன்பு ஹேக் செய்யப்பட்டது.

ஹேக்செய்யப்பட்ட பின்பு தோன்றிய தள முகப்பில் இத்தளத்தினை இரானியர்கள் இராணுவத்தின் சைபர் பிரிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அதோடு அரபு மொழியில்  "இணையத்தை அமெரிக்காத்தான் நிர்வகித்து வருவதாக நினைத்துக்கொண்டிருக்கிறது.
ஆனால் எங்கள் சக்தியை பயன்படுத்தி நாங்களும் இணையத்தை கட்டுபடுத்துவோம் என்றும் தெரிவித்துள்ளனர்."  இதோ அந்த அரபுவார்த்தைகள்ஆங்கிலத்தில்
Iranian Cyber Army
THIS SITE HAS BEEN HACKED BY IRANIAN CYBER ARMY
iRANiAN.CYBER.ARMY@GMAIL.COM

U.S.A. Think They Controlling And Managing Internet
By Their Access, But THey Don't, We Control And Manage Internet By Our Power, So Do Not Try To Stimulation Iranian Peoples To .

NOW WHICH COUNTRY IN EMBARGO LIST? IRAN? USA?
WE PUSH THEM IN EMBARGO LIST
Take Care."
----
சமீப காலமாக ட்விட்டர் தளம் மீது தாக்குதல்கள் அதிகமாக நடைப்பெற்று வருகின்றன.
எனவே ட்விட்டர் பயனாளர்கள் அனைவரும் தங்களது பாஸ்வேர்டுகளை உடனே மாற்றிவிடவும். அது சாலச்சிறந்தது.


மேலும் எல்லா மின்னஞ்சல் பயன்பாடுகளுக்கும் பயன்படுத்தும் பாஸ்வேர்டுகளை ட்விட்டர் உட்பட எந்த சமுக இணையதளத்திலும் பயன்படுத்தாதீர்கள்.

நன்றி



-----------------------------------------------------------------------------------------------------
உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க
WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------

Thursday, December 10, 2009

ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்!

ஜிமெயில் மின்னஞ்சல் தரவிறக்கம்!

கூகிள்
சாப்ட்வேர் உலகின் மன்னாக விளங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தினை எதிர்க்கொண்டு போட்டியும் தைரியமிக்க நிறுவனம்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எல்லாவித மென்பொருளுக்கும் போட்டியான ஒரு மென்பொருளை முழுதும் இலவசமாக வெளியிட்டுவருவது வரவேற்கத்க்க ஒன்று.
ஆனால் கடந்த சில மாதங்களாக அதன் கூகிள் சர்வரில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அதன் வாடிக்கையாளர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. கடந்த 3 மாதங்களில் கிட்டத்தட்ட 10 தடவைக்கும் மேல் இயங்காமல் இருந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
இந்த தடங்கள் இலவச வாடிக்கையாளர்களுக்கு  மட்டுமல்லாமல் அதன் கூகிள் ஆப்ஸ் எனப்படும் கட்டண சேவையும் முடங்கியது.
இந்நிலையில் ஜிமெயில் வழங்கியில் ஏற்படும் தடங்கள்களால்  நம்முடைய அதிமுக்கியமான தகவல்களையும், இதர விபரங்களையும் நாம் எங்கிருந்துஎப்படி பெறுவது என்பது யோசிக்க வேண்டிய விஷயம். இம்மாதிரி நேரங்களில் வணிக ரீதியாக மின்னஞ்சல்களை பயன்படுத்துபவர்கள் உட்ப அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பு ஏற்படும். இக்குறையை போக்க ஜிமெயில் கணக்கில் உள்ள எல்லா மின்னஞ்சல்களையும் பாதுகாக்கிறது இந்த மென்பொருள் ஜிமெயில் பேக் அப் என்ற பெயருடைய இந்த மென்பொருள் வழியாக  நம்முடைய ஜிமெயில் மின்னஞ்சல்களை பாதுகாப்பது எளிது.


எப்படி முதலில் கீழ்க்கண்ட தளத்தில் இருந்து இம்மென்பொருளை தரவிறக்கிகொள்ளுங்கள்.
http://www.gmail-backup.com/download

உங்கள் ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து settings -ல் உள்ள IMAP ஐ இயல்பு நிலைக்கு மாற்றிவேண்டும்.

மாற்றிபியன் ஜிமெயில் பேக்-அப் மென்பொருளை துவக்கவேண்டும். அவ்வாறு துவக்கியவுடன் கீழ்க்கண்ட மாதிரி பக்கம் துவக்கப்படும்.


அதில் ஜிமெயில் லாகின் என்ற இடத்தில் நமது முழு ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை தந்திடவேண்டும்.
பின் கடவுச்சொல்லை தந்துவிட்டு நம்முடைய ஜிமெயில் மின்னஞ்சல்கள் நமது வன்தட்டில் எந்த இடத்தில் சேமிக்கப்படவேண்டும் என்று  தேர்வு செய்ய வேண்டும்.
பின் :எந்த நாளில் இருந்து எந்த நாள் வரை வந்த மின்னஞ்சல்கள் நமக்கு வேண்டும் என்பதினை since Date, before Date என்ற இடத்தில் தரவேண்டும்.
பிறகென்ன BackUp என்று தந்துவிட்டால் போதும். உங்களின் இணைய வேகத்தை பொறுத்து எல்லா தகவல்களையும் நமது வன்தட்டிற்கு காப்பி செய்யப்பட்டு விடும்.

எனவே இச்சேவையை பயன்படுத்தி கூகிள் மென்பொருள் இணையதளம் இயங்காத நேரத்திலும் நமது மின்னஞ்சல்களை பார்வையிடலாம்.

கூகிள்  நிறுவனத்தின் சேவைகளில் ஏதேனும் காரணங்களால் தடைப்பட்டுள்ளதா என்று பார்க்க கீழ்க்கண்ட முகவரியை சொடுக்குங்கள்.
http://www.google.com/appsstatus#hl=en




உங்கள் கணினி ப்ரச்னைகளுக்கு நாங்கள்வழங்குகிறோம் இலவச தீர்வுகள். உடனேவாங்க WWW.TECHNET24X7.COM
--------------------------------------------------------

Sunday, November 8, 2009

விண்டோஸ் 7 - ஒரு பார்வை

சமீபத்தில் கோவையில் விண்டோஸ் 7 வெளியீட்டு விழா நடைப்பெற்றது. அதில் அடியேனும் பார்வையாளனாக கலந்துகொண்டேன்.

விஸ்டாவின் தோல்வியை மறைப்பதற்கு மைக்ரோசாப்ட் மேற்கொண்டிருக்கும் ப்ரத்யோக வெளியீடு. விஸ்டாவிற்கும் இதற்கும் அதிகப்பட்ச வேறுபாடு மிக குறைவான மெமரியை பயன்படுத்துவதுதான்.

இன்னமும் வேறு என்ன விசேஷங்கள் விண்டோஸ் 7-ல்

மைக்ரோசாப்ட் நிறுவனங்களின் வெளியீடு க்கு எப்போதும் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உண்டு. அதுவும் சில நேரங்களில் பல்வேறு மென்பொருள் உருவாக்கும் நிறுவனங்களுக்கு வயிற்றில் புளியை கரைத்துவிடும். ஏனெனில் அந்த நிறுவனத்தின் பயன்பாடுகளுக்கு ஏற்றவாறு அவர்களே ஒரு ப்ராடக்ட் உருவாக்கிவிடுவார்கள்.
உதாரணத்திற்கு
விண்டோஸ் விர்ச்சுவல் பிசி, விர்ச்சுவல் சர்வர் - விஎம்வேர் மென்பொருளுக்கு பதிலாக
விண்டோஸ் சிஸ்டம் சென்டர் : ஐபிஎம். எச்பி நிறுவனங்களின் மேலாண்மை பொருளுக்கு
இப்படி அடுக்கிககொண்டே போகலாம்.
ஆனால் இப்படி அவர்கள் உருவாக்கிக்கொணடே வந்தாலும் புதியவனற்றை உருவாக்குவதே இல்லை. ஏற்கனவே வெளிவந்துள்ளவை போன்று உருவாக்கி அதைவிட மேம்படுத்தி தருகிறார்கள். அதாவது சில நிறுவனங்கள் சாப்பிட கற்றுக்கொடுத்தால் இவர்கள் வாயில் ஊட்டிவிட்டுவிடுகிறார்கள்.

சரி.. விண்டோஸ் 7-ன் சிறப்பம்சம் என்ன....
இதை தற்போது வெளிவந்துள்ள உபுண்டுவின் புதிய வெளியீட்டுடன் ஒப்பிட்டும் ஒரு பார்வை
புதிய சக்தி
விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008 போன்ற மென்பொருட்கள் வெளியீட்டில் அவர்கள் கொண்டுவந்துள்ள தாரகமந்திரம் புதிய சக்தி. அதற்கு அவர்கள் சொல்லும் கதை. ஆரம்ப கால குண்டுபல்பு அதிக மின்சாரத்தை எடுத்தது. ஆனால் இப்போதுள்ள சிஎல்அப் லைட்கள் மிக குறைவான மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதுதான்.
அதேபோல் பழைய மென்பொருட்கள் விட மிக அதிகமான வேகத்தில் குறைந்த மின்சார செலவுடன் வேலையை எளிதில் முடித்துவிடும் தொகுப்பு விண்டோஸ் 7 என்கிறார்கள்.

பிட்லாக்கர்

மேலும் வன்பொருட்களுடன் இணைந்து தகவல் பாதுகாப்பிற்காக பிட்லாக்கர் மென்பொருளை உள்ளிணைத்திருக்கிறார்கள். இதை தகவல் பாதுகாப்பிற்காக பல்வேறு வடிவங்களில் பயன்படுத்தலாம்.

ஆப்ஸ்லாக்கர் : எந்தெந்த மென்பொருட்கள் இயங்கவேண்டும் என்று இந்த பயன்பாட்டில் கொடுத்துவிட்டால் போதுமானது. அந்த குறிப்பிட்ட மென்பொருட்கள் மட்டுமே இயங்கும்.

மேம்படுத்தப்பட்ட தேடல் :
உணமையில் இந்த தேடல் நல்ல அருமையான தேடல். முந்தைய பயன்பாடுகளில் தேடல் என்றால் குறிப்பிட்ட தேடல்களை மட்டும்தான் தேடும். ஆனால் இது அப்படியல்ல.. இணையத்தில் நாம் எப்படி தேடுவோமோ அதே மாதிரி தேடலாம். அதாவது add hardware, add printer, change printer , இப்படி பல முறைகளில் தேடும் வசதி நன்றாகவே இருக்கின்றது.

கிராபிக்ஸ்
விண்டோஸ் விஸ்டாவின் முழு பயனையும் அனுபவிக்க வேண்டுமென்றால் கிராபிக்ஸ் பிராசசர்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விண்டோஸ் 7-ல் அப்படி ஏதும் இல்லை. மேலும் பின் என்ற முறையின் வழியே அடுககிவைக்கப்பட்டிருக்கும் பயன்பாடுகளை காணலாம். இப்படி எல்லாமே வண்ணமுறையில் வளமாக இருக்கின்றது.
மேலும் நாம் கணினயில் துவங்கியுள்ள பயன்பாடுகளை டாஸ்க்பார் லைவ் என்ற முறையின் வழியே சிறிய அளவி்ல் முன்பார்வை பார்க்கும் வசதியும் அளித்திருக்கிறார்கள்.

வீட்டுகுழுமம்
நாம் கணினியை பல்வேறு இடங்களில் பயன்படுத்துவதோடு மட்டுமல்லால் வீட்டிலும் பயன்படுத்தலாம். இதற்கு யுசர் நேரம், பாஸ்வேர்டு போன்ற விபரங்கள் தர தேவையி்ல்லை. நாம் தேர்ந்தெடுத்தவை மட்டும் ஷேர் செய்தால் போதும்.

அதோடு அலுவலகத்தில் தனி பிரிண்டர், வீட்டு உபயோகத்திற்கு தனி பிரிண்டர் என்று வைத்திருப்போம். அவைகளை வீட்டு கணினியில் இணைத்துவிட்டால் வீட்டீல் உபயோகப்படுத்தப்படும் பிரிண்டரை தானாகவே தன்னியல்பாக எடுத்துச்செல்லும் முறைகளை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

ஸ்ட்ரீமிங் வீடியோ

இது ஒரு படி மேல்.
அதாவது நமது மடிக்கணினியில் ஸ்பிக்கர் இல்லை எனும்போது வீட்டு உபயோக கணினியில் வீடியோ வை தரவிறக்காமல் நேரடியாக மடிக்கணினியில் இருந்து வீட்டு கணினியில் இயங்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் முறையையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.

பாதுகாப்பு
இதுவும் ஒரு நல்ல பயன்பாடு
எப்படி?
அதாவது நாம் குறிப்பிட்ட ஒரு ஆவணத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். திடீரென்று அது செயலிழந்துவிட்டது. பதறவே வேண்டாம். அந்த பைலின் மேல் வலது கிளிக் செய்து ரீஸ்டோர் -ல் சென்று பார்த்தால் 5 நிமிஷத்துக்கு முந்தைய கோப்பு, 10 நிமிடம், அரை மணி நேரம் என்று பல்வேறு வகையில் தரவுகளை தானாகவே சேமித்து வைத்துக்கொள்கிறார்கள். எனவே எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்
அது குறிப்பிட்ட ஆவணத்திற்கு மட்டுமல்ல , கோப்புக்களுக்கும் உண்டு.

அதேபோல் கோஸ்ட் பேக்அப் போல் இங்கேயும் பேக்முறை உண்டு. சிஸ்டம் பைல்கள் மட்டுமே இமேஜ் பேக் அப் எடுக்கலாம்,
அல்லது தேவையான கோப்புகளையும் இங்கே கொடுத்துவிடலாம். இப்படி கொடுத்துவிட்டால் போதுமானது . ப்ரச்னையான நேரத்தின்போது நாமே சிஸ்டத்தை பேக்அப் செய்துகொள்ளலாம்.

டிப்ளாய்மெண்ட் டுுல் கிட்
ஒரே நேரத்தில் பல்வேறு கணினிகளில் விண்டோஸ் 7 ஐ நிறுவிடலாம் வெகு எளிதாக.

குருப் பாலிசி :

இதுவும் கணினி மேலாண்மைக்காக கருவிதான். ஆக மொத்தம் விண்டோஸ் விஸ்டாவில் இருந்து குறையை சரிகட்டி உருவாக்கியிருக்கும் இம்மென்பொருள் விற்பனை மிக நன்றாகவே இருக்கிறது என்று சொல்கிறார்கள்.

மேம்படுத்தல்
விணடோஸ் எக்ஸ்பி, விஸ்டா போன்ற இயங்குதளங்களில் இருந்து விண்டோஸ் 7 க்கு மாற்றம் செய்திட யுசர் மைகிரேசன் கருவியும் இருக்கின்றது.
இன்னமும் பல்வேறு வசதிகள் இப்பயன்பாட்டில் வெளிவந்திருக்கின்றன.

விலையும் வழக்கும்போல அதிகமாகத்தான் இருக்கும் என்றாலும் விஸ்டாவினை விட சற்று குறைவாகத்தான் இருக்கிறது.

எல்லாத்தையும் சொல்லிட்டு இத சொல்லைன்னா எப்படி?
விண்டோஸ் மென்பொருட்கள் எல்லாவற்றிருக்கும் அதன் வெளியீடு வந்த அனறே லாக் ஐ திறக்க சாவி வந்துவிடும். இதற்கும் வெளியிட்ட அன்றே வந்துவிட்டது. என்ன செய்ய, மென்பொருட்கள் இப்படித்தான் பரவலாயிட்டு இருக்கு.

மொத்தத்தில் 1 ஜிபி ராமும், 16 ஜிபி ஹார்ட் டிஸ்க்கும் இருக்கிறவங்களுக்கு விண்டோஸ் 7 கொண்டாட்டம்

காசு கொடுத்தி பயன்படுத்தினா விண்டோசுக்கு போங்க இல்லைன்னா லினக்சுக்கு வந்திடுங்க
உபுண்டு லினக்சை தரவிறக்கிட்டு பயன்படுத்தி பார்த்துட்டு சொல்றேன்...